அயோத்தி





	


	



























	




 




	








 




11:41:24 PM         Friday, May 15, 2026

அயோத்தி

அயோத்தி
அயோத்தி அயோத்தி அயோத்தி அயோத்தி அயோத்தி அயோத்தி அயோத்தி அயோத்தி
Product Code: அயோத்தி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    அயோத்தி

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் சரயு ஆற்றாங்கரையில்  ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. 

சிறப்புகள் : அயோத்தியை தலைநகராகக் கொண்டு விஷ்ணுவின் அவதாரமான ராமர் கோசலை நாட்டை ஆட்சி செய்ததாக ராமாயணத்தில் வால்மீகி முக்தி என்பது எல்லா மதத்தின் எல்லை எனலாம். பிறவிப்பிணியைப் நீக்கி அருள் தரும் புண்ணியத் தலமாக ஏழு இடங்களை இந்து மதம் சுட்டிக்காட்டியுள்ளது எனலாம். அயோத்தி, மதுரா, ஹரித்துவார், இராமேஸ்வரம், காசி,   துவாரகை, உஜ்ஜியினி, காஞ்சிபுரம் முதலியனவைகள்.  இத்திருத்தலங்களில் வாழ்ந்தவர்களும், தரிசித்தவர்களும், இறந்தவர்களும் மோட்சத்தை அடைவர் என்று இந்து மதம் கூறுகிறது, நம்புகிறது. மதுரா, அயோத்தி, துவாரகை தலங்களில் விஷ்ணுவை வணங்கும் வைணவர்களுக்கு புனித. தலம். அயோத்தி இராமர் பிறந்த இடம். மதுரா, கிருஷ்ணன் பிறந்த இடம், துவாரகை கிருஷ்ணன் வாழ்ந்த இடம். 

தல வரலாறு : இங்குள்ள புனித ஆறான சரயுவில் நீராடி ராமரை வழிபட்டால் மோட்சம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும்.பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது.

அவத் பகுதி இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து கோரக்பூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது அயோத்தி. இதன் அருகில் பெய்சாபாத் எனும் நகரமும் அமைந்துள்ளது. 136 கிமீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தி மிகவும் புனித தலமாக இந்து மதத்தவர்களால் நம்பப்படுகிறது. அயோத்தியில் இந்து, இஸ்லாம் மட்டுமில்லாமல் புத்த மற்றும் சமண மதங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. மகா விஷ்ணுவின் மனித அவதாரமாக நம்பப்படும் ராமர் இங்குதான் பிறந்து வளர்ந்துள்ளார்.

ஹரித்துவார் வைணவத் தலம். காசி சைவருக்கு முக்கியமான ஸ்தலம். இந்து மதத்தின் படி முக்தி தரும் தலம் என்றால் இராமேஸ்வரம்  மதுரா,  என்று பல இடங்கள் இருக்கிறது. இவைகள் எல்லாம் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும், அம்பிகைக்கும் அடியார்களுக்கும் முக்கியமான தலம். இந்த ஏழு தலங்களுள் ஒரே தலம் தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் மட்டுமே.

இந்த இடங்களில் முதல் இடம் வைணவர்கள் எண்ணுமிடம் முக்தி நாத் இடம். காட்மாண்டுவிலிருந்து போக்கரா, போக்காரவிலிருந்து ஜிம்சூங்கிற்கு சிறிய விமானம் மூலமாகவும் சென்று, பின் ஜிம்சூங்கிலிருந்து மூன்று மணி நேரம் ஜீப்பிலும் பயணம் செய்ய வேண்டும்.கால நிலை, வானிலை, பருவம் சரியாக இருந்தால், அமைந்தால் மட்டுமே விமானம் புறப்படும். சட்டென மாறும் வானிலை பொறுத்தே      நம் அதிர்ஷ்டம் இருக்கும். இப்படிபட்ட சூழ்நிலைதான் முக்திநாத் பயணம் அமையும்.

இமயமலையின் மடியில் இருக்கும் முக்திநாத்துக்கு செல்லும் யாத்திரை தொடங்கும் இடம் கித்தம். நேப்பாளத்தின் தலைநகர் காண்மாண்டுவிலிருந்து 980 மைல் தூரத்தில் இருக்கும் இந்த நகரம் பனி போர்த்திய ஒரு சின்ன நகரம் கோடை காலத்திலும் கூட இங்கு குளிர் நடுக்கம் ஊசி முனையாக குத்தும். இங்கிருந்தான் முக்தி நாத்திற்கு பக்தர்களையும் பயணிகளை அழைத்துச் செல்லுமிடம். இங்கிருந்துதான் ஜீப்  மூலம் பயணம், ஆரம்பமாகிறது. சுமார் மூன்று மணி நேரம் அமைகிறது இந்த பயணம் தூரத்திலிருந்து பார்த்தால் நமது பார்வையில் படுவது பனி மூடிய நிலையில் ஓங்கி நிற்பது இமயமலை தான். எத்தனை எத்தனை புனித ஸ்தலங்கள். இந்துகளை பொறுத்த வரை இந்த மலையே சிவத்தலம்தான். சைவரகளுக்கு எப்படி இமயமலை முக்கிய மலைமயோ அப்படிதான் வைணவர்க்கும் பாற்கடலில் பள்ளிக் கொண்ட பரந்தாமன் இமயமலையில் முக்திக்கு உரியவராக அமைந்திருக்கிறார்.முக்திநாத் பக்தர்களுக்கு மட்டுமல்ல பயணிகளுக்கும் தவிர்க்க இயலாத இடம் முக்திநாத். இந்துக்கள் மட்டுமல்ல புத்த மதத்தினர் கூட  இங்கு வருவதுக்கு காராணம் உண்டு. இந்து மதத்திற்கு மட்டுமல்ல புத்த மதத்தினருக்கும் முக்கிய தலமாக இருக்கிறது. இங்கு மூலவராக இருக்கும் பெருமாளை புத்த மதத்தினர் அவலேஸ் கடேஸ்வர் தங்கள் கடவுளாக வணங்குகிறார்கள். இந்த கோயிலுக்கு புத்த மதத்தினரும் அதிகமாக வருகிறார்கள்.

பாதையின் ஓரமான ஓடுகிறது கலிகண்டை ஆறு.  வைணவர்களின் மனதில் கண்டகி நதிக்கு நீங்காத இடமுண்டு. கலிகண்ட ஆறு புனிதமான நதிகளின் ஒன்று. இமய மலையில் உற்பத்தியாகி ஓடும் இந்த நதி  மிகவும் வித்தியாசமானது.  இந்த ஆற்றில் மட்டுதான் சாலி கிராம கல் கிடைக்கிறது. புத்தரின் அடையாளமாக சக்கரம், சைவர்களின் அடையாளமான சங்கு, லிங்கம் போன்ற உருவங்கள் இயற்கையாகவே அமைந்துள்ள சாலிகிரம கற்களை தாங்கி ஓடும் இந்த ஆறு இந்த பாக்கியம் பெற்றது பூ கண்டகி ஆறு எனலாம்.   ஆற்றினைக் கண்டாலும், உண்டாலும், குளித்தாலும் பாக்கியம்தான். கரடு முரடான பாதையில் பயணித்து நெடுந் தூரம் பயணித்த பின் முதலில் தெரிவது ராணி பூவா கிராமம்.

முக்தி நாத்துக்கு வேண்டுதலுடன் வரும் பக்தர்கள் நடைப் பயணத்தே தேர்வு செய்கின்றனர். நடக்க இயலாதவர்க்கு வசதியாக குதிரை சவாரியும், மோட்டார் சைக்கிளில் பயணிக்க வசதி உண்டு. படிக்கட்டுகளும், பின் சாள தரை பாதைகளும் செங்குத்தான பாதைகளும் கடந்து வழி தட்சன் முடிவில் தென்படுகிறது முக்திநாத் கோயில். 

அருகிலுள்ள விமான நிலையம் :   லக்னோ

அருகிலுள்ள ரயில் நிலையம் : பைசாபாத்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×