திருத்தணி





	


	



























	




 




	








 




1:31:22 AM         Thursday, April 16, 2026

திருத்தணி

திருத்தணி
திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி திருத்தணி
Product Code: திருத்தணி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிமலையில் சென்னையிலிருந்து 53 கி. மீ. தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.முருகபெருமான் மணம் புரியும் பொருட்டு வந்து தங்கிய மலை தணிகை மலை ஆகும்.

சுவாமி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி

அம்பாள் : வள்ளி, தெய்வானை

தீர்த்தம் : சரஸ்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்

தல விருட்சம் : மகுடமரம்

பாடியோர் :  பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சதர்

சிறப்புக்கள் : வள்ளியின் உறவினர்களாகிய வேடர்களுடன் போரிட்டு, கோபம் தனிந்த இடம் திருத்தணி ஆகும். இங்கு மூலவராகிய முருகன் வள்ளி, தெய்வானையுடன் சமேதராக காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்.  திருத்தணிகையில் முருகப் பெருமானைத் தியானித்து சிவபெருமான் பிரணவப் பொருள் உபதேசிக்கப் பெற்றார்.

திருப்புகழ் பாடியஅருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. ராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர். முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.  இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் அமைப்பு : தணிகை மலையடிவாரத்திலிருந்து மலை ஏறிச் செல்லும் பாதையில் வடபக்கத்தில் பிரம்மசுனை என்று வழங்கப்பெறும் பிரம்ம தீர்த்தமும், அதன் அருகில் விநாயகர், பிரம்மலிங்கம் முதலியோர் கோயிலும் உள்ளன. இத்தீர்த்தத்தின் அருகில் பிரம்மதேவன், முருகப்பெருமானை வழிபட்டு மீண்டும் படைப்புத் தொழிலை பெற்றதாகப் புராணம் கூறுகின்றது. தணிகை மலையின் உச்சியை அடைந்ததும்  நான்காவது பிரகாரமாகிய இரதவீதியின் கிழக்கு பாகத்தைக் காணலாம். இங்கு இந்திர நீலச் சுனை என்னும் சுனையும், விஷ்ணு தீர்த்தம், நாகதீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. இதன் கிழக்கு வாயில் வழியாக சென்றால் மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இங்கு கீழ்ப்பாகத்தில் கொடிமர விநாயகரையும், ஐராவதத்தையும், தெற்குப் பாகத்தில் உமாமகேசுவரர் சந்நிதியையும், மேற்கு பாகத்தில் உச்சிப்பிள்ளையார் சந்நிதியையும் கண்டு வழிபடலாம். இரண்டாவது பிரகாரத்தில் தெற்குப் பக்கத்தில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியும், மேற்கு பக்கத்தில் ஆறுமுக சுவாமி சந்நிதியும் வடக்கு பக்கத்தில் முருகனால் வழிபடப் பெற்ற குமரேசுவரலிங்கத்தின் சந்நிதியும், உருத்திராக்க விமானத்தில் அமைந்துள்ள பெரிய உற்சவமூர்த்தியின் சந்நிதியும் அமைந்துள்ளன. பஞ்சராட்சர படிகள் என்ற ஐந்து படிகள் முதற்பிரகாரத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இங்கு தென்பகுதியில் வள்ளியம்மன், வடக்கு பகுதியில் தெய்வானை சந்நிதியும், மேற்கே முருகன் சந்நிதியும், வடக்கு பகுதியில் சண்டேசுவரர் பைரவர் சந்நிதியும் அமைந்துள்ளன.

தல வரலாறு : இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.  தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடு. திருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி.

ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும் திருத்தணி என பெயர் பெற்றது. 

சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலை அடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை `அழகு திருத்தணி மலை' எனப் புகழ்ந்துபாடியுள்ளார். 

வள்ளி திருமணம் : முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வயானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டார். இச்சா சக்தியாகிய வள்ளியம்மையை திருத்தணியில் திருமணம் செய்து கொண்டு இனிது வீற்றிருக்கிறார். திருத்தணியின் சிறப்புக்கு இதுவே முக்கிய காரணமாகும். 

