11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு





	


	



























	




 




	








 




12:10:32 PM         Wednesday, April 29, 2026

11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு

11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு
11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு
Product Code: 11.ஆழத்து பிள்ளையார்- தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

விருத்தகிரிஸ்வரர் கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின்  தமிழ்நாடுமாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில்லிருந்து    3 K M தூரத்தில் உள்ளது . பழமலைநாதர் கோயில்  வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

மூலவ‌ர் :  விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர்

தாயார்:  விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி, பாலாம்பிகை (எ) இளைய நாயகி

தல விருட்சம்:  வன்னி

தீர்த்தம் : மணி முத்தாறு,  நித்யானந்த கூபம்

தேவாரப்பாடல் பாடியவர் :   திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர்

தலச் சிறப்புகள் : இத்தலம் ஐந்தின் சிறப்புகளை கொண்டது. இங்கு திருச்சுற்றுகள், கோபுரங்கள், கொடிமரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக்கோயில் உள்மண்டபங்கள், விநாயகர்கள் என்று எல்லாமே ஐந்தைந்து மயம்தான்.  இவ்வாறு மனம் எனும் பூமியைத் தோண்டி ஆழமாகச் சென்று உற்று நோக்கின் அதையே இயக்கும் சக்தியாக பிள்ளையார் என்ற பரமாத்ம வஸ்துவை கண்டறியலாம். இதன் நிரூபணமாகவே இங்கு பூமியிலிருந்து 18 அடி ஆழத்தில் பிள்ளையார் அருள்கிறார். இக்கோயில் இருக்கும் ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.

கோவில் அமைப்பு:  இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.

இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது. நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
உள்சென்று அவரை தரிசிக்க 16 படிகளில் இறங்க வேண்டும். இந்த பதினாறு படிகளும் பிள்ளையாரின் முக்கியமான பதினாறு திருப்பெயர்களை சொல்வதாக அமைந்துள்ளன. இதை ஷோடச நாமாக்கள் என்பார்கள். ஷோடச என்றால் பதினாறு. அந்த பெயர்கள் என்னென்ன? ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர். எனவே, ஒவ்வொரு படிக்கட்டில் இறங்கும்போதும் இந்த விநாயகரின் திருநாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லலாம். 

விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது. பிரம்மா விருத்தாசலத்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் பழமலையாக காட்சி அளித்தார். ஆகையால் பிரம்மா சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்று விட்டார்.

இங்கு உள்ள ஆழத்து விநாயகர், திருமணதடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிறந்த கல்வி வழங்குகின்றார், 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார். ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வேண்டி வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர்.

சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும். சென்னை, டெல்லி, சேலம், கேரளா போன்ற இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து 108, 27, சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

தரிசன நேரம் :  கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாசலம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×