2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




11:49:11 PM         Friday, May 01, 2026

2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு

2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு
2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு
Product Code: 2. உச்சிபிள்ளையார் கோயில் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி நகரத்தில் 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.

மூலவ‌ர் :  உச்சிப் பிள்ளையார்

ஈச‌ன் பெயர் : தாயுமானவர்

அம்பாள் பெயர்: மட்டுவார்குழலம்மை.

தல விருட்சம்:  வில்வ மரம்

தீர்த்தம் : தெப்பக் குளம்

தேவாரப்பாடல் பாடியவர் : மாணிக்க வாசகர், அருணகிரி, அப்பர், தாயுமானவர்

தலச் சிறப்புகள்இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார்.இங்குள்ள சிவலிங்கம் 5 அடி உயரத்தில் உள்ளது கோவில் 3 தலங்களாக உள்ளது. முதல் தளத்தில் அம்மன் சன்னதி உள்ளது . இரண்டாம் தளத்தில் சுவாமி சன்னதி உள்ளது ரத்தினாவதி என்று ஒரு சிவபக்தை அந்த ஊரில் இருந்தார். அவருக்கு பிரசவ சமயத்தில் உதவ அவரது தாய் காவிரியின் அக்கரையில் இருந்து வர முயற்சிக்கும் பொழுது காவிரியில் வெள்ள பெருக்கு இருந்ததால் வரமுடியவில்லை.அச்சமயம் இறைவன் அப்பெண்ணின் தாய்  உருவில் வந்து அப்பெண்ணுக்கு சுக பிரசவம் ஆக உதவுகிறார்.அதனால் இங்கு இறைவன் பெயர் தாயுமானவர். இந்த சிவஸ்தலத்தில் குழந்தை பேறு ,சுக பிரசவம் போன்றவைக்கு பக்தர்கள் வேண்டுவது வழக்கம் . இத்தலத்தில் தக்ஷிணாமூர்த்தி மற்றும் முத்துகுமாரஸ்வாமிக்கு தனி சன்னதிகள் உள்ளது .அருணகிரிநாதர் இத்தல முருகன் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார் .இது தவிர முருகன் வள்ளி தேவசேனா சகிதமாக காட்சி தரும் சன்னதியும் உள்ளது.

தல வரலாறு:    இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று  அயோத்தியா திரும்பியஇராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார். விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது. இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.

கோவில் அமைப்பு:  தாயுமானவர் கோவில் உச்சியில் உள்ள மலை மீது உச்சி பிள்ளையார் கோவில் உள்ளது. கீழே மலை அடிவாரத்தில் உள்ளது மாணிக்க விநாயகர் கோவில். முதலில் மாணிக்க விநாயகரை தரிசனம் செய்துவிட்டு தாயுமானவரையும் அம்மனையும் தரிசித்து விட்டு உச்சி பிள்ளையார் கோவில் தரிசனம் செய்ய வேண்டும். திருச்சி மலைகோட்டை உலகிலேயே மிகவும் பழமையான பாறை என்ற பெருமையுடையது. 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. கிரீன்லாந்து, இமயமலைப் பாறைகளைவிட பழமையானது என்று சொல்லபடுகிறது. இக்கோயிலின் உள்ளேயே தாயாருக்கு, அன்னப்பூரனிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. அதுத் தவிர விநாயகர், முருகர், பைரவர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கே இரு நந்திகள் உண்டு கோயிலின் உள்ளே சின்ன நந்தியும் மலைக்கோட்டை வெளியே தெப்பக்குளத்தின் அருகே மிகப்பெரிய நந்தியும் இருக்கிறது. இது தஞ்சாவூரின் பிரசித்திப்பெற்ற மிகப்பெரிய நந்திக்கு அடுத்தப்படியானது. அதனால் அந்த தெருவிற்கே நந்தி கோயில் தெரு எனப் பெயர் வந்தது.

திருச்சி நகரின் நடு பகுதியில் அமைந்துள்ள மலைகோட்டையில் அமைந்துள்ள கோவில் தான் தாயுமானவர் கோவில். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தி . தாயுமானவர் கோவிலுக்கு தென் கயிலாயம் என்று மற்றொரு பெயர் உண்டு.இங்கு இறைவன் பெயர் தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர்.இறைவி பெயர் சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை.இந்த மலை திருச்சியில் வந்ததற்கு ஒரு வரலாற்று கதை உள்ளது. ஒரு முறை கைலாயத்தில் சிவ பெருமானை வணங்க ஆதிசேஷனும் வாயு பகவானும் வந்திருந்தனர் .ஆதிசேஷனை எல்லோரும் புகழ்ந்ததை கண்டு வாயு பகவானுக்கு பொறாமை ஏற்படுகிறது.வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் மோதல் நடக்கிறது. ஆதிசேஷன் கைலாய மலையை தன உடலால் இறுக்குகிறார் உடனே வாயு பகவான் பலத்த காற்றை வீசுகிறார்.கைலாய மலை உடைந்து அதிலிருந்து 3 துண்டுகள் திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் என்ற இடங்களில் விழுகிறது. அன்று திருச்சியின் பெயர் திரிசரமலை.

தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 6.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×