அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




10:18:04 AM         Thursday, October 01, 2026

அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு

அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு
அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு
Product Code: அய்யா வைகுண்டநாதர் - மருந்துவாழ்மலை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அய்யா வைகுண்ட நாதர்- மருந்துவாழ் மலை

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  மருந்துவாழ் மலை நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கே இம்மலை அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்கோடி முனையான இதனருகில் அய்யா நாராயணசாமி ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். 

இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில் விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று என்று இங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மலையில் சுமார் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ள பிள்ளைத்தடம் எனும் குகையில் ஸ்ரீ நாராயணகுரு சில ஆண்டுகள் தவமிருந்து மெய்யறிவு பெற்றார். இது ஒரு கிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையில் தீபம் ஏற்றப்படும்.

வாழ்க்கை வரலாறு  :  கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார்- வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு ' முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டினர். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றினர். அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிந்தனர். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடந்தது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணந்தார். 

இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்றார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயார் கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறினார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றார் . ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார். மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளியே வந்தார். ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் சென்றாள். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக  உலகில் அவதரித்திருப்பதாகவும் கருதுகின்றனர். வெயிலாள் இவ்விடத்திலேயே விழுந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை மூலம் அறியலாம். வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் அமைந்துள்ளது. 

ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் : இந்த ஊரில் ஸ்ரீ நாராயணகுரு போதித்த சாதி, சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் உருவாக்கப்பட்ட சதயபூஜா சங்கத்தின் நிர்வாகத்தில் 1992 ஆம் ஆண்டில் ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் எனும் பெயரில் மடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ நாராயணகுரு பிறந்த சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ நாராயணகுரு மெய்யறிவு பெற்ற மருத்துவாமலை பிள்ளைத்தடம் குகையில் சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடத்தப் பெறுகின்றன. ஸ்ரீ நாராயணகுரு மேல் பற்றுடையவர்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கடைசி இரு நாட்கள் சிவகிரி தீர்த்தப் பயணத்தின் போது மருத்துவாமலைக்கும் வந்து செல்வதால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுடன் ஆன்மிக வழிகாட்டுதலும் செய்யப்படுகின்றன.

அய்யா வைகுண்டர்  இறைவன் கலியுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது.  பூசை, சிலைவழிபாடு, பேய்வழிபாடு, பலியிடுதல், காணிக்கை செலுத்துதல், யாகம் முதலியவற்றை நடத்தக்கூடாது. இவைகளினால் எந்த பலனும் இல்லை. மூடப்பழக்கத்தையும், வெற்று சடங்குகளையும் வளர்த்து மக்களை அறிவில்லாதவர்களாகவும், அறியாமையிலும் வைத்து தாங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்க உதவியாக இருக்கும் விக்கிரக வழிபாட்டை அய்யா மறுத்தார். தனது வழியை பின்பற்றுபவர்கள் விக்கிரகங்களை வழிபடுவதை எதிர்க்கவும், மறுக்கவும் கட்டாயமாக்கினார்.

அய்யாவழி முறையில் கண்ணாடி வைத்து இருபக்கமும் இரண்டு குத்துவிளக்குகள் வைத்திருக்கப்படும். அய்யாவழியினர் அந்த கண்ணாடியை பார்த்து தான் வணக்கம் செலுத்துவர். "மனிதன் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது" என்ற உயரிய கோட்பாட்டை கண்ணாடி முன் நின்று வணங்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே காண அய்யா வழிவகை செய்தார்.
அய்யாவழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' அல்லது 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார்.

அருகில் உள்ள ரயில் நிலையம் :  கன்னியாகுமரி 10 கி.மீ  

அருகில் உள்ள விமான நிலையம் :   திருவனந்தபுரம்   

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×