திருத்தணிக்குச் செல்லும் பக்த கோடிகள் முதலில் குமார தீர்த்தம் என்ற சரவணப் பொய்கையில் நீராடி, சுத்தம் செய்து கொண்டு தோய்த்து உலர்ந்த ஆடை தரித்து, திருநீறு பூசி உத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏற வேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை முடிந்த வரை இசையுடன் உருக்கமாகப் பாடிக்கொண்டு படிஏற வேண்டும். மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்திலுள்ள கொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். தெற்கிலுள்ள இந்திர நீலச் சுனையைத் தரிசித்து விட்டுப்பின் கோவிலின் உள்ளே சென்று ஆபத்சகாய விநாயகரையும் அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்களையும் குமாரலிங்கேசுவரரையும் வணங்க வேண்டும். பின்னர் மூலஸ்தானத்திலுள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும் வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும்.                                       
திருத்தணியிலுள்ள கோயில் கடல்மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலைக்குன்றுகளின் மேல் ஒரு கிரீடம் போலவும் இரு புறங்களும் வியக்கத்தகு பரந்த காட்சியைக் கொண்ட மலைகளின் மத்தியில் இது அமைந்துள்ளது.     திரேதா யுகத்தில் ராவணனை போரில் வென்று அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகார பூஜைகள் செய்ய ராமேஸ்வரம் சென்று திரும்பும் வழியில், சிவபெருமான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, திருத்தணிகையில் முருகப் பெருமானை வழிபட்டு மனச் சாந்தி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. துவாபர யுகத்தில் அர்ஜுனன் தென் பகுதிக்கான தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் இந்திருக்கோயில் சுவாமியை தரிசித்து ஆசி பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.  

திருத்தணிகையில் முருகனை வழிபட்டு தாரகாசூரனால் கவரப்பட்ட தமது சக்கரம் மற்றும் சங்கு முதலியவற்றைத் திருமால் மீண்டும் பெற்றார். அவர் உண்டாக்கிய விஷ்ணு தீர்த்தம், மலையின்மேல் கோயிலுக்கு மேற்கே உள்ளது. திருத்தணிகையில் பிரம்மதேவர் முருகப் பெருமானைப் பூஜித்துப் படைப்புத் தொழில் செய்யும் ஆற்றலை திரும்பப் பெற்றார்.  மேலும், சூரபத்மனால் கவரப்பட்ட தமது செல்வங்களையும் முருகன் அருளால் திரும்பப்பெற்றார். கலைமகளும் இந்தலத்தில் முருகனைப் பூஜித்தாள். கிழக்கே மலையடிவாரத்திலிருந்து மலைமேல் ஏறிச் செல்லும் வழியில், பாதித் தொலைவில் மலைபடிகளை அடுத்த வடபக்கத்தில் பிரம்மதேவர் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இது பிரம்மசுனை என அழைக்கப்படுகிறது. இதன் தென்கரையில் பிரம்மேசுவரர் கோயில் அமைந்துள்ளது.                                             

சூரபத்மனால் தேவலோகத்திலிருந்து கவர்ந்து கொண்டு செல்லப்பெற்ற, சங்கநிதி, பதுமநிதி, காமதேனு, சிந்தாமணி, கற்பகதரு முதலிய செல்வங்களை மீண்டும் பெறுவதற்காக இந்திரன் முருகனை இங்கு பூஜித்தான். திருத்தணிகை மலைக்குத் தென்புறத்தில் உள்ள ஒரு சுனையில்,  நீலோற்பல மலர்க்கொடியை நட்டு வளர்த்து அதன் பூக்களைக் கொண்டு காலை, மாலை, நண்பகல் என்று மூன்று வேளைகளிலும் இந்திரன் முருகனை பூஜித்தான். அதுபோல் அவன் ஸ்தாபித்து,  வணங்கி அருள் பெற்ற விநாயகருக்குச் செங்கழுநீர் விநாயகர் என்று பெயர். அவனால் உண்டாக்கப் பெற்ற நீலோற்பல மலர்ச்சுனை இந்திர நீலச்சுனை என்னும் பெயர் பெற்ற தீர்த்தமாக மலைக்கோயிலின் தெற்கு வாயிலுக்கு நேராக இருக்கின்றது. இது கல்கார தீர்த்தம் என்வும் அழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தகத்தின் நீர்தான் சுவாமியின் திருமுழுக்கிற்கும், திருமடைப்பள்ளிக்கும் மற்றும்  பூஜை செய்வதற்கும் தனிச்சிறப்பாகப் பயன் படுத்தப்படுகிறது. அதனால் இத்தீர்த்தத்தைத் தொலைவிலிருந்து தொழுதல் வேண்டுமேயன்றி வேறு எவ்வகையிலும் நாம் பயன்படுத்துதல் ஆகாது. பதி, பசு, பாசம் என்னும் இறை, உயிர், தளை ஆகிய முப்பொருள் இயல்புகளைக் கூறும் சைவ சித்தாந்த் நுட்பங்களை இங்கு முருகனை வழிபட்டுத் திருநந்தித் தேவர் அறிவுறுத்தப் பெற்றார். அவன் பொருட்டு முருகப் பெருமான் வரவழைத்த சிவதத்துவ அமிர்தம் என்னும் நதியே இப்பொழுது நந்தியாறு என் அழைக்கப்படுகிறது.முருகனின் அருளைப் பெற நந்தி தேவர் யாகம் புரிந்த குகை நந்தி குகை என அழைக்கப்படுகிறது.

