குச்சனூர்





	


	



























	




 




	








 




4:24:58 PM         Saturday, May 02, 2026

குச்சனூர்

குச்சனூர்
குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர் குச்சனூர்
Product Code: குச்சனூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

திருத்தல அமைவிடம் :இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம்  உத்தமபாளையம் வட்டத்தில் தேனி- குமுளி வழித்தடத்தில் சின்னமனூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் குச்சனூர் தலம் அமைந்துள்ளது.
மூலவர் : சனீஸ்வரன்                                  
சிறப்பு : சுயம்பு 
தல மரம் : விடத்தை 
தலபுஷ்பம் : கருங்குவளை 
தலஇலை : வன்னி இலை 

சிறப்புகள் : இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான். சனிபகவானுக்கு பிரம்மகதி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் அரூபி வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மஞ்சன காப்பு பூசப்பட்ட நிலையிலேயே சுயம்பு உள்ளது.
தல வரலாறு : தினகரன் என்ற மன்னன் குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் வேண்டினான். அப்போது அசரீரி ஒன்று உன் வீட்டுக்கு ஒரு பிராமணச் சிறுவன் வருவான். அவன் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என்றது. அதுபடியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயரோடு வளர்ந்தான். அரசிக்கும் குழந்தை பிறந்து சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். புத்திசாலியான வளர்ப்பு மகன் சந்திரவதனுக்ககே முடி சூட்டப்பட்டது. இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். வளர்ப்பு மகனான எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு துன்பம் தராதே அத்துன்பத்தை எனக்கு கொடு என்று வேண்டினான்.சனீஸ்வர பகவான் அவனது நியாயத்தை உணர்ந்து ஏழரைநாளிகை மட்டும் அவனை பிடித்துக்கொள்வதாக கூறி பல கஷ்டங்களை கொடுத்தார். பின்பு அவன் முன் தோன்றி உன்னைப்போன்ற நியாயஸ்தர்களை பிடிக்க மாட்டேன் என்றும் இப்போது உன்னை பிடித்தற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை காரணம் என்று கூறி மறைந்தார். பிறகு சந்திரவதனன் இவ்வூரில் குச்சுப்புல்லால் கூரை வேய்ந்து கோயில் எழுப்பினான் இதுவே குச்சனூர் என பெயர் வழங்க காரணமாயிற்று. 
இந்த இடத்தில் சனி பகவான் தன்னுடைய முழு சக்தியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே தான் சனி பகவானின் பெயர்களில் ஒன்றாக விளங்கிய குப்ஜானூர் என்ற பெயரை பெற்ற இந்த இடம் இன்று குச்சானூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் குச்சானூரில் வடதிசையைப் பார்த்தவாறு இருக்கும் வடகுரு கோவிலும் உள்ளது. தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர்,நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர். கோயில்அமைப்பு :திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான், முருகன்   சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணைகருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும், நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை மரம் உள்ளது. பழமையான கோவிலான, இதில் குடியிருக்கும் கடவுளை இந்திரர் வணங்கி வந்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இங்கிருக்கும் ஐந்து தலைகளையுடைய விநாயக பெருமான், பஞ்சமுக கணபதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். குச்சானூரின் வழியாக பாய்ந்து செல்லும் சுரபி என்ற சிற்றோடை நதியின் கரையில் இந்த புகழ் மிக்க சனீஸ்வரர் வீற்றிருக்கிறார். குச்சானூருக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்து, தங்களுடைய பாவங்களை சனி பகவானிடம் முறையிட்டு அருள் பெறுகின்றனர்.
மூன்று ஜோடி கண்கள், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய கரம், சிம்ம கர்ணமாக நான்கு கரங்கள், இரண்டு பாதங்கள் கொண்டு குச்சனூர் சனீஸ்வரர் காட்சி தருகின்றார். அவரின் குங்கும நிறமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. புகழேந்திப் புலவர் நளவெண்பா பாடலில் பாடியுள்ள மரமான எள்ளினும் சிறிய இலை கொண்ட விடத்தலை மரமே தல மரமாகவும், ஆலயத்தின் எதிரில் ஜீவநதியாக ஓடும் சுரபி நதியே தீர்த்தமாகவும் அமைந்துள்ளன. மூன்று ஜோடி கண்கள், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய கரம், சிம்ம கர்ணமாக நான்கு கரங்கள், இரண்டு பாதங்கள் கொண்டு குச்சனூர் சனீஸ்வரர் காட்சி தருகின்றார். அவரின் குங்கும நிறமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
திருவிழாக்கள் : 5 வார ஆடிப் பெருந்திருவிழா. 2 1/2 வருடத்திற்கொரு முறை சனிப்பெயர்ச்சித் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவின் போது கோயிலில் கூடுவர். மேலும், இக்கோவிலில் அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டுச் செல்லும்தலமாகவும்விளங்குகின்றது

தரிசன நேரம் : காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30  மணி வரையிலும் சனி பகவானை தரிசிக்கலாம். 
சனிக் கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து தரிசிக்கலாம். 
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தேனி,திண்டுக்கல்,மதுரை
பேருந்து வசதி : உண்டு ( ஷேர் ஆட்டோ வசதி )
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×