ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம்





	


	



























	




 




	








 




8:56:31 PM         Friday, May 15, 2026

ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம்

ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம்
ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம் ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம்
Product Code: ஸ்ரீராகவேந்திரர் - மந்த்ராலயம் - ஆந்திரபிரதேசம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


மந்த்ராலயம் - ராகவேந்திரர்

இருப்பிடம் : இந்தியாவின் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்த்ராலயம் நகரம், கர்நாடக எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம்  அமைந்துள்ளது. 

ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி (மாஞ்சாலி) எனப்படும் மந்த்ராலய கிராமம்.  இது 'மன்ச்சாலே' என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. 

சிறப்புகள் : இவர்வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.

சங்கு கர்ணன் என்ற தேவன் ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறந்தார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரகலாதன் அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

வாழ்க்கை வரலாறு  :  ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். வேங்கடநாதர்  திம்மண்ண பட்டர் மற்றும் கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மூன்றாவதாக  தமிழ் நாட்டில்  சிதம்பரத்தை  அடுத்த புவனகிரியில் பிறந்தார். அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர். வேங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில்பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர்கும்பகோணத்திற்க்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். 

வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வேங்கடநாதரை சந்தனம் அரைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும்போது 'அக்னி சூக்தம்' என்ற தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வேங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவறை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கெளரவித்தும் அனுப்பினார். வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்க்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார். வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார். பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.

சொற்பொழிவுகள்  : சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும் சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.

கோவில் அமைப்பு  : குரு ராகவேந்திரசுவாமிகள் நடுவில் வீற்றிருக்க அவரைச் சுற்றி புரந்தரதாசர் உள்ளிட்ட இசை விற்பன்னர்கள் இசை கச்சேரி நிகழ்த்துவது போன்று தீட்டப்பட்டிருக்கும் ஓவியம். இந்த ஓவியம் ராகவேந்திரசுவாமி கோயில் உள்ளே காணப்படுகிறது. பாம்பின் மீது நடனமாடும் கிருஷ்ணர் ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடும் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலை. மன்ச்சாலே அம்மன் ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயில் செல்வதற்கு முன் இந்த மன்ச்சாலே அம்மனை தரிசித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். ஸ்ரீ குரு ராகவேந்திரசுவாமி கோயிலுக்கு அருகே அமைந்துள்ள சிவன் கோயில்.

திருவிழாக்கள்:  காரத் திருவிழா என்று அறியப்படும் மஹராஷ்டோதரம் மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமி கோவிலில் பெரும் ஆடம்பரமாகவும் கவர்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி அத்ரநஸ்தவம் மற்றொரு புகழ் பெற்ற விழாவாகும். ரகுவேந்திர சுவாமி கோவிலில் தனுர்மாச மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

திறக்கும் நேரம் : காலை  6.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  மந்த்ராலயம் சாலை  16 கி.மீ 

அருகில் உள்ள விமான நிலையம் :  ஹைதராபாத் 263 கி.மீ  

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×