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தினை நாணாகவும் கொண்டு கடைந்தனர். அங்ஙனம் கடைந்த போது வாசுகி நாகத்தின் உடலில் பல வடுக்களும், புண்களும், தழும்புகளும் ஏற்பட்டு பெரிதும் துயர் விளைவித்தன. ஒரு சுனையில் நாள்தோரும் முறையாக நீராடி முருகனை வழிபட்டு, வாசுகி நாகம் அத்துயரங்களினின்று நீங்கி உய்த்தது. ஆதிசேச தீர்த்தம் விஷ்ணு தீர்த்ததிற்க்கு மேற்கே மலைப் பாதைக்குத் தென்புறம் இருக்கிறது. இங்கு முருகனை வழிபட்டு, அகத்திய முனிவர் முத்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் பெற்றார். அவர் உண்டாக்கிய அகத்திய தீர்த்தம் ஆதிசேச தீர்த்தத்திற்குத் தென் கிழக்கில் உள்ளது.  

ஒருசமயம் அருணகிரிநாதர் திருப்புகழை பாடிக்கொண்டே தணிகைமலையை சுற்றி வரும்பொழுது அவரை பார்த்த சிலர் கேலி செய்தனர். அருணகிரிநாதர் மனகஷ்டத்துடன் "சினத்தவர் முடிக்கும்.." என்ற திருப்புகழின் நான்கு வரிகளை பாடிக்கொண்டிருக்கும் போது அவரை கேலி செய்தவர்கள் எரிந்து சாம்பலானார்கள். கருணையே உருவான அருணகிரிநாதர் அப்பாடலின் அடுத்த நான்கு வரிகளை பாடிய பொழுது எரிந்து சாம்பலானவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழுந்தனர். இவ்வாறு திருவிளையாடல் புரிந்த தலமே திருத்தணிகையாகும்.                                   

சரவணப் பொய்கை : முருகப் பெருமான் சரவணப் பொய்கை தீர்த்தத்தில் கார்த்திகை பெண்களுக்கு குழந்தையாக அவதரித்த திருக்குளம். திருத்தணிகை சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடுவோர் தங்களது உடல் உபாதைகள், பாவங்கள் கலையப்ப்டுவதக ஐதீகம். சரவணப் பொய்கையில் நீராடிய பின்பே படிக்கட்டுகள் வழியாக மலைக்கோயிலை சென்றடைகின்றனர். ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது மலைக்கோயிலில் உற்சவர் அலங்காரத்துடன் பவனி வந்து தெப்பக் குளத்தில் சுற்றி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சப்தரிஷி தீர்த்தம் : சப்தரிஷிகள் என்று கூறப்படும் வசிஷ்டர் முதலான ஏழு முனிவர்கள் இங்கு முருகனைப் பூஜித்தனர். அவர்கள் பூஜித்த இடம் மலையின் தென்புறத்திசையில் உள்ளது. அவர்கள் அமைத்த ஏழு சுனைகளும் மற்றும் கன்னியர் கோயிலும் இங்கு உள்ளன. இந்த இடம் இப்போது ஏழு சுனை கன்னியர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்ற பசுமைத்தன்மையும் நிறைந்த, வெயில் நுழையாமல் அமைதி மிகுந்த இடமாகத் திகழ்கின்ற இந்த இடம், தவத்திற்கும் தியானத்திற்கும் ஏற்ற இடமாக விளங்குகின்றது. திருத்தணி நகரின் வெளிப்புறத்தின் நந்தியாற்றங்கறையில் பழமை வாய்ந்த விஜயராகவ சுவாமி, ஆறுமுக சுவாமி மற்றும் வீரட்டீஸ்வரர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. பழய காலம் தொட்டு நீண்ட வருடங்களாக ஆறுமுக சுவாமி கோயிலில் அமைந்துள்ள மூலவரின் பாதத்தில், மார்பில், சிரசில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரிய ஒளி விழுந்து காணப்படுவது பக்தி பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும்.

திரு விழாக்கள் : மாதாந்திர கிருத்திகை உற்சவ நாட்களில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தருகின்றனர். இது அல்லாமல் பிரதிவருடம் டிசம்பர் 31, ஜனவரி 1 இல் திருப்புகழ் திருப்படி திருவிழா மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். ஆடிகிருத்திகை திருவிழாவில் தென்னிந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணகான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.ஆடிக்கிருத்திகை திருவிழாவின் போது சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான பக்தர்கள் மலர் காவடிகள் எடுத்து முருகனை தரிசிக்க வருகின்றனர்.  கந்த சஷ்டி விழாவின் போது முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே நேரத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணியில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை மாறாக உற்சவர் சண்முக பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடத்துகின்றனர்.

திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருத்தணி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×