ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம்





	


	



























	




 




	








 




2:47:14 AM         Saturday, May 16, 2026

ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம்

ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம்
ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம் ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம்
Product Code: ஸ்ரீசாய்பாபா - புட்டபர்தி - ஆந்திரபிரதேசம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

சத்திய சாயி பாபா

இருப்பிடம் : இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆலயம் அமைந்துள்ளது. 

வாழ்க்கை வரலாறு : சத்திய நாராயண ராயூ என்ற இயற்பெயர்கொண்ட இவர், 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் “புட்டபர்த்தி” என்ற இடத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சத்திய நாராயண விரதம் இருந்து பிறந்ததால், இவருக்குச் சத்திய நாராயணன் எனப் பெயர் சூட்டினர். சத்திய சாயிபாபா தனது 14வது அகவையில் சீரடி சாயி பாபாவின் மறு அவதாரம் எனத் தன்னை அறிவித்துக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் இயற்கை எய்தினார்.

சிறப்புக்கள் : தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.  சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது, அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை. 

பிரசாந்தி நிலையம் : பகவான் சாய் பாபாவின் மீது அதீத பற்றுகொண்ட பக்தர்களால் புட்டபர்த்தியில் பாபாவுக்காக கட்டப்பட்டுள்ள ஆசிரமம் `பிரசாந்தி நிலையம்' என்று அழைக்கப்படுகிறது. அமைதி தவழும் நிலையம் என்பதே இதன் பொருள். நாட்டின் மிக முக்கிய சுற்றுலா யாத்திரை தலங்களில் ஒன்றாக புட்டபர்த்தி விளங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பிரசாந்தி நிலையத்திற்கு வந்து சாய் பாபாவின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் போன்ற எண்ணற்ற பிரபலங்கள் புட்டபர்த்திக்கு வந்து சிறப்பித்தவர்களில் அடங்குவர். புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய ஆசிரமத்திலேயே சாய் பாபா பெரும்பாலும் தங்கியிருப்பது வழக்கம்.

ஸ்ரீ சத்திய சாய் பாபா அவர்கள், ஒரு இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்டவர் ஆவார். இவருடைய ஆன்மீகப் பற்றில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள் அவரை, கடவுளின் அவதாரமாகவே கருதினர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் ஏராளமான இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவைகள் புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகம்முழுவதும் செயல்பட்டு வருகின்றது. 

அற்புதங்கள் : அவர் படிக்கும் பொழுது, தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்து நண்பர்களுக்குக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். ஒரு நாள் தன்னுடைய வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். ஆனால் அவர் நான்தான் “சாய் பாபா” என்றும், ‘சீரடிசாய் பாபாவின் மறுஜென்மம் நானே!’ என்றும் கூறினார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே பரவத் தொடங்கியது. அவர் பலரும் வியக்கதக்க வகையில் “விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம்” போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால்,  பக்தர்கள் அவரைத் தேடி வர ஆரம்பித்தனர். மேலும், பக்தர்களுக்கு வியக்கதக்க வகையில் விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்தனர்.

1940 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவருடைய ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை கடவுளின் அவதாரம் எனக் கருதி, 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர். பின்னர் 1954 ஆம் ஆண்டு, அங்கு ஒரு சிறு மருத்துவமனையைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். மேலும், இவருடைய பெயரில் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்களில் சேவைப் புரிந்து வருகிறது.

பகவான் சத்திய சாய் பாபா அவர்களுக்கு சுமார் 100 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உலகம் முழுவதும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இவருடைய ஆன்மீக பக்தியில் ஈடுபாடு கொண்ட பல தலைவர்களும், பிரதமர்களும், கிரிக்கெட் வீரர்களும், திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளும், வர்த்தகர்களும் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் மேலும் கோடிக்கணக்கான பக்தர்களும் இவரை இன்றைக்கும் கடவுளாக வழிபாடு செய்து வருகின்றனர்.

சத்திய சாயிபாபா நிறுவனம் தனது சாயி அமைப்புகள் மூலம் இலவச மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், கிராமங்களுக்கு குடிநீர்த் திட்டம் போன்ற பல சமூகநலத் திட்டங்களை இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. இவரது ஏறத்தாழ 1200 சத்ய சாய் அமைப்புகள் 114 மையங்களில் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. இவரின் வழிநடப்பவர்கள் சுமார் 60 இலட்சம் பேர் (1999 இல்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் 100 கோடி அடியார்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

திறக்கும் நேரம் : காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை  திறந்து  இருக்கும்.  

அருகில் உள்ள ரயில் நிலையம் : ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி 8 கி.மீ 

அருகில் உள்ள விமான நிலையம் : பெங்களூர்   120 கி.மீ  

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×