குமரன்குன்றம் - சென்னை 





	


	



























	




 




	








 




10:05:58 PM         Monday, April 20, 2026

குமரன்குன்றம் - சென்னை 

குமரன்குன்றம் - சென்னை 
குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை  குமரன்குன்றம் - சென்னை 
Product Code: குமரன்குன்றம் - சென்னை 
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare
                                                                               குமரன்குன்றம், பாலசுப்பிரமணியர் 
 
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், சென்னைக்கு அருகில் குரோம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந்தும் 1 கி.மீ தொலைவில் கிழக்கிலுள்ளது. குமரன் குன்றம் வாயில் வரை சிற்றுந்தும், பேருந்தும் வருகின்றன. 
 
மூலவர் : சுவாமிநாதசுவாமி
உற்சவர் : பால சுப்பிரமணியர்
தலவிருட்சம் : அரசு
தீர்த்தம் : குமார தீர்த்தம்
 
தலச் சிறப்புகள் : மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும் இடது திருக்கரத்தை இடது தொடையைத் தொட்ட வண்ணமும் ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன் பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். மலையிலேயே வற்றாத குமார தீர்த்தம் இருக்கிறது. 
 
தல வரலாறு : பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. 1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை  என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்” எனக்கூறி அருளாசி வழங்கினார். சில காலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டது. “சுவாமிநாதன்” என்று பெயர் சூட்டப்பட்டது. மலைக்கோயில்களான திருநீர்மலை, திரிசூலம் ஆகிய தலங்களுக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன் சன்னதி இருக்கிறது.  இப்பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டினர். 1983ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருக்கரத்தி னால் “லகு சம்ப்ரோஷணம்” செய்து இக்கோயில் மேலும் வளர ஆசி கூறினார்கள். ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் 1995ல் விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி சந்நிதி விரிவுபடுத்தப் பட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் அமைத்து கோபுரம் கட்டப்பட்டது. ஸ்ரீ ஜெயமங்கல தன்ம காளி, சூரியன், சந்திரன், பைரவர், சரபேஸ்வரர் முதலிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 1998ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருடன், மாணிக்க வாசகரையும், சிவன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து 2005 சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் கால் மாறியடுவது இவர் சிறப்பாகும்.
 
கோவில் அமைப்பு :  இராஜகோபுரத்திற்கும் ஸ்ரீ விநாயகர் சந்நிதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம் ஒன்றும் எழுந்துள்ளது. இப்புதிய மண்டபம் வழியாக சென்று மலையடிவாரத்தின் தென் புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சந்நிதியையும், வடபுறத் தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நிதியையும் காணலாம். ஸ்ரீ ஷண்முகர் மாமனைப் போன்று சங்கு, சக்ரதாரியாக காட்சியளிப்பது மற்றொரு சிறப்பாகும். மலை ஏற முடியாதவர்கள் கீழிருந்த படியே முருக பெருமானை அடிவாரத்திலிருந்தபடியே வழிபடலாம். மலையடிவாரத்தின் தெற்கில் நவக்கிரகங் களுக்கு தனிக்கோயில் உள்ளது. சற்று மேலே சென்றால் புதிதாக இடம் மாற்றம் செய்யப் பட்ட தனிச்சந்நிதியில் இடும்பனை வணங்கலாம்.
 
மலைக்கோயிலுக்குச் செல்லும் வழியில் சுந்தரேசுவரர் கோயில் இருக்கிறது.  அம்பாள் மீனாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள நடராஜர், இடது காலை ஊன்றி, வலக்காலை தூக்கி நடனமாடியபடி காட்சி தருகிறார். மதுரையில் அருளும் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அமைக்கப்பட்ட சன்னதி என்பதால், இவ்வாறு நடராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். சிவசக்தி அம்சமான சிவனின் வலது பாதம், சிவனுக்குரியதாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு நடராஜரை “தன்பாதம் தூக்கிய நடராஜர்” என்றும் அழைக்கிறார்கள. நடராஜர் வழிபாட்டிற்குரிய ஆறு நாட்களில், இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது. சரபேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இராகு வேளையில் இவருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.
 
ஸ்ரீ சுந்தரேஸ் வரர் ஆவுடையார் மேல் பாணலிங்கமாக காட்சி தருகிறார். ரிஷப வாகனத்தில் பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரம் கடைசி வாரத்தில் 108 சங்காபி ஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மஹாசிவராத்திரி நான்கு கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவீதி உலா முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. கருவறையைச் சுற்றி நர்த்தன கணபதியும், ரிஷபாரூட ரும் சண்டிகேஸ்வரர் தெற்கு சுவற்றில் ஆலமர் கடவுளாம் தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின் றார். மேற்குச் சுவற்றில் மஹா விஷ்ணுவும், விஷ்ணு துர்க்கையும் கோஷ்ட மூர்த்தங்களாக உள்ளனர். சிவன் சந்நிதியை அடுத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் சந்நிதி உள்ளது. தனிக்கோயில் அம்பிகையின் கருவறையைச் சுற்றி தெற்கில் மாகேஸ்வரியும், மேற்கில் வைஷ்ணவியும், வடக்கில் பிராம்ஹியும் கோஷ்ட மூர்த்திகளாக உள்ளனர். சிவன் கோயிலில் உள்ள மற்றுமொரு தெய்வம் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜர். மாணிக்கவாசகரும் பன்னிரு திருமுறைக் கோயிலும் உள்ளன. ஸ்ரீ நடராஜ ருக்கு வருடத்தில் ஆறுமுறை அபிஷேகம். ஸ்ரீ நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்தில் ஸ்ரீ பைரவர் சந்நிதி உள்ளது. இங்குள்ள காளி, “ஜெயமங்களதன்மகாளி” என்றழைக்கப்படுகிறாள். தன்னை வேண்டுபவர்களுக்கு வெற்றியும், மங்களமும் சாந்தமாகத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர். பவுர்ணமியில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. கந்த சஷ்டியின்போது சூரசம்காரம் முடிந்ததும், முருகன் யானை வாகனத்தில் புறப்பாடாகிறார்.
 
ஆடி, தை கிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமி மலையை “கிரிவலம்” வருகிறார். குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம், “குமரன் குன்றம்” என்றழைக்கப்படுகிறது. சித்திரை பிறப்பின்போது, இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார். திருமண, புத்திர தோஷம் நீங்க இத்தல முருகனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்குள்ள முருகன் வடக்கு திசை நோக்கியிருப்பதால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, இவருக்கு மங்கலப்பொருட்கள் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். எனவே இவரை பக்தர்கள், “ஐஸ்வர்ய முருகன்” என்றும் அழைக்கிறார்கள். முருகன், சிவன், அம்பாளுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
அருகிலுள்ள விமானதளம் : சென்னை 
 
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை குரோம்பேட்டை 
 
பேருந்து வசதி : உண்டு
 
தங்கும் வசதி : உண்டு
 
உணவு வசதி : உண்டு
Mail this page Printable view
×
×
×
×
×
×
×