சுவாமிமலை





	


	



























	




 




	








 




8:04:47 AM         Sunday, May 03, 2026

சுவாமிமலை

சுவாமிமலை
சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை சுவாமிமலை
Product Code: சுவாமிமலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                               சுவாமிநாத சுவாமி திருக்கோவில், சுவாமி மலை

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்று அழைப்பர். இக்கோவில் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடு ஆகும்.இத்தலத்திற்கு 'திருஏரகம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

சுவாமி : அருள்மிகு சுவாமிநாத சுவாமி

அம்பாள் : வள்ளி, தெய்வானை

தீர்த்தம் : வஜ்ரதீர்த்தம்,குமாரதாரை தீர்த்தம்,சரவண தீர்த்தம்,நேத்திரபுஷ்கரணி,பிரம்மதீர்த்தம்

தலவிருட்சம் : நெல்லி மரம்

பாடியோர் : நக்கீரர்-திருமுருகாற்றுபடை, அருணகிரிநாதர்-திருப்புகழ்தியாகராஜ தேசிகர் - நவரத்தின மாலை , கபிஸ்தலவேலய்யர்-திருஏரக எமக அந்தாதி.

சிறப்புக்கள் :  சிவ பெருமானுக்கு, முருகன் பிரணவப் பொருளை உபதேசித்த தலம். சுவாமிநாத சுவாமி இடது கையை தொடையில் வைத்தும், வலது கையை தண்டத்துடன் நின்ற திருக்கோலம். பீடம் சிவலிங்கத்தின் ஆவுடையராகவும் இருக்கும். இங்கு தமிழ் வருட தேவதைகள் 60 படிகளாகஅமைந்துள்ளன. சுவாமி சன்னதிக்கு நேரில் யானை வாகனமாக உள்ளது. இது தேவேந்திரனால் வடிவமைக்கபட்ட ஐராவதமாகும். இது கோயிலின் தொன்மையைக் காட்டுகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமை மாலையில் வைரவேல் மற்றும் தங்க கவசமும், செவ்வாய்க்கிழமை மாலையில் சொர்ண புஷ்ப சகஸ்ரநாம மாலையும் சாத்தபடுகிறது. முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன்சுவாமி' எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றோறு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது.  

