திருவிடைக்கோடு





	


	



























	




 




	








 




2:49:28 PM         Sunday, April 19, 2026

திருவிடைக்கோடு

திருவிடைக்கோடு
திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு திருவிடைக்கோடு
Product Code: திருவிடைக்கோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  திருவிடைக்கோடு சடையப்பர் (ஜாயப்பர்) 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வில்லுக்குறி உள்ளது. அதன் அருகே உலக புகழ்பெற்ற ஆசியாவின் மிக உயரமான பாலமாகிய 'தொட்டிப்பாலம்' உள்ளது அங்கிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் வடக்கே உள்ளது மேலாங்கோடு சிவாலயத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மூலவர் : திருவிடைகோடு மகாதேவர்

சிவாலய ஓட்டம் : மகா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. 

தல வரலாறு : இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும்.

தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் சிவனும் அரியும் ஒன்று என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி எனத் தயங்கினான்.

இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்’’ என்று கூறினார்.

ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.

இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் திருநட்டாலம் ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம்.

அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட அவை அனைத்துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.

சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக்கேட்டான். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.

இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். 

மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.

இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா. இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர். முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து திக்குறிசி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில், திருபன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர், மேலங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

திருவிடைக்கோடு : மேலாங்கோகோடிலிருந்து  சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள ஆலயங்களில் இதுவும் ஒன்று. கேரள தமிழக கட்டடக் கலை பாணிகளைக் கொண்டு கட்டப்பட்டது.  நாகர்கோவில் திருவனந்தபுரம் நெடுஞ்சாலை வழி தெற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. வில்லுக்குறி பாலத்தின் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் காடாக இருந்த சமயம் நடந்த நிகழ்ச்சியை இந்த கோவிலின் உருவாக்கத் திற்கு காரணமாக கூறுகின்றனர். ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தை கண்டனர். இந்த அதிசயத்தை ஊர் மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தை பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் எனப்பட்டார். இக்கோவிலில் உள்ள நந்தி தொடர்பாகவும் ஒரு கதை உண்டு. இக்கோவில் நந்தி சிற்பம் செதுக்கியபோது அது உக்கிரம் அடைந்தது. அதன் கொம்பை சிற்பி உடைத்தார். அதன் அடையாளம் இப்போதும் தெரிகிறது.

இத்தலம் 12 சிவாலயங்களில் ஒன்பதாவது சிவாலயம் ஆகும். முன்னொரு காலத்தில் நெற்பயிர்கள் விளைந்து, அறுவடையாகும் தருணத்தில், காளையொன்று வெகுண்டெழுந்து பயிர்களை அழித்தது,. காளையை அடக்கச் சென்றவர்களைக் கொம்பால் காயப்படுத்தியது. இதைக்கண்டு வருந்திய விவசாயிகள் இறைவனிடம் சென்று தங்கள் குறையைக் கூறினர். இறைவன் காளையின் கொம்பை ஒடித்து, காளையை அடக்கி, விவசாயிகளை காப்பாற்றியதாகவும் அதனால் இவ்வூருக்கு திருவிடைகோடு என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

திருத்தல அமைப்பு : இங்கு சிவாலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஒரு பிரகாரத்தைக் கொண்டது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது கோயிலின் முன் நந்தி காணப்படுகுறது. வயல்களின் மத்தியில் இயற்கை எழில்சூழ அமைந்துள்ளது. இவ்வாலயம் தெப்பக்குளத்துடன் இணைந்து குளத்தின் நீர் மட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படும் அமைப்பு சிறப்புமிக்கதாகும். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியில் அமைந்தள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு துறவி வாழ்ந்ததாகவும் அவர் மக்களுக்கு பலவித நன்மைகள் செய்ததாகவும் கூறுவர். அவர் இறந்ததும் அவரைக் கோயிலுக்கு அருகிலேயே சமாதி வைத்ததாகவும் கூறப்படுகிறது. துறவியின் சமாதி கோயிலின் முன்பக்கம் காணப்படுகிறது. கோயில் வெளிப்பிரகாரத்தில் அரசு ஆல் வேம்பு மூன்றும் இணைந்த ஒரு மரம் காணப்படுகிறது.

விழாச்சிறப்பு : மாசி மாதம் சிவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவராத்திரியன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர். 9 வது சிவாலயமாகிய இக்கோவில் கேரள கட்டடக் கலையும் தமிழகக் கட்டடக் கலையும் இணைந்து கட்டப்பட்டுள்ளது. சமசதுர வடிவில் பெரிய சுற்றுச் சுவரும் காணப்படுகிறது.

கோயில் காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோயில்

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி : இல்லை

தங்கும் வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×