குண்டுக்கரை - ராமநாதபுரம் 





	


	



























	




 




	








 




7:51:23 PM         Monday, April 20, 2026

குண்டுக்கரை - ராமநாதபுரம்

குண்டுக்கரை - ராமநாதபுரம்
குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம் குண்டுக்கரை - ராமநாதபுரம்
Product Code: குண்டுக்கரை - ராமநாதபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                           குண்டுக்கரை, சுவாமிநாத சுவாமி 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரையில் அமைந்துள்ளது. இராமநாதபுரம் நகரிலேயே இக்கோவில் உள்ளது. பேருந்துகள், மினி பேருந்துகள் வசதி உள்ளது. ஆட்டோக்களிலும் செல்லலாம்.

மூலவர்   : சுவாமிநாத சுவாமி

தலச் சிறப்புகள் : சூரபத்மனை வதம் செய்வதற்க்கு முன்பே முருகன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கின்றது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகின்றார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மேல் அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவபெருமான் அதை நின்று கேட்பது போல் அமைந்துள்ளது. இங்கு முருகன் 11 தலை 22 கைகளுடன் அருள்பாலிக்கிறார். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது. முருகனே சிவன் சிவனே முருகன் இருவரில் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்திருப்பது மிகச்சிறப்பன அம்சமாகும். 

தல வரலாறு : 300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒரு முறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தபொழுது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி “குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலைக்குப்பதில் புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்” என கூறி மறைந்தார்.  அதன் படியே அவரும் செய்தார். சுவாமிமலையானின் பெயரான ‘சுவாமிநாதன்’ என்று பெயர் சூட்டினார். அறுபடை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடு என அழைக்கப்படும் சுவாமி மலை முருகன் கோவிலுக்கு நிகரானது இத்தலம். இது இராமநாதபும் நகரில் குண்டுக்கரை என்ற இடத்தில் உள்ளதால் குண்டுக்கரை முருகன் கோவில் என அழைக்கப்படுகிறது. 

சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலன்று சாகம்பரி என்ற காய்கறி பழ அலங்காரத்தில் அம்பிகை காட்சி தருவாள். வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம், சூரசம்ஹார விழா 7 நாள், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்குதான் சூரசம்ஹார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை இங்கு அழைத்து வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் நிவாரணம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், சிவராத்திரி, கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது. இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருகனுக்கு அபிசேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை,மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை
 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  ராமநாதபுரம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×