ஸ்ரீகிருபானந்தவாரியார்





	


	



























	




 




	








 




3:16:33 AM         Saturday, May 16, 2026

ஸ்ரீகிருபானந்தவாரியார்

ஸ்ரீகிருபானந்தவாரியார்
ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார் ஸ்ரீகிருபானந்தவாரியார்
Product Code: ஸ்ரீகிருபானந்தவாரியார்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

கிருபானந்தவரியார்

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே 4 கி.மீட்டர் தொலைவில் கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் புனித கல்லறையானது பாலர் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவில் அமைப்பு  : திருக்கோவில் பிரதான மண்டபம் நுழைந்தவுடன், முந்தைய நாட்களில் கட்டப்பட்ட "சரவணப்பொய்கை " வடிவில் கட்டப்பட்டுள்ளது. இடதுபுறத்தில், ஒரு கமண்டலம் ஒரு கந்தந்தாளையுடன் வரியார் ஸ்வாமிகள் சிலை, ஒரு சிறிய மண்டபத்தில் நின்ற ஒரு விக்கிரகத்தை காணலாம்.

திருக்கோயிலின் பிரதான மண்டபம் முறையே 59 அடி நீளமும் 46 அடி நீளமும் கொண்டது.  அங்கு ஸ்வாமிகரின் தரிசனத்தை ஒரு புத்துணர்ச்சியுடனும், புன்னகையுடனும் காணலாம். அறுபது கோபுரங்களின் ஆறு முகங்களின் ஒவ்வொரு முகமும் 7 செ.மீ. மற்றும் 22 அடி உயரத்துடன் செவ்வக வடிவங்கள் கொண்டது. இவ்வாறு அறுகோண கோயிலின் முகங்கள் இறைவன் ஆறுமுகனின் ஆறு முகங்களை பிரதிபலிக்கின்றன. சமாதி 6 அடி, 3 அடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்  முன்பு விளக்கு ஒன்று எரிகிறது. திருக்கோயிலின் மொத்த பரப்பளவு 139 அடி நீளமும் 102 அடி அகலமும் கொண்டது. கோவில் வளாகத்தின் கூரை 36 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தை சுற்றி செல்ல, ஒரு பசுமையான புல்வெளி மத்தியில் சுத்தமான மற்றும் அழகிய பாதையை அமைத்து மின்சார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு  : வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக ஆகஸ்ட் 25, 1906 அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப்பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். 1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் லண்டன் பயணமானார். 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி இந்தியா வரும் போது 87 வயதில் விமானப் பயணத்திலேயே காலமானார். 

சொற்பொழிவு :  தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.  

ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், மகனை அனுப்பிவைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது. சொற்பொழிவுக்கு நடுவே, குழந்தைகளிடம் ஆன்மிக கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு விபூதி, சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை அன்புப் பரிசாகத் தருவார். இதற்காகவே முன்வரிசையில் இடம்பிடிக்க சிறுவர்கள் போட்டிபோடுவார்கள். குழந்தைகளுக்குத் தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான்.  தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ படத்துக்கு வசனம் எழுதினார். துணைவன், திருவருள், தெய்வம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். எம்ஜிஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான். வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். 
பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக "மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது" என்று சொல்வதுண்டு. 

19 வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார். 

சிறப்பு பூஜைகள் : காலை 7.00, 11.30, மாலை 7.00 மணிக்கு

அருகில் உள்ள ரயில் நிலையம் :  காட்பாடி 4 கி.மீ  

அருகில் உள்ள விமான நிலையம் :   சென்னை 137 கி.மீ  

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 


               

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×