வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்)





	


	



























	




 




	








 




10:21:37 PM         Saturday, May 02, 2026

வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்)

வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்)
வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்) வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்)
Product Code: வள்ளலார் (எ) இராமலிங்கஅடிகள் (தாயுமானவர்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

வள்ளலார் திருக்கோவில்- வடலூர் 

இருப்பிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  கடலூரிலிருந்து சுமார் 37 கி மீ தொலைவில் வடலூர் வள்ளலார் திருக்கோவில் உள்ளது.

மூலவர் : இராமலிங்க அடிகளார்

தீர்த்தம் : தீஞ்சுவை 

சிறப்புக்கள் : இராமலிங்க அடிகளார் , திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர். ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. இவர் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே. இவர் அனைத்து மத நல்லிணக்கத்திற்காக  சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர். அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது. வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது. 

1872  ம் ஆண்டு ஜோதி தரிசனத்தை துவக்கினார். தை பூசத்தின் அன்று ஏழு திரை விலகிய நிலையில் ஜோதி தரிசனத்தை காணலாம். அன்று காலை 6.30 மணி, காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, மறுநாள் காலை  5.30 மணி ஆகிய வேளைகளில் ஜோதி தரிசனத்தை காணலாம். மாதம் தோறும்  பூச நட்சத்திர நாட்களில் இரவு 8.00 மணிக்கு ஆறு திரை விலகி மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.

வாழ்க்கை வரலாறு : இராமைய்யாவுக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் அவருக்கு முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார். 

இராமைய்யா- சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர். ராமலிங்கம் பிறந்த ஆறாவது மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார். புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார். புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார். அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார். பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார். 

பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால வழக்கம்.அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமைய்யா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள். சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது. அந்த சமயம், கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தன்னுடைய தாயின் கரங்களில் இருந்து கொண்டு தரிசித்தார். அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று இடைவிடாமல் சிரித்ததைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர். குருக்கள் வீட்டிற்கு,இராமைய்யா தன் குடும்பத்துடன் சென்றார். தீஷ்தர்,பாய்விரித்து குழைந்தையை கையில் பெற்று, கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தின் காலில் விழுந்து வணங்கினார். 

இக்குழைந்தை சாதாரணக் குழந்தை அல்ல கடவுளின் குழந்தை அருள் ஞானக் குழந்தை, இக்குழந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு அடியேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் தழும்ப வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் இது வரலாற்று உண்மையாகும். 

வள்ளல்பெருமான் சொல்லியதோடு இல்லாமல்,சொல்லிய வண்ணம் வாழ்ந்து காட்டினார். வடலூருக்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்கு  சென்று அங்கேயே  உறையத் தொடங்கினார் அவர் தங்கி இருந்த இடத்திற்கு ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று பெயர்.அவர் அங்கே ஆயிரகணக்கான மக்கள் மத்தியில் நான் இப்போது இந்த அறையில் சென்று இறைவனோடு இரண்டற கலக்கப்போகிறேன்,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ''இந்தக்கதவை சாத்திக் கொள்ளுங்கள்,அப்படி யாராவது  பார்க்க வேண்டும் என்று பார்க்க நேர்ந்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார்,வெறு வீடாகத்தான் இருக்கும் ''என்றும்,நீங்கள் அனைவரும் நான் சொல்லிய வண்ணம் உங்கள் வாழ்க்கையில் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள் நீங்களும் என்னைப் போன்ற பெரிய பேரின்ப ஆன்ம லாபத்தை அடைவீர்கள் இது சத்தியம், இது சத்தியம்.என்று சொல்லி உள்ளே சென்று அமர்ந்து கொண்டார், சித்தி பெற்ற ஆண்டு 30.01.1874,--ஸ்ரீமுக வருடம் தைமாதம் 19 நாள் வெள்ளிக்கிழமை, அப்போது அவருக்கு வயது ஐம்பத்து ஒன்றாகும்.

இராமலிங்க அடிகள் வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

திறக்கும் நேரம் : காலை  6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்து  இருக்கும். 

அருகில் உள்ள ரயில் நிலையம் :  பண்ருட்டி, விருத்தாச்சலம் 

அருகில் உள்ள விமான நிலையம் : புதுச்சேரி 

தங்கும் வசதி: உண்டு 

பேருந்து வசதி: உண்டு 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×