திருப்பரங்குன்றம்





	


	



























	




 




	








 




9:11:08 AM         Sunday, May 03, 2026

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம்
Product Code: திருப்பரங்குன்றம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் தலைநகரான மதுரைக்கு தென்மேற்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவலிங்கம் போல் அமைந்துள்ள இம்மலையில் எழுந்தருளியுள்ள முருகனை சிவனே என்று எண்ணி வழிபடுவோர்க்கு நன்மை கிட்டும் என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

சுவாமி : சுப்பிரமணிய சுவாமி

அம்பாள் : தெய்வானை

தீர்த்தம் : சன்னியாசி தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம்,சரவண பொய்கை,சத்ய கூபம் உட்பட 11 தீர்த்தங்கள்

தலவிருட்சம் : கல்லத்தி

பாடியோர் : நக்கீரர், அருணாகிரி நாதர், சுந்தரர், மாணிக்கவாசகர் 

சிறப்புக்கள் : முருகனின் அறுபடைவீடுகளில் இதுவே முதல் வீடு. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடைவீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடைபெறுவது இன்னொரு சிறப்பு.நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடியது இங்கேதான். இது அறுபடைவீடுகளில் முதல் படைவீடாக விளங்குகின்றது. சூரனை வதைத்து, தேவர்களை சிறைமீட்டு, இந்திரன் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்ட முருகன் இங்கு மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது ஒரு குடைவரைக்கோயில். லிங்க வடிவில் பரங்கிரி நாதரே மூலவர். ஆயினும் கோயிலில் முதலிடம் முருகனுக்கே விநாயகர், விஷ்ணு, துர்க்கை, சனிபகவான் முதலியவர்க்கும் இங்கு கோயில்கள் உள்ளன. கோயிலின் முகப்பு மண்டபத்தில் சிற்பங்கள் நிறைந்த 48 பெருந்தூண்கள் நிற்கின்றன.     

கோயில் அமைப்பு : திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.    

இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.                                                                                                                                                                                                                                                                                                                                 கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும். கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும் சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை. சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில் உள்ளது. திருப்பரங்குன்றத்தின் உச்சியில் காசி விசுவநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது. மலையின் வடமேற்குப் பகுதியில் சமணர் கற்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது.

தல வரலாறு : முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளை அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது. சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773ல் பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில். 

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான்  பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள். திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர்  தேவாரத்தில் பாடியுள்ளார். அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.   முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம். 

இம்மலையின் வடபக்கத்தில் மலையடிவாரத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலுக்கருகில் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது மலையின் கிழக்குப் பக்கத்தில் புதிதாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மலையுச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதற்கு அருகில் ஒரு அழகிய சுனை உள்ளது. இதில் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். சுப்ரமணிய ஸ்வாமியின் கையிலுள்ள வேலை வருடம் ஒரு முறை மலையின் உச்சிக்கு கொண்டு சென்று, அங்கு மேற்படி சுனையில் நீராட்டுவர். கோவிலுக்கு செல்லும் வழியில் சந்நிதித் தெருவில் மயில் மண்டபமும் பதினாறு கால் மண்டபமும் அமைந்துள்ளது. அடுத்து சந்நிதித் தெருவில் கிழக்கு நோக்கி மீனாட்சியம்மை சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சென்று வழிபட்ட பின்னரே முருகன் கோவிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இக்கோவிலின் முன்னர் தான் கந்தசஷ்டியின் போது சூரசம்கார லீலை நடத்திக் காட்டப்படும். 

கோபுர வாயிலைக் கடந்து திருவாட்சி மண்டபத்தில் தான் முருகப் பெருமானின் திருக் கல்யாணமும், அனைத்து விழா நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் முதலியன நடைபெறும். இம்மண்டபத்தின் கிழக்குப் பகுதிக்கு படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், சித்தி விநாயகர் சந்நிதி, இலக்குமி தீர்த்தம், வசந்த மண்டபம், ஒடுக்க மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். இம்மண்டபத்தின் மேற்குப் புறத்தில் வல்லப கணபதி சந்நிதி உள்ளது. இதன் அருகில் மடப்பள்ளியும், சந்யாச தீர்த்தமும் உள்ளது. இத்தீர்த்த நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது. 

