எண்கண் - திருவாரூர் 





	


	



























	




 




	








 




10:43:57 PM         Monday, April 20, 2026

எண்கண் - திருவாரூர்

எண்கண் - திருவாரூர்
எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர் எண்கண் - திருவாரூர்
Product Code: எண்கண் - திருவாரூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                      எண்கண், சுப்பிரமணிய சுவாமி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டதில் அமைந்துள்ள எண்கண் கிராமத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இந்த திருத்தலம் கொடவாசல் வட்டத்தில் உள்ள முகுந்தனூருக்கு அருகில் உள்ளது.

மூலவர் : சுப்பிரமணிய சுவாமி

அம்பாள் :  பெரியநாயகி

தல விருட்சம்  : வன்னி  

தீர்த்தம் : குமார தீர்த்தம்

பாடியோர் : அருணகிரிநாதர்

தலச் சிறப்புகள் : செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் இத்தலத்தில் தெற்கு முகமாக அமர்ந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு. சிலையின் முழு டை மயிலின் ஒரு காலில் உள்ளது. இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சியின் போது கட்டப்பட்டது. முருகனின் ஆறு முகங்களில் மூன்று முன்னும் மூன்று முகம் பின்னும் காணப்படுகிறது. பங்குனி மாதத்தில் பிரம்மபுரீஸ்வரின் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த கோவிலைப் பற்றியும், இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.

இந்த கோவிலில் முருகன் சிலையை செதுக்கிய சிற்பி, சிக்கல் மற்றும் எட்டுகுடி ஆகிய இடங்களில் சிற்பத்தை செதுக்கிய அதே நபர் எனப்படுகிறது. சிக்கலில் சிலை சிற்பம் செய்தபின், அச்சிற்பி தனது வலது கட்டைவிரலை வெட்டிகொண்டார், அதனால் அவர் சிக்கலில் உள்ள உருவத்தின் அழகை மிஞ்சும் எதையும் எங்கும் உருவாக்க மாட்டார் என்பதை உறுதிசெய்தார். எட்டுகுடி சிலை வடிவத்தை சிற்பிய பிறகு, அவர் அதன் அழகு சிக்கலில் உள்ள சிற்பத்தை மிஞ்சியதாக உணர்ந்து, தன்னை தண்டித்துக்கொள்ள தன் கண்களை குருடாக்கிக்கொண்டார். ஆகவே அவர், எங்கணில் முருகனின் சிலையை சிற்பம் போது, ஒரு பெண்ணின் உதவியை நாடினார். அப்போது தவறி அவர், அந்தப் பெண்ணின் ஒரு விரலை வெட்டி, இரத்தம் வெளியேற தொடங்கியது. இந்த இரத்தத் துளிகள் அவரது கண்களில் விழுந்து அவரது கண்களை குணப்படுத்தியது. சிற்பி பார்க்கமுடிவதை உணர்ந்தவுடன், ஆச்சரியத்துடன் "எங்கண்!" தமிழ் மொழியில் "என் கண்கள்" என்று பொருள்.

தல வரலாறு : படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தினை மறந்துவிட்டார். அந்த சமயத்தில் முருகன் பிரம்மனிடம், பிரணவ மந்திரத்திற்கு அர்த்தத்தை கேட்க பிரம்மன் சிக்கலில் சிக்கிக் கொண்டார். இந்த மந்திரத்தின் அர்த்தம் மறந்ததன் காரணமாக முருகனின் கோபத்திற்கு ஆளாகி விட்டார் பிரம்மன். பிரணவ மந்திரத்தின் அர்த்தம் மறந்ததற்கு தண்டனையாக பிரம்மன், முருகனால் சிறையில் அடைக்கப்பட்டார். பிரம்மனின் படைக்கும் தொழிலை முருகனே செய்து வந்தார். பிரம்மன் தனது படைக்கும் தொழிலை முருகனிடமிருந்து திரும்ப பெற்றுத்தருமாறு, சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்து, பூஜித்து வந்தார். பிரம்மனின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான், பிரம்மன் முன்னே தோன்றினார். முருகனை அழைத்த சிவபெருமான் படைக்கும் தொழிலை பிரம்மனிடமே தருமாறு கூறினார். ஆனால் முருகனோ, ‘பிரணவ மந்திரத்தின் சிறப்பினை அறியாத பிரம்மனிடம் படைத்தல் தொழிலை கொடுப்பது சரியல்ல’ என்று மறுத்துவிட்டார். சிவபெருமானுக்கு, முருகன் பிரணவ மந்திரதை உபசரித்தது போல், பிரம்மனுக்கும் முருகனே பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபசரிக்க வேண்டும் என்று சிவபெருமான் முருகனிடம்  கூறினார். சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முருகன் பிரணவ மந்திரத்தின் மகிமையையும், அர்த்தத்தினையும் பிரம்மனிடம் உபதேசம் செய்தார். பின்பு படைக்கும் தொழிலானது பிரம்மனிடம் அளிக்கப்பட்டது. பிரம்மா தனது எட்டுக் கண்களால் சிவனைப் பூஜித்ததால் இந்த தலத்திற்கு பிரம்மபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. முருகனால் இந்த உபதேசம் பிரம்மனுக்கு உபதேசிக்கப்பட்டு இத்தலத்தில் முருகன் உற்சவராக காட்சியளிக்கின்றார். 

ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும். மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில் உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது. பலன்கள் கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய் கிழமையில் இங்குள்ள முருகனை தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். இந்தத் தலத்தில் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, திருமண தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் :  திருவாரூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×