சிக்கல் - நாகை





	


	



























	




 




	








 




9:24:49 AM         Monday, April 20, 2026

சிக்கல் - நாகை

சிக்கல் - நாகை
சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை சிக்கல் - நாகை
Product Code: சிக்கல் - நாகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                சிக்கல், சிங்காரவேலர் கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதேசுவரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ மேற்கேயும் அமைந்துள்ளது.

மூலவர் : நவநீதேஸ்வரர், வெண்ணைப்பிராண்

அம்மன் : சக்தியாயதாட்சி, வேல்நெடுங்கண்ணி

தலவிருட்சம் : மல்லிகை

தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரிணிபாற்குளம்

பாடியோர் : அருணகிரிநாதர்

தலச் சிறப்புகள் : சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.

முருகனை தொழப்போய் மூவரையும் வணங்கினேன்’’ என்பார்கள். ஆனால், இங்கோ மிக அரிதாக சிவன், சக்தி, நாராயணன், அனுமார், கணபதி என்று ஐந்து கடவுள்கள் புடைசூழ அருள் பாலிக்கிறார். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக அம்மனிடமிருந்து வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும், அதை சஷ்டி காலத்தில் பார்க்கலாம், பட்டுத்துணியால் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக்கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். வசந்தமண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்காரவேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவையைக்காணக் கண்கோடி வேண்டும்.

கோவில் அமைப்பு: கோச்செங்கட்சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. கோவிலின் ராஜகோபுரம் சுமார்  80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. கல்வெட்டு இத்தலத்து இறைவனை "பால்வெண்ணெய்நாயனார்" என்று குறிப்பிடுகிறது. இராஜகோபுரத்திறக்கு முன்னால் இரும்புத்தூண்கள் தாங்கும் ஒரு பெரிய கல்யாணமண்டபம் இருக்கிறது. கோபுரவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கார்த்திகை மண்டபம் இருக்கிறது. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தரகணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்லவேண்டும் என்பது வழக்கம். கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலைமேல் படிகள் ஏறினால் முன்னதாக, சோமாஸ்கந்தரான ஸ்ரீதியாகேசரின் அற்புதத்தரிசனம். மூலவர் நவநீதேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் அருள்புரியும் சந்நிதியும், கட்டுமலையின் கீழ்பக்கம் வலப்பக்கத்தில் அம்பாள் வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி மற்றும் பள்ளியறையும் உள்ளன. ஐப்பசி மாதவிழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர் தான். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப்பெருமான் ஒரே அமைப்பு மூர்த்திகள் இவைகள் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது. வடமேற்கு மூலையில் ஆஞ்சநேயருக்கு தனிசன்னதி உள்ளது. உள்வாயில் ஒருபுறம், ஸ்ரீவிநாயகர்; இன்னொரு புறத்தில் ஸ்ரீதண்டபாணி, உள்பிராகாரம். இங்கே தான் கொடிமரம் உள்ளது. ஸ்ரீவிநாயகர் மற்றும் அறுபத்து மூவர் மற்றும் சனீஸ்வரன் காட்சியளிக்கின்றனர், கருவறைச் சுவரில் வசிட்டரும் அவருடைய சீடர்களும் காமதேனுவும் வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது. 

மேற்குச்சுற்றில், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும் ஸ்ரீகார்த்திகை விநாயகர் காட்சியளிக்கின்றனர். அடுத்து,  ஸ்ரீஆறுமுகருக்கான தனிக்கோயில் காட்சி தரும் அழகு சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சந்நிதி. வடமேற்கு மூலையில், ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி. வடக்குச்சுற்றில், ஸ்ரீபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. மல்லிகை தான் இங்கே தலவிருக்ஷம் என்றார்கள். ஒரு காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடமாம். ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையான கோயில். வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம்.

வடக்குத் திருச்சுற்றில், பெருமாளுக்கான தனிக்கோயில். ஸ்ரீகோலவாமனப் பெருமாள் என்பது திருநாமம். ஒருமுறை தேவர்கள், அசுரகுலத்தை சேர்ந்த மகாபலிசக்கரவர்த்தியால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பெருமாளிடம் முறையிட்டனர். இதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து சிவனை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இத்தல பெருமாள் “கோலவாமனப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீகோமளவல்லித்தாயார் அவருக்கு எதிரே அனுமனும் காட்சியளிக்கிறார்.

பெருமாள் தனிச் சந்நிதி கொண்டு கோலவாமனப் பெருமாள் என்ற பெயரில் காணப்படுகிறார். இம்மாதிரியாக ஈசனும், திருமாலும் ஒரே கூரையின் கீழ் குடிகொண்டு அருள் பாலிக்கும் கோயில்களில்சிக்கல் மிக முக்கியமான ஒன்று. பிரகார சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.. வாமன அவதாரம் எடுத்தபோது பெருமாள் இந்தத் தலம் வந்து ஈசனை வழிபட்டு மஹாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாய்க் கூறப்படுகிறது. இங்கே திருமாலைத் தவிர, விஸ்வாமித்திரர் பெண்ணிடம் சபலம் கொண்டு இழந்த தவவலிமையைத் திரும்பப் பெற்றிருக்கிறார் எனச் சொல்கின்றனர். மேலும் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பிரம்மஹத்தி தோஷமும், இங்கே தான் நீங்கியது எனச் சொல்கின்றனர். அகத்தியரும் வந்து வழிபட்டதாய்க் கூறுகின்றனர். இந்தத் தலத்தில் ஈசன் மட்டுமில்லாமல், முருகன், திருமால், அநுமன் என நால்வருமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை இங்கேதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனச் சொல்லப் படுகிறது. அம்மனின் சக்தியே வேலாக மாறி முருகனுக்குக் கொடுக்கப் பட்டதால் இந்த அர்ச்சனையை இங்கே சஷ்டி விழா நடக்கும்போது மிகவும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அன்னைக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. சக்தி பீடங்களில் இதுவும் மிக முக்கியமானதாய்ச் சொல்லப் படுகிறது. முருகனுக்கு வேல் வழங்கும் முன் அன்னை தவமிருந்ததாகவும், கூறுகின்றணர்.

தல வரலாறு : முற்காலத்தில் இது மல்லிகை வனமாக இருந்ததால் காமதேனு குடி கொண்டிருந்ததாக ஐதீகம். புலால் உண்டதால் சிவனால் காமதேனு சபிக்கப்பட்டார். தன் தவற்றை உணர்ந்து இங்குள்ள பாற்குளத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டதால் சாபவிமோசனம் அடைந்ததது. சோழவள நாட்டில் இயற்கையில் மலைகள் கிடையாது. செயற்கையாக அமைக்கப்பட்ட மலைக் கோயிலான இந்தத் தலம், அறுபடை வீடுகளுக்கு இணையானதாகப் போற்றப்படுகிறது. வலப்புறம் சிவனாகிய ‘நவநீதேஸ்வரர்’, இடப்புறம் பார்வதிதேவியான ‘வேல் நெடுங்கண்ணி’ இப்படி அம்மை அப்பனுக்கு இடையில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிங்காரவேலரின் பார்வை பட்டாலே மலையளவு சிக்கல்களும் பனி போல மாயமாகி விடும்.

ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகனால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள் முருகனிடம் மன்றாட, முருகனும் சூரனை வதம் செய்ய சம்மதித்தார். சூரன் சிவனிடம் அழியா வரம் பெற்றதால், அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி இந்தத் தலத்தில் அம்மை அப்பன் முன் தவமிருந்தார் முருகன். இறுதியில் மகனின் தவத்தை மெச்சிய பார்வதிதேவி, சக்தி மிக்க வேலை வழங்க, அந்த வேலுடன் திருச்செந்தூர் சென்று சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அன்று முதல் சிங்காரவேலன் ஆனார்.

ஈசனைத் தினமும் வழிபட்டு வந்தாராம் வசிஷ்டர். அப்போது காமதேனு ஒரு சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்து இந்தத் தலத்திற்கு வந்தது. இங்கே இருந்த தீர்த்தத்தில் நீராடியது. நீராடும்போது காமதேனு பாலைச் சொரிய, அந்தப் பால் பெருகிக் குளமே பாற்குளமாக மாறியது. க்ஷீரபுஷ்கரணி என அழைக்கின்றனர். பெருகி வந்த பாலில் இருந்து உருண்டு, திரண்டு வந்த வெண்ணெயை எடுத்து வசிஷ்டர் சிவலிங்கமாக்கி வழிபட்டார். வழிபாடு முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை எடுக்க முனைந்தார். அது அவரால் முடியாமல் வெண்ணெய் லிங்கம் அவர் கையிலேயே சிக்கிக் கொண்டது. சிக்கிக்கொண்ட இடமாதலால் சிக்கல் எனப் பெயர் பெற்றது என்று சொல்கின்றனர். ஈசனின் திருமேனி வெண்ணெய்த் திருமேனி என்றும் நவநீதேஸ்வரர், திருவெண்ணெய்நாதர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு முன், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டியன்று சக்தியிடம் முருகன் வேல் வாங்கும் காட்சி, ‘சக்தி வேலன் புறப்பாடு’களுடன் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும். 

காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  சிக்கல்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×