திருவாட்சி மண்டபத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்றால் கம்பத்தடி மண்டபத்தை அடைகிறோம். இங்குள்ள கொடிமரத்திற்கு முன்னால் மிகப் பெரிய நந்தியும், நந்தியின் இருபக்கமும் மூஷிகம், மயில் உள்ளன. இவற்றிற்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தின் கீழ் இடது பக்கத்தில் அண்டராபணர், வலம்புரி விநாயகர், பராசல முனிவர் உள்ளனர். இவற்றிற்கு வலது பக்கத்தில் வேதவியாசர், உக்கிர மூர்த்தி மற்றும் சந்தானக் குறவர்கள் நால்வர் உள்ளனர். அருகிலுள்ள மண்டபம் உற்சவர் மண்டபம் ஆகும். வாகனப் பெருமக்களின் நேர் எதிரில் உள்ள உயரமான மேடைக்கு ஏறிச் செல்ல இருபக்கமும் படிகள் உள்ளன. இப்படிகளில் ஏறிச் சென்றால், கிழக்குப் பக்கத்தில் அதிகார நந்தீஸ்வரர், காலகண்டி அம்மை ஆகியோரும், மேற்குப் பக்கத்தில் இரட்டை விநாயகரும் உள்ளனர்.  மகா மண்டபத்தின் கிழக்குப் பக்கத்தில் வீரபாகு முதலான நவ வீரர்களும் தட்சிணா மூர்த்தியும், முருகன் வள்ளி, தெய்வானை, பைரவர், சூரியன், விநாயகர் முதலியோர் உள்ளனர். இம்மண்டபத்தின் மேற்குப் பக்கத்தில் சண்டிகேஸ்வரரும், நடராசர், சிவகாமி அம்மை ஆகியோரும் இவர்களின் உற்சவ மூர்த்திகளும், சிவன் சக்தி முருகன் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். இம் மகாமண்டபத்தின் மேற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் கோவர்தனாம்பிகையின் தனிக் கோவில் உள்ளது. அம்பிகைக்கு மேற்கு பக்கம் உள்ள படிக்கட்டுகள் அருகில் அன்னபூரணி அம்பிகையின் கருவறை உள்ளது. அம்பிகையைச் சுற்றி தேவர்மக்களும், ரிஷிகள் பெருமக்களும் கூட்டமாக தொழுது கொண்டு நிற்கின்றனர். இப்படிக்கட்டுகள் மூலமாகவும், முருகன் சந்நிதானத்திற்குச் செல்லலாம். இம்மகாமண்டபத்தின் கிழக்கில் உள்ள தட்சிணா மூர்த்தி எதிரில் உள்ள படிக்கட்டு அருகில் கஜலெட்சுமியின் கருவறை உள்ளது. இப்படிக்கட்டுகள் மூலமாகவும் முருகன் சந்நிதானத்திற்குச் செல்லலாம். துர்கை எதிரில் உள்ள படிக்கட்டுகள் மூலமாகவும் முருகன் சந்நிதானம் உள்ள அர்த்த மண்டபத்திற்குச் செல்லலாம். இவ்வாறு அர்த்த மண்டபம் செல்வதற்கு மூன்று வாயில்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் இறைவன் லிங்க உருவில் அமர்ந்துள்ளார். இக்கருவறையில் லிங்கத்திற்குப் பின்னால் சிவனும், சக்தியும் அமர்ந்துள்ளனர். இது போல் கோவில்களில் லிங்கத்திற்குப் பின்னால், அம்மையும், அப்பனும் அமர்ந்து காட்சி தருவது, மிகச் சொற்பமான கோவில்களில் மட்டுமே. கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர், அதிகை, வீரட்டானம், வேதாரண்யம், காஞ்சீபுரம், திருவீழிமிழலை ஆகியவை அவற்றில் சிலவாகும். இக்கோவிலில் அம்மை அப்பனுக்கு நடுவில் முருகன் சிறு உருவில் இருப்பது சோமாஸ்கந்த வடிவம் என்பர். இச்சிவனுக்கு சத்தியகிரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.  சிவனின் கருவறைக்கு அடுத்து, விநாயகரின் சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. இவர் கற்பக விநாயகர் எனப்படுகிறார். இவர் தாமரை மலரில் அமர்ந்துள்ளார். இவர் கைகளில் பாசமும், அங்குசமும் இல்லை . மோதகமும் கரும்புமே உள்ளன. இவர் பாதத்தின் அருகில் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரும் கோலத்தில் உள்ளார். இச்சந்நிதியில் பூத கணங்கள் சூழ்ந்திருக்க தேவ தூதர்கள் வாத்தியங்கள் இசைக்க சூரிய சந்திரர்கள் மேலிருந்து வணங்க அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கற்பக விநாயகருக்கு அருகில் துர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. இவர் மகிஷாசுரன் தலை மீது நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தின் மையப் பகுதியில், பிரதான வாயிலை நோக்கி துர்க்கையம்மன் சந்நிதி உள்ளதால், இக்கோவில் துர்க்கையம்மன் கோவிலாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்து முருகப் பெருமானின் கல்யாண திருக் கோலத்தைச் சித்தரிக்கும் அற்புதமான சந்நிதி உள்ளது. முருகப் பெருமான் அமர்ந்த நிலையில் இடது கையை தொடையில் அமர்த்தி வலது கையால் அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் நாரத முனிவர் ஒரு கால் மடக்கி அமர்ந்த நிலையில் முருகப் பெருமானை வணங்கிக் கொண்டு இருக்கிறார்.கருவறையில் முருகனின் இடப்பக்கம் தெய்வானை ஒரு கால் மடக்கி அமர்ந்த இடத்தில் கைகளில் மலருடன் காட்சி தருகிறார். இக்கருவறையின் மேலே, முருகனைச் சுற்றி சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்ரி, வித்தியாதரர்கள் இந்திரன் முதலானோர் காட்சி தருகின்றனர் தெய்வானை அருகில் திருமனச் சடங்கினை நடத்தும் நான்முகன் கலைமகளுடன் சிறிய உருவில் உள்ளார். முருகன் பாதத்திற்குக் கீழ் மேடையில் யானை, மயில், ஆடு, சேவல், ஆகியவற்றுடன் அண்டாபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். 

