திருபன்றிகோடு





	


	



























	




 




	








 




2:30:11 AM         Wednesday, April 15, 2026

திருபன்றிகோடு

திருபன்றிகோடு
திருபன்றிகோடு திருபன்றிகோடு திருபன்றிகோடு திருபன்றிகோடு திருபன்றிகோடு திருபன்றிகோடு திருபன்றிகோடு திருபன்றிகோடு
Product Code: திருபன்றிகோடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                         திருபன்றியோடு பக்தவச்சலேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பழமையான ஒரு கோயில் ஆகும். திருவிதாங்கோட்டிலிருந்து மேற்காக 4 கி.மீ தொலைவில் பள்ளியாடியில் இத்தலம் அமைந்துள்ளது

மூலவர் : திருப்பன்றிக்கோடு மகாதேவர்

சிவாலய ஓட்டம் : மகா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. 

தல வரலாறு : இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும்.
தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் சிவனும் அரியும் ஒன்று என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி எனத் தயங்கினான்.
இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்’’ என்று கூறினார்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.

இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் திருநட்டாலம் ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம்.
அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட அவை அனைத்துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.

சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக்கேட்டான். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.
இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். 
மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.
சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.
பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா. இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர். முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து திக்குறிசி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில், திருபன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர், மேலங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். 

திருபன்றிக்கோடு : விமானத்தில் ஸ்ரீநரசிம்மர், ஐயப்ப சுவாமி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. சிவபெருமானும் நந்தியும் முறையே வேடனாகவும் பன்றியாகவும் உருமாறியதும், அந்தப் பன்றியை வேட்டையாடும்பொருட்டு சிவபெருமானுடன் அர்ஜுனன் போர்புரிந்த இடம். இக்கோவில் தொடர்பான கதை மகாபாரதம், அர்ச்சுனன் தபசுடன் தொடர்புடையது. அர்ச்சுனனுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ச்சுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ச்சுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றாக வராக அவதாரக்கதையுடன் இக்கோவில் புராணத்தை இணைத்துள்ளனர். கருவறை வட்ட வடிவில் உள்ளது. உள்பகுதி சதுர வடிவிலானது. மேற்கூரை கூம்பு வடிவினது. கார்த்திகை அஷ்டமி விழா, மாசி சிவராத்திரி விழா முக்கியமானது. 

கோயில் அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் பதினொன்றாவது சிவாலயம் ஆகும். இக்கோயில் கேரள கட்டடக்கலையமைப்பில் கட்டப்பட்டுள்ளது. வட்ட வடிவில் கோயிலும், கூம்பு வடிவத்தில் தட்டு விமானமும், அதன் மேல் செம்புத் தகடு வேய்ந்த கூரையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவில் நந்தி மண்டபமும் பலிபீடமும் உள்ளது. நந்தி மண்டபம் ஓடு வேயப்பட்டுள்ளது. விமானத்தின் கிழக்குப்பக்கம் இந்திரனும், தெற்குப்பக்கம் தட்சிணாமூர்த்தியும், மேற்கே நரசிம்மனும், பிரம்மனும் அமர்ந்திருக்கின்றனர்.

திருத்தல வரலாறு : சுந்தரபுராணத்தில் பன்றிக்கோடு பற்றி ஒரு கதை கூறப்படுகிறது. இரணியன் என்ற அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். ஒரு நாள் புமா தேவியை விழுங்கிவிட்டு பாதாள உலகில் சென்று மறைந்து கொண்டான். தேவர்கள் திருமாலிடம் தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று வேண்டினர். திருமால் பன்றியுருவம் கொண்டு பாதாள உலகம் சென்று அரக்கனையழித்து பூமியைக் காத்தார். அந்த வெற்றியால் செருக்குக் கொண்ட பன்றி தான் யார் என்பதை மறந்து உலகத்தாரைத் துன்புறுத்தியது. கடலைக் கலக்கியது. மகாதேவர் தோன்றி பன்றியின் கொம்பை ஒடித்தார். இறைவனின் கைபட்டதும் பன்றி தன் சுய உருவத்தையடைந்தது. திருமால் சிவபெருமானைத் தரிசித்து தன் இருப்பிடம் சென்றார். இக்கதை நடந்த இடம்தான் திருப்பன்றிக்கோடு என்று கூறப்படுகிறது இறைவனின் மார்பில் பிறைச்சந்திரன் போன்று கொம்பு அழகூட்டி நிற்பதைக் காணலாம்.

விழாச்சிறப்பு : ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறும். சிவராத்திரியன்று மிகச் சிறப்பாக விழா கொண்டாடப்படும். இரவு முழுவதும் மக்கள் வந்தவண்ணம் இருப்பர்.

கோயில் காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் : குழித்துறை

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி : இல்லை

தங்கும் வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×