ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




8:56:00 PM         Friday, May 15, 2026

ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு

ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு
ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு
Product Code: ஸ்ரீரமணமஹரிஷி - திருவண்ணாமலை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

ரமண மகரிஷி

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ரமண மஹரிஷியின் அசிரமம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ.  தொலைவில் அமைந்துள்ளது. 

வாழ்க்கை வரலாறு  :  திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் மதுரை அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1879ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி பிறந்தவர். இவருடைய பெயர் வேங்கடரமணா. இவர் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு தாயுடன் மதுரையில் உள்ள தனது மாமாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். வேங்கடராமனுக்கு 12 வயது நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தந்தையார் சுந்தரமய்யர் காலமானார். அவர் மறைவால் குடும்பம் நிலைகுலைந்தது. சுந்தரம்மய்யரின் இளைய சகோதாரர்கள் சுப்பய்யரும், நெல்லையப்பய்யரும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். வேங்கடராமன் மதுரை அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூலில் உயர்கல்விக்காகச் சேர்க்கப்பட்டான். ஆனாலும் படிப்பை விட சக மாணவத்தோழர்களுடன் விளையாடுவதும், நீந்துவதும், குஸ்தி போடுவதும் ஆடிப்பாடுவதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்தது.

இங்கு தான் அவர் மாமாவின் வீட்டிற்கு திருவண்ணாமலையில் இருந்து வந்த மாமாவின் நண்பரை சந்தித்தார். மாமாவின் நண்பர் திருவண்ணாமலை பற்றி கூறிய சில விஷயங்கள் இவரை ஈர்த்தது. இவர் அருணாச்சலேஸ்வரரை காண திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்ற எண்ணம் இவர் மனதில் குடியேறியது.விரைவில் அவர் தன் தாயாருடன் திருவண்ணாமலை புறப்பட்டு சென்றடைந்தர். இங்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டுகொண்டுள்ளதால் பல நாட்கள் தொடர்ச்சியாக தியானத்தில் இருந்தார். இவருடைய தெய்வீக போதனைகள் பலரை ஈர்த்தன. அவர் 58 வருடத்தில் நிர்வாண அடைந்த சமயம் பல லட்சம் பக்தர்கள் இவருடைய சீடர்களாக இருந்தனர். இன்றும் இவருடைய தீவிர பக்தர்கள் இவர் அருளாசி பெற திருவண்ணாமலையில் உள்ள இவருடைய ஆசிரமத்திற்கு வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவருடைய பல பக்தர்கள் குறிப்பாக சிவராத்திரியன்று இவர் ஆசிரமத்திற்கு வருவதுண்டு. ரமண மகரிஷி மக்கள் மத்தியில் அவர்  இறந்த பின்பும் அவருடைய சிந்தனைகள் மற்றும் ஆன்மீக சக்தியால் பக்தர்களிடையே அவர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார். 

1950 ஏப்ரல் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை, பக்தர் பெருந்திரள் அணிவகுப்பில் பகவானைத் தரிசித்து முடிந்து பின்னர், அந்திப் பொழுதில், தமதுடலை நிமிர்த்தி உட்காரவைக்கும் படி பணி செய்வோரை பகவான் கேட்டுக் கொண்டார்.  அவர்கள் அவ்வாறே செய்தனர்.  டாக்டர்கள் பிராணவாயுவை பகவானது நாசிப்பக்கம் காட்டத் தொடங்கவும், திறந்த வலக்கையின் குறிப்பால், பகவான் அதை நிறுத்துமாறு பணித்தார். சிறிது நேரத்தில் மூச்சின் இயக்கம் அமைதியாக நிற்க, உடலும் அசைவற அனைத்தின் இதயமாய் இடையறாது சுடரும் அகண்ட சிவஸ்வரூபமாம் பகவான் மறைப்பறத் தனித்து நின்றார்.
பக்தர்கள் பகவானது திருமேனிக்குக் கற்பூரவொளி காட்டி, பத்மாசனத்திலிருத்தி, மலர்மாலைகள் சூட்டி, மாத்ருபூதேசுவரராலயத்தின் மஹா மண்டபத்தில் அமர்வித்தனர்.  அன்பர்களின் ஆர்வம் அன்றிரவு முழுவதும்  வேதகோஷமும் அருணாசல சிவ ஸ்துதியும் பகவத் ஸ்துதியமாகச் சேர்ந்து திரண்டு ஓயாதொலித்தது.  மறுநாள் தாயார் ஆலய, வடபுறம் திருச்சமாதி செய்விக்கப்பட்டது.  பின்னர் ஆலயம் அமைந்தது.

