ஸ்ரீஅருணகிரிநாதர்





	


	



























	




 




	








 




8:20:30 PM         Friday, May 15, 2026

ஸ்ரீஅருணகிரிநாதர்

ஸ்ரீஅருணகிரிநாதர்
ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர் ஸ்ரீஅருணகிரிநாதர்
Product Code: ஸ்ரீஅருணகிரிநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அருணகிரிநாதர்
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிக்கு மேற்கே 9 கி.மீ. தொலைவில் குமார வயலூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இத்தலத்தில் தான் அருணகிரிநாதருக்கு  இறைவன் திருப்புகழ் பாடக்கூடிய ஆற்றலையும் அறிவையும் அருள்புரிந்தார் எனக் கூறப்படுகிறது. அருணகிரி நாதருக்கு நாவில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தனது வேலால் எழுதி கவிபாடும் ஆற்றலைத் தந்தார். 

இறைவன் : ஆதிநாதர்

இறைவி :ஆதிநாயகி

தீர்த்தம் : சக்தி தீர்த்தம்

தலவிருட்சம் : வன்னி மரம்

வாழ்க்கை வரலாறு : சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர். மூத்தபெண் ஆதிக்கு நான்கைந்து வயதாக இருக்கும் போது முத்துக்கு இரண்டாவது குழந்தையாக அருணகிரி என்ற ஆண்குழந்தையை ஆனிமாத  மூல நட்சத்திரத்தில் பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் காசியாத்திரை கிளம்பினார் திருவெண்காடர்.  யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. அத்துடன் விரைவிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டாள். எனவே  முத்தம்மைக்கு ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை.  இந்த நிலையில் முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். மரணம் நெருங்குவதை அறிந்துகொண்ட அவள் தன் மகள் ஆதியை நான் சேர்த்துவைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். ஆதி தன் தம்பியை வளர்க்கும் அழகைப் பார்த்துத் திருவண்ணாமலையே வியந்தது. அருணகிரிநாதர் இளமையிலேயே தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றார். வீட்டை விட்டே வெளியேறி தன் வாழ்க்கையை முடித்து கொள்ள திருவண்ணாமலை கோவிலின் உச்சிக்குச் சென்றார். அப்போது அங்கு தோன்றி அவரை தடுத்த கந்தன் அவருக்கு உபதேசம் வழங்கினார். 

தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார்.இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர். தென்னிந்தியாவை சுற்றியுள்ள புன்னிய ஸ்தளங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட இவர் 60,000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். நல்லொழுக்கம், நீதி ஆகியவற்றை பறைச்சாற்றும் பாடல்களில் கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவுடன் இயற்றி புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தினார். 

சிறப்புக்கள் : அக்னிதேவன்,அருணகிரிநாதர்திருமுக கிருபானந்த வாரியார் ஆகியோர் போற்றி வணங்கிய தலம்.இத்தலம்  முருக பெருமான் தலமாக இருந்தாலும், சன்னிதானத்தில் மூலஸ்தானத்தில் ஆதிநாதராக சிவபெருமான் இருக்கிறார். அவருக்கு பின்புறமே முருகபெருமான் வள்ளி தேவசேனாவுடன் காட்சி தருகின்றார். தந்தைக்கு பிரணவ மந்திரத்தைப் போதித்தவர் என்றாலும், தந்தையை மாணவனாக ஆக்கிய தோஷப் பரிகாரத்திற்கு  இங்கு தான், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த கோவில் சன்னிதானம் அமைந்துள்ளது. சுப்பிரமணிய சுவாமி ஒரு முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கின்றார். மயில் வாகனம் அம்பாள் தெய்வானையின் பக்கம் திரும்பியுள்ளது சிறப்பம்சம் ஆகும். 

மேலும் இத்தலத்தில் அருள்மிகு முத்துக்குமார சுவாமி, அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ அருணகிரிநாதர், அருள்மிகு மஹாலெஷ்மி, அருள்மிகு விஷ்ணுதுர்க்கை, அருள்மிகு சண்டேசுவரர் மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள உற்சவ மூர்த்திகளில், ஸ்ரீ முத்துக்குமார சுவாமி, சதுர தாண்டவ நடராஜர் மூர்த்தங்கள் கலை நயம் மிக்கவை. வசந்த மண்டபம், தியான மண்டபம், முன்மண்டபங்கள் மற்றும் இரண்டு திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதி மாடி மண்டபம் ஆகியவை உள்ளன. சிறிய சட்டத்தேர் ஒன்று மட்டும் உள்ளது. வைகாசி விசாக சுவாதி நட்சத்திரத்தன்று இத்தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

தல வரலாறு : சோழமன்னன் ஒருவன் இங்கு தன்பரிவாங்களோடு வேட்டையாட வந்தார். தாகம் எடுக்கவே தண்ணீர் தேடி அலைந்தான். இங்கு கரும்பு ஒன்று மூன்று கிளைகளுடன் இருக்கவே, அதை ஒடித்து சாற்றை அருந்தி தாகம் தீர்க்க எண்ணினார். ஒடித்தவுடன் அந்த கரும்பிலிருந்து ரத்தம் கசியவே, அந்த இடத்தை தோண்டினார். அங்கு ஒரு சிவலிங்கம் இருக்கவே அதை எடுத்து இங்கு பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது.

அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தன் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது, காப்பாற்றி முத்தைத்திரு என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அசரீரி குரல் கொடுத்தார். முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர் தோன்றி அசரீரி உண்மையே என்று கூறி சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி அருளினார்.

அருணகிரிநாதருக்குகாக தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய பின்னர், அருணகிரி நாதருக்கு குஷ்டநோய் பூரணமாககுணம் ஆனது. அவரது நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னரே, அருணகிரிநாதர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார்.

தைப்பூசத்தன்று, அருகிலுள்ள 4 கோவில் சுவாமிகளும் ஒன்று சேர்ந்து பஞ்சமூர்த்திகளாக காட்சி தருவர். மேலும் சில அபூர்வமான நடராஜர் சிலையையும் இங்கு காணமுடிகிறது. அனைத்து கோவில்களிலும் நடராஜர் ஆடிய கோலத்திலேயே காலைத் தூக்கி வைத்தபடிதான் காணமுடியும். இங்கு இருகால்களையும் தரையில் ஊன்றிய நிலையில், சடாமுடி முடியப்பட்டும், கால்களின் கீழே முயலகன் இல்லாத, ஆரம்ப நிலையில், சதுர தாண்டவ நடராஜர் என்ற நாமத்துடன் காணப்படுவதும் சிறப்பு. இவருக்கு மார்கழி மாதம், திருவாதிரைத் திருநாள் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்கு விநாயகர் பொய்யா கணபதி விசேஷ மூர்த்தியாகவும் காட்சி தருகிறார். 

முருகனின் வாகனமான தேவமயில் இங்கு வடக்கு பக்கம் நோக்கி உள்ளது. ஆதி நாயகி என்ற பெயரில் அன்னை பார்வதி தெற்கு பார்த்து அபூர்வமாக இருக்கிறார். மற்ற தலங்களில் முருக பெருமான் தாய் தந்தையரை தனித்து நின்றே பூஜை செய்வார். இத்தலத்தில் முருகன் வள்ளி, தெய்வவானையுடன் சேர்ந்து இருந்து பூஜை செய்வதால் தனி சிறப்பு வாய்ந்தது.

திறக்கும் நேரம் : காலை  6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மதியம் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்து இருக்கும்.  

அருகில் உள்ள ரயில் நிலையம் :  திருச்சி

அருகில் உள்ள விமான நிலையம் : திருச்சி

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×