13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு





	


	



























	




 




	








 




12:06:44 PM         Wednesday, April 29, 2026

13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு

13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு
13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு
Product Code: 13.கள்ளவாரணப் பிள்ளையார்-தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருக்கடையூர் அமிருதகடேஸ்வரர் சமேத அன்னை அபிராமி

திருத்தல அமைவிடம் : இந்தியாவின்  தமிழ்நாடுமாநிலத்தின் கோயில் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் ரோட்டில், 26 கி.மீ., தூரத்தில் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்  இருக்கிறது.

 மூலவர்:  அமிர்தகடேஸ்வரர், சுயம்பு மூர்த்தி

உற்சவர்:  காலசம்ஹாரமூர்த்தி

அம்மன்:  அபிராமியம்மன்

தல விருட்சம்:  ஜாதிமல்லி

தீர்த்தம்: அமிர்தகுளம், கங்கை தீர்த்தம்

பாடியவர்கள்: அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்

தலச் சிறப்புகள் : விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று. பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார். இதனால் அவர் கள