கோவில் அமைப்பு : புதிய மண்டபத்தில் ரமண மகரிஷியின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கல் சிலை நன்கு இழைக்கப்பட்டு கருப்பு நிறத்தில் உள்ளதால் பளிங்கு கல்லால் செய்ததை போல காண்பதற்கு மிகவும் கம்பீரமாக தோற்றமளிக்கிறது. இங்கு கட்டப்பட்ட புதிய மண்டபத்தில் வருடந்தோறும் வரும் நிறைய பக்தர்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது. ரமண மகரிஷி உயிர் வாழ்ந்த காலத்தில் இந்த புதிய மண்டபத்தில் சில நாட்கள் இங்கு தங்கினார். மற்றுமொரு கோபுரம் மாத்துரு புதேஸ்வர கோயில் மீது அமர்த்தப்படுள்ளது. இக்கோயில் உள்ளே செல்ல புதிய மண்டபத்தின் மேற்கு புறத்தில் உள்ள நுழைவாயில் வழியாக செல்லலாம். இந்த கோயில் புகழ் பெற்ற சிற்பி வைத்தியநாத ஸ்தப்பதினால் கட்டப்பட்டது. இங்கு வழிபடும் கடவுள் சிவலிங்கம் மற்றும் சக்கரமேரு ஆகும். 

இக்கோயில் வெளிப்புற கற்பகிரகங்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், லக்ஷ்மி, மற்றும் விஷ்ணு உருவங்கள் பொருத்தப்படுள்ளது. இச்சிலைகள் யாவும் கைதேர்ந்த வினைநர்களால் செய்யப்பட்டு உயிரோட்டத்துடன்  உள்ளது. மேலும் கணேசாவின் சிலை தென்மேற்கு திசையிலும் முருகன் சிலை வடமேற்கு திசையிலும் நிறுவப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரியின் சிலை புது மண்டபத்தின் வடபுறம் நிறுவப்பட்டுள்ளது. வடகிழக்கு திசையில் நவகிரகங்கள் நிறுவப்பட்டுள்ளது. கற்பகிரகத்தை நோக்கி நந்தி உள்ளது. மேலும் இந்த மண்டபத்தின் தூண்கள் அனைத்திலும் வெவ்வேறு இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ரமண மகரிஷியின் சமாதி மீது அழகிய மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நான்கு தூண்கள் நிறுத்தப்பட்டு அதன் மேல் ஓர் விமானம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நான்கு தூண்களும் சலவைகற்களால் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் நடுப்புறத்தில் வெள்ளை நிற பளிங்கினால் செய்த அழகிய தாமரை அலங்கரிக்கிறது. இந்த அழகிய தாமரையின் மேல் சிவலிங்கம் அமர்த்தப்பட்டு மிகவும் கம்பீர தோற்றமளிக்கிறது. இந்த சமாதியில் மேலும் ஒரு பெரிய அளவில் தியானமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் இங்கு அமர்ந்து சௌகரியமாக தியானம் செய்ய வசதியாக உள்ளது. இதனை அடுத்துள்ள பழைய மண்டபத்தில் தான் ரமண மகரிஷி தன் கடைசி நாட்களை தியானத்தில் கழித்தார். நீண்ட நேரம் தியானத்தில் உட்காரும் பக்தர்கள் அனைவரும் இந்த பழைய மண்டபத்தை தான் விரும்புவார்கள். இந்த மண்டபத்தின் வடக்கு திசையில் தான் அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு புறத்தில் ஏழைகளுக்காக இலவச மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. கிழக்கு புறத்தில் உள்ள பாதை சமையலறை மற்றும் உணவருந்தும் மண்டபத்தை சென்றடைகிறது. மலையின் வடபுறதிலுள்ள இப்பாதை ஸ்கந்தஸரமம் சென்று அடைய உதவுகிறது. இங்கிருக்கும் உணவருந்தும் மண்டபம் சுமார் ஆயிரம் பக்தர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவு எடுத்துக்கொள்ள சௌகரியமாக உள்ளது. பெரும்பாலும் ரமண மகரிஷியின் பிறந்த நாட்களில் பக்தர்களுக்கு உணவு படைக்க இந்த உணவருந்தும் மண்டபமும் சமையலறையும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள வேத பாடசாலைக்கு இந்த உணவு மண்டபத்திலிருந்தும் சென்றடையலாம்.

