12.செல்வ கணபதி -தமிழ்நாடு





	


	



























	




 




	








 




6:14:03 PM         Wednesday, April 29, 2026

12.செல்வ கணபதி -தமிழ்நாடு

12.செல்வ கணபதி -தமிழ்நாடு
12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு 12.செல்வ கணபதி -தமிழ்நாடு
Product Code: 12.செல்வ கணபதி -தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்  திருவண்ணாமலை

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம்  செஞ்சிலிருந்து 36 கி.மி.  திண்டிவனத்திலிருந்து 60 கி.மி. தொலைவிலும் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.

மூலவர் : அண்ணாமலையார், அருணாச்சலேசுவரர்

அம்மன்/தாயார் : அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்
தல விருட்சம் : மகிழமரம்
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம், சிவகங்கை

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

விநாயகரின் முதல்படைவீடு: முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.

திருவண்ணாமலை கோயிலில் அருளும் செல்வ கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்பந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. ஆனாலும், விவேக சிந்தாமணி எனும் பழமையான நூலில் இத்தலத்திலுள்ள ஒரு விநாயகர் மீது இயற்றியிருக்கும் பாடலை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும். பிறவி எடுக்கக் காரணமாக உள்ள, அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் இனி இருக்காது. அது எப்படியெனில் இந்தத் திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை தொழுது கும்பிட்டால் போதும்; உங்களின் சகல வினைகளும் தீர்ந்துபோகும். ஞானம் கைமேல் கனியாக வரும்’’ என்று சொல்கிறது. இப்படியாக அருணை கோபுரத்துள் என்று சொல்லும்போது கோயிலின் முக்கிய வாயிலான கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே அருளும் செல்வ கணபதியைத்தான் இப்பாடல் குறிப்பிடுகிறது. அதோடு, அருணையின் வாயிலிலேயே முதல் தரிசனம் தருபவர், இந்த முழுமுதற் கடவுளாகவே இருப்பதால், இந்த செல்வ கணபதியைத்தான் ஆதியில் ஞானிகளும் தரிசித்து தரிசித்து வணங்குவோம்.  இவரைத் தவிர யானை திறைகொண்ட விநாயகர் தனிசன்னதியில் இருக்கிறார்.

செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது தெரிந்த விஷயம். ஆனால், இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர்.

தல வரலாறு:  விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியை க் கண்டு வருகிறீர்களோ அவர்தான் பெரியவர் என்று தெரிவித்து விட்டார்.ஜோதிப் பிளம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். அந்த ஜோதியே நெருப்பு மலையாக மாறியது. இதுவே கோயிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும். 

சிவனின் அடியை காண்பதற்காக, விஷ்ணு வராக(பன்றி)அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து முடியவில்லை என்று சிவபெருமானிடம் ஒப்புக்கொண்டார். அடுத்ததாக பிரம்மா, அன்னப்பறவை உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பிப்போனவர், அது முடியாது எனத் தெரிந்தவுடன் திரும்ப வந்து தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியைக் கண்டேன் என்றார்.பிரம்மன் பொய் சொன்னது அறிந்து உனக்கு பூமியில் கோயிலோ பூஜையோ கிடையாது என சாபமிட்டார்.விஷ்ணு உண்மையை கூறியதால் தனக்கு சமமாக பூமியில் கோயிலும் பூஜையும் கிடைக்க வரம் அளித்தார்.பொய் சொன்ன தாழம்பூவை தன்னை தீண்டக்கூடாது என்று சபித்தார். அதனால்தான் இன்றும் சிவதலங்கள் எதிலுமே தாழம்பூவை மட்டும் படைக்கவே மாட்டார்கள். அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. 

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.

தலபெருமை:  ஒருநாள் மட்டும் தரிசனம்: சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்'' தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார். 

கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த கோயில் இது. இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில். கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.
தரிசன நேரம் :  கோவில் தினமும் காலை 5.00  மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவண்ணாமலை 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×