பச்சைமலை - ஈரோடு





	


	



























	




 




	








 




9:55:56 AM         Tuesday, April 21, 2026

பச்சைமலை - ஈரோடு

பச்சைமலை - ஈரோடு
பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு பச்சைமலை - ஈரோடு
Product Code: பச்சைமலை - ஈரோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                      பச்சைமலை (மரகதாச்சலம்) சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்ட கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

சுவாமி : சுப்ரமணியசுவாமி

அம்பாள் : வள்ளி தெய்வயானை 

தீர்த்தம் :  சரவண தீர்த்தம்

தல விருட்சம் : கடம்பமரம் 

தல சிறப்புக்கள் : மூலஸ்தானத்தில் பால தண்டயுதபாணியாக, ஞானப்பழமாக மேற்குநோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். வலக்கையில் தண்டமும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் சக்தி வேலுடனும் சேவற்கொடியுடனும் கலியுக தெய்வமாக சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்குகின்றார். அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வயானை சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்ரமணியராய் வள்ளி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். இவை இரண்டும் உற்சவ மூர்த்திகள் ஆகும். 

பழனியை போன்றே இங்கு மூலவர் மேற்கு நோக்கிய வண்ணம் காட்சி தருகிறார். மேற்கு  நோக்கிய முருகன் திருத்தலங்கள் மிகவும் அரிது. பச்சைமலையில் பிரதான உற்சவராக ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர்  உள்ளார். ஆறுமுகம் கொண்ட முருகனின் ரூபத்தையே ஷண்முகர் என்று அழைக்கிறோம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருப்பது போல இரண்டு மயில் வாகனங்கள் அமைந்துள்ளன. மலை மீது செல்ல 180 படிகள் கொண்ட பாதை உள்ளன. படிப் பாதை முடிவில் 40 அடி உரயமுள்ள திருசெந்தூர் முருகனின் திருக்கோலம் தூரத்தில் இங்குஇருந்து பார்த்தாலும் தெரியும்படி இருப்பது மிகச்சிறப்பு. மலை மீது 100 அடியில் சுனை நீர் உள்ளது. மலையானது மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.

ஒரு சமயம் பங்குனி உத்திர திருவிழாவின் போது அர்ச்சனையுடன் ஹோமமும் செய்தனர். அப்போது வேதங்களை ஓதிக்கொண்டிருந்த அர்ச்சகர் தீடிரென மயங்கி விழுந்தார். மயங்கிய விபரத்தைக் கேட்டபோது கருவறையில் மந்திர சக்தி உக்கிரமாக இருப்பதால் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறினார். அன்று தொட்டு இன்று வரை இதைக் கடைப்பிடித்து வருகின்றனர். கடம்பனின் இஷ்ட மலரைக் கொண்ட கடம்பத்தை தல விருட்சமாகவும், தீர்த்தமாக சரவண தீர்த்ததையும் கொண்டு விளங்குகிறது. பழநிமலையில் மூலவருக்கு அமைந்துள்ளதைப் போன்றே சொர்ண பந்தனம் செய்விக்கப்பட்டுள்ளது. 

தல வரலாறு : மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. 2000க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். 

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு எழுந்தருளினார். குன்னத்தூர் அருகே வந்து, சிவ பூஜை செய்ய சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது, கோபி அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர் தான் சிவ பூஜை செய்ய சரியான இடம் என்பதை ஞான திரிஷ்டியால் உணர்ந்து அங்கு வந்து சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளை காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது. குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சைமலை  என்னும் குன்றை அறிகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று இறைவன் பச்சைமலையில் நிலையாகக் குடிகொள்கின்றான். 

பிரார்த்தனை வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன. நேர்த்திக்கடன்: திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு கிட்டாமல் இருந்தவர்கள் பச்சை மலையில் 7 நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு குழந்தை பெற்றோர் ஏராளம். 7ம் நாள் திருக்கல்யாண உற்சவம் முடிந்து தயிர் தண்டு பிரசாதத்துடன் விரதம் நிறைவடைகிறது. திருமண தடைகள் நீங்க 6 செவ்வாய் கிழமைகளில் கல்யாண சுப்ரமணியருக்கு நெய் தீபம் இட்டு ஆராதனைகள் செய்தால் நிச்சயம் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கிறது. பழநி மலையில் நடப்பதைப் போன்றே இங்கும் காலை, மாலை நேரங்களில் இராக்கால மகா அபிஷேகம் நடைபெறுகின்றன. அக்னி நட்சத்திரத்தின் போது மரகதீஸ்வரருக்கு தாராபிஷேகமும், 108 லிட்டர் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் ருத்ராபிஷேகம் 11 முறை ஜெபிக்கப்படுகிறது. இத்தலத்தில் 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன. 

பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மூலவருக்கு சத்ரு சம்ஹார திரிசடை அர்ச்சனை செய்யப்படுகிறது. தை பூசம், பங்குனி உத்திரம், கந்தர் ஷஷ்டி திருநாட்களில் இறைவனை தங்க கவச அலங்காரத்தில் சேவிக்கலாம். பிரதி ஷஷ்டி, கிருத்திகை மற்றும் விசாக தினத்தன்று ஷன்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஷன்முகார்ச்சனை செய்யப்படுகிறது. கந்தர் சஷ்டியின் பொது ஆறு நாட்கள் தொடர்ந்து ஷன்முகார்ச்சனை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர கல்யாண உற்சவத்தின் போது சிவப்பு சாத்தி உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஷண்முகர் திருசெந்தூரை போலவே நடராஜராகவும் காட்சி அளிப்பார். அன்றைய தினம் இரவு வெள்ளை சாத்தி உற்சவமும், மறுநாள் பங்குனி உத்திரத்தன்று பச்சை சாத்தி உற்சவமும் நடைபெறும். முருகன் தானே சிவன், பிரம்மா , விஷ்ணுவாகத் திகழ்வதை உணர்த்தவே இவ்வலங்காரங்கள் செய்யப்படுகின்றது. வருடத்தில் ஒரு முறை மட்டுமே மலர் பல்லக்கில் நகர் வலம் வருகிறார் ஷண்முகர்.

 காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : கோபிச்செட்டிப்பாளையம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×