குமரகிரி - சேலம்





	


	



























	




 




	








 




6:01:08 AM         Tuesday, April 21, 2026

குமரகிரி - சேலம்

குமரகிரி - சேலம்
குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம் குமரகிரி - சேலம்
Product Code: குமரகிரி - சேலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                               குமரகிரி, தண்டாயுதபாணி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை அடுத்த குமரகிரி என்னும் மலை மேல் அமைந்துள்ளது. 

மூலவர்  : தண்டாயுதபாணி
உற்சவர்  : சண்முகர்
தலவிருட்சம் :  பொன்அரளி
தீர்த்தம்  : குமரதீர்த்தம்

தலச் சிறப்புகள் : குமரன் குடியிருந்த கிரி என்பதால், “குமரகிரி” எனப்படும் இத்தலத்தில், கையில் தண்டத்துடன் வடக்கு திசையை  நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். எனவே, இவரை வணங்கிட செல்வம் செழிக்கும். படிபூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை. இங்கு முருகனுக்கு நைவேத்யமாக சுத்தான்னம், மாம்பழம் படைத்து வழிபடுகின்றனர். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. பிரகாரத்தில் துர்க்கை, நவக்கிரகம், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.

தல வரலாறு : நாரதர் கொடுத்த மாங்கனியைத் தனக்குத் தரவேண்டுமெனக் கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார். தண்டாயுதபாணியாகச் சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார். பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, “தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்” என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்குச் சென்றார். பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.  எனவே பக்தர்கள் இவரை, “மாம்பழ முருகன்” என்றும் அழைக்கிறார்கள்.

இங்கு ஒரு வினோதமான அர்ச்சனை முறை உள்ளது. விபத்தில் காயம்பட்டவர் மற்றும் அவசரசிகிச்சை பெறுபவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் தண்டபாணிக்கு “திரிசதை அர்ச்சனை” செய்து பூஜை செய்கின்றனர். இக்கோயிலில் கிடைக்கும் விரிச்சி பூவில் பன்னீர், சந்தனம் கலந்து இந்த அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இவரை வணங்கிச்சென்றால் விபத்துக்களில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். எனவே, இங்கு வாகனம் வைத்திருப்போர் அதிகளவில் இந்த அர்ச்சனை செய்கின்றனர்.

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் , கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும் முருகனுக்கு திருமுழுக்கு செய்தும், புது ஆடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திரபாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பால்குடம், காவடி எடுத்தல், முடி இறக்குதல், சேவல்காணிக்கை செலுத்துதல் என நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : சேலம்

அருகிலுள்ள ரயில் நிலையம் :  சேலம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×