தலவரலாறு : கைலையிலே ஒருசமயம் பாலகுமாரன் நவகுமாரர்களோடு விளையாடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த இந்திரன், தேவர்கள் ஆகியோர் அவரை வணங்கிவிட்டு சென்றனர். ஆனால் பிரம்மன் மட்டும் வணங்கவில்லை. சிறுவன் தானே என்று எண்ணி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். அவருடைய செருக்கை அடக்க, குமாரன் அங்கே ஒரு திருவிளையாடல் புரிந்தார். வேதன் என்ற பெயர் கொண்ட பிரம்மாவை வேதம் கூறுக என்று கேட்டார். பிரம்மன் ஓம் என்று ஆரம்பிக்க உடனே முருகன் இந்த ஓம் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று கேட்க, பிரம்மனுக்கு பொருள் தெரியாது போக, பிரணவத்தின் பொருள் தெரியாதவர் படைக்கும் தொழிலை கையாளக்கூடாது என்று பிரம்மனை சிறையிலடைத்தார் குமாரன். பின்பு பிரம்மன் தொழிலான படைக்கும் தொழிலை தானே செய்தார். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, பின்பு முருகன் பிரம்மனை விடுவித்தார். பின்பு ஈசன் குமாரனிடம் அந்த பிரணவத்தின் விளக்கத்தை தனக்கு உபதேசிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். முருகன் ஈசனின் மடியில் அமர்ந்து அவரது காதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை கூறுகிறார். தகப்பனுக்கே உபதேசித்த காரணத்தினால் இத்தலத்தில் முருகன் தகப்பன்சாமியாக எழுந்தருளியுள்ளார். இதன் காரணமாகவே இத்தலத்திற்கு சுவாமி மலை என்று பெயர் வந்தது. தந்தைக்கு உபதேசம் செய்த காரணத்தினால் இவருக்கு சிவகுருநாதர் என்ற பெயரும் உண்டு. ஆகவேதான் முருகனுடைய சந்நிதி மலைக்கு மேல்பாகத்திலும், சிவனுடைய சந்நிதி மலைக்கு கீழ்பாகத்திலும் அமைந்துள்ளது. கல்வியில் சிறந்தவள் சரஸ்வதி, அவளது கணவன் பிரம்மன் தன்னை வணங்காமல் சென்றதற்காக அவரை தண்டிக்கவில்லை என்றும், தனக்கு கல்வி இருக்கிறதே என்ற செருக்கை அடக்கவே அவரை யாம் தண்டித்தோம் என்றும் குமாரன் விளக்கினார்.           
கோயில் அமைப்பு : சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில். இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு : இத்தலம் மூன்று பிரகாரங்களுடன், மூன்று கோபுரங்களுடன் அமைந்து அழகாகக் காட்சியளிக்கின்றது. மேலைக் கோபுரமும், கீழைக்கோபுரமும் மொட்டைக் கோபுரங்களாக விளங்க, தெற்குக் கோபுரம் மட்டும் ஐந்து நிலைகள் கொண்டு, முருகன் திருவிளையாடல்களை விளக்கும் சிற்பங்களைக் கொண்டு ராஜகோபுரமாகத் திகழ்கின்றது. மூன்றாம் பிரகாரம் மலையின் அடிவாரத்திலும், இரண்டாம் பிரகாரம் மலையின் நடுப்பிரகாரத்திலும் முதல் பிரகாரம் மலையுச்சியில் சுவாமிநாதப் பெருமானின் கருவறையைச் சுற்றியும் அமைந்துள்ளன. ராஜகோபுர வாயிலையும், அதனையடுத்த கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால் முதலில் காணப்படுவது மலையின் அடிப்பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் சந்நிதியாகும். இச்சந்நிதிக்கு அருகில் சுந்தரேசுவரருக்கு தனிக்கோயில் உள்ளது. மற்றும் விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி முதலியோர்க்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்மன் சந்நிதிக்கு கிழக்கில் வசந்த மண்டபமும், அம்மண்டபத்தினை அடுத்து மலை ஏறுவதற்கான படிக்கட்டுகளும் அமைந்துள்ளன. வச்சிர தீர்த்தம் என்னும் கிணறும் உள்ளது. இத்தீர்த்தம்  நோய்களைப் போக்க வல்லது. மலையுச்சியை சென்று அடைவதற்கு அறுபது படிக்கட்டுகள் உள்ளன. இவை தமிழ் ஆண்டுகள் அறுபதின் தெய்வங்களையும் உணர்த்துவன. இப்படிக்கட்டுகளுக்குக் கிழக்கில் இத்தலத்துப் புனிதமரமாகிய நெல்லிமரம் மலையின் அடிவாரத்தில் உள்ளது. படிக்கட்டில் சிறிது தொலைவில் ஒரு மாடத்தில் படிக்கட்டு விநாயகர் காட்சி தருகிறார். பாதிப் படிகளை கடந்ததும் கீழ்புறம் அமைந்துள்ள திறந்த மண்டபத்தில் முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசம் செய்யும் காட்சி அழகாகச் சுதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பிரகாரத்தைக் கடந்து மேலே செல்லும் போது விநாயகர் காட்சி தருகின்றார். இவ்விநாயகரை 'நேத்திர விநாயகர்' என்றும் கூறுவர். 'கண் கொடுத்த விநாயகர்' என்றும் கூறுவர். கொங்கு நாட்டை சேர்ந்த குருடன் ஒருவர் இவ்விநாயகர் முன்பு வந்து நின்று வழிபட்டு குருடு நீங்கப் பெற்றார் என்று வரலாறு கூறுகின்றது. சுவாமிநாதரின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

முருகனின் அனைத்து சந்நிதிக்கும் முன்னால் மயில் தான் அமைந்திருக்கும். ஆனால் இங்கு மட்டும் யானை அமைந்துள்ளது. இதற்கு ஒரு புராணம் உண்டு. அரிகேசன் என்ற அசுரனுக்கும், இந்திரனுக்கும் இடையே போர் ஏற்பட்டு அவனை வெல்லமுடியாமல் தனது அனைத்து வலிமைகளையும் இழந்து தோல்வியடைந்தான் இந்திரன்.  பின்பு அவர் முருகனிடம் சென்று முறையிட்டு இழந்த வலிமைகளை மீண்டும் பெற்று அரிகேசனுடன் போரிட்டு வென்று விடுகிறார். இதற்கு நன்றிக்கடனாக தன்னுடைய யானையாகிய ஐராவதத்தை முருகனுக்கு பரிசளிக்கிறார். இதன் காரணமாகத்தான் இத்தலத்தில் மட்டும் முருகனின் சந்நிதானத்திற்கு எதிரே யானை அமைந்துள்ளது.            

திருவிழாக்கள் : சித்திரை பிரம்மோற்சவம் தேர்த் திருவிழா, வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஆடி கிருத்திகை  தெப்பக் காட்சி, கந்த சஷ்டிப் பெருவிழா, திருகார்த்திகை பெருவிழா, மார்கழி திருவாதிரைத் திருநாள், தனுர்மாத பூஜை ,தை பூசப் பெருவிழா, பங்குனி உத்திரம் வள்ளித் திருகல்யாண விழா

திருக்கோவில் காலை 6 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள இரயில் நிலையம் :  கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்  : திருச்சி 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×