முருகன் சந்நிதிக்கு அடுத்து கிழக்குப் பகுதியில் பவளக் கனிவாய்ப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் மேற்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார். சிவபெருமானுக்கு நேர் எதிரில் நந்தி இருக்க வேண்டிய இடத்தில இப்பெருமான் உள்ளதால் இவருக்கு மால் விடை என்ற சிறப்புப் பெயர் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு தலங்களில் கிடையாது. இப்பெருமான் இருபக்கமும் சீதேவி, பூதேவி அமர்ந்திருக்க, அருகில் மதங்கமா முனிவர் உள்ளார். 

மகா மண்டபத்திலிருந்து கிழக்குப் பக்கமுள்ள படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி வந்தால் ஆறுமுகப் பெருமானின் சந்நிதியை அடையலாம். இங்கு ஆறுமுகப் பெருமான் ஆறு முகங்களுடனும், பத்து கைககளில் ஆயுதங்களுடனும், இடது கீழ் கையால் “வா ” என்று அழைத்து வலது கையால் அருள்புரிகிறார். இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானைஉள்ளனர். இவருக்கு அருகில் அருணகிரிநாதரும், நக்கீரரும் வணங்கியபடி உள்ளனர். இச்சந்நிதியிலிருந்து இடது புறமாக சென்றால், ஒரு தூணில் ஆஞ்சநேயரும், அவருக்கு எதிரில் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது முருகனும், கருடாழ்வாரும் உள்ளனர். அடுத்து பஞ்ச பூதத்தலங்களின் ஸ்வாமியையும், அம்பாளையும் தரிசிக்கிறோம். அடுத்து திருச்செந்தூர் முருகன், சனீஸ்வரன், சுரத்தேவர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். இங்கு நவகிரகங்கள் இல்லை. சனீஸ்வரர் மட்டும் தனி சந்நிதியில் உள்ளார். இம்மண்டபத்தின் எதிர்புறம் சக்தி விநாயகர், சமயக் குறவர் நால்வர், அறுபத்து மூவர் மற்றும் ஒன்பது தொகையடியார்கள், வித்யா கணபதி, நஞ்சுண்டேஸ்வரர் ஆகியோரைத் தரிசித்து விட்டு, படிகளின் மூலம் கீழிறங்கி, கம்பத்தடி மண்டபம் வந்து, பராசர முனிவரையும், வியாஸரையும் வணங்குகிறோம். பராசர முனிவர் இங்கு வெகு நாட்கள் தவமியற்றியுள்ளதாலும், அவ்வாறு தவம் செய்யும் போது, மீன்களுக்கு இடையூறு செய்த தன் பிள்ளைகளையே மீன்களாகப் பிறக்கும்படி சபித்ததாலும் இத்தலத்தை பராசரஸ்தலம் என்பர்.