ரமண மகரிஷியின் நிர்வாண அறை : இந்த அறையானது புதிய மண்டபத்திற்கு கிழக்குபுறத்தில் உள்ளது. இந்த அறைக்கு வடக்குபுறத்திலுள்ள அறையில் தான் அநேக நாட்களை ரமண மகரிஷி கழித்தார். பக்தர்கள் அனைவரும் இந்த அறைக்கு தவறாமல் வந்து அவர்கள் பிரார்த்தனையை செலுத்துகின்றனர். இந்த அறைக்கு தெற்குபுறத்தில் ரமண மகரிஷியின் அம்மாவின் சமாதி உள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்கள் வந்து தங்குவதற்கு வசதியாக நவீன அறைகள் கட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது. இந்த அறைகளை சுற்றிலும் அடர்த்தியான மரங்கள் மேலும் இந்த இடத்திற்கு அழகை கூட்டுகிறது. இதை தவிர இங்கு ஓர் சிறந்த நூலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு ரமண மகரிஷியின் வாழ்கை மற்றும் ஆன்மீக சிந்தனை என பல்வேறு புத்தகங்கள் பக்தர்கள் வசதிக்காக வைக்கபட்டுள்ளது. 

கந்தாசிரமத்திலிருந்து மகர்ஷிகள் அடிக்கடி மலை அடிவாரத்திலுள்ள அன்னையின் சமாதிக்குப் போய் வருவது வழக்கம்.  ஒரு நாள் அங்கே சென்றவர் மலைக்குத் திரும்பவில்லை.  அது முதல் அங்கேயே தங்கலானார்.  அந்த இடமே இப்போதுள்ள ஆசிரமமாக விளங்குகிறது. 

இதன் பின் ஸ்ரீ ரமண மகர்ஷிகளின் உபதேசம் நாடெங்கும் பரவி, இந்தியாவுக்கு அப்பாலும் புகழ் பெறத் தொடங்கியது.  பகவான் இங்கே வந்தபோது மாத்ரு லிங்கத்தின் மேல் ஒரு கூரைக்கட்டிடமே இருந்தது.  பிறகு வேறு சில கூரைக்கட்டிடங்கள் ஏற்பட்டன. இங்கு அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி தினத்தன்றும் பிரதி மாதம் அனைத்து முதல் நாட்களிலும் சக்கர மேரு பூஜை நடைபெறும். 

திறக்கும் நேரம் : காலை  6.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  திருவண்ணாமலை 2 கி.மீ  (விழுப்புரம்-காட்பாடி)

அருகில் உள்ள விமான நிலையம் :   சென்னை 185 கி.மீ  

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×