மலையடிவாரத்தில் கிழக்கில் உள்ள சரவணப் பொய்கை, தை மாதத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும் . சத்திய தீர்த்தம், மலையுச்சியிலுள்ள காசித் தீர்த்தம், கோவிலுக்குள் சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படும் சந்நியாசி தீர்த்தக் கிணறு, கோவிலுக்குள் உள்ள இலக்குமி தீர்த்தம் ஆகிய ஐந்தும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். தென்பரங்குன்றில் தான் முருகன் கோவில் முன்னர் இருந்தது என்றும், அக்கோவில் பழுதுற்ற பின்னர், வடபுறத்தில் தற்போதுள்ள இடத்தில் கோவில் எழுந்தது என்றும் கூறுவர்.

தமிழ்சங்கபுலவரான நக்கீரர் சிவபெருமானிடம் வாதாடினார். தான் வாதாடிய பாவத்திற்காக அப்பாவத்தினை போக்குவதற்காக தீர்த்த யாத்திரை செல்லும் போது திருப்பரங்குன்றில் உள்ள ஒரு குளக்கரையின் அருகில் உள்ள மரத்தடியில் சிவபூஜை செய்யும் போது ஒரு அதிசயத்தை கண்டார். குளத்தில் ஒரு இலைவிழுந்தது. அவ்விலை இரண்டாக பிளந்து ஒருபகுதி மீனாகவும், மற்றொருபகுதி பறவையாகவும் மாறுவதை கண்டார். இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் சிவபூஜையை மறந்துவிட்டார். அப்போது கற்றமுகி என்ற தூத அரக்கி நக்கிரரை பிடித்து மலையிலே உள்ள ஒரு குகைக்குள் தள்ளிவிட அக்குகையில் ஏற்கனவே 999 பேர் அடைபட்டுகிடந்தனர். நக்கீரரை சேர்த்து 1000 பேர் அடைபட்டுகிடந்தனர். நக்கீரர் இதிலிருந்து விடுபட முருகனை மனமுருக வேண்டி திருமுருகாற்றுப்படை என்ற பாடலை பாடினார். அவர்முன் முருகன் தோன்றி தனது கூர் வேலால் மலையை இரண்டாக பிளந்து கற்றமுகி அரக்கியை கொன்று அவர்களை விடுவித்தார். தேவயானை சமேதராக முருகர் அங்கே அனைவருக்கும் காட்சி புரிந்தார். அவ்விடமே திருப்பரங்குன்றமான இத்தலம் ஆகும்.    

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு இக்கோவில் முருகப் பெருமானும், பவளக் கனிவாய்ப் பெருமாளும் மதுரைக்கு எழுந்தருளி 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து மதுரை மக்களுக்கு ஆசீர் வழங்கித் திரும்புவர். வைகாசி விசாகம் 10 நாட்களும் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி அன்று சந்நிதித் தெருவில் சூரசம்காரம் மக்கள் வெள்ளத்தின் நடுவே செய்து காட்டப்படும். கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை விழா 10 நாட்களும் தை மாதத்தில் கார்த்திகை திருவிழா 10 நாட்களும், பங்குனிப் பெருவிழா 14 நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவிழாக்கள் : வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்.

திருக்கோவில் காலை 5.30 மணி முதல் 1 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : மதுரை

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு                                                                                                                                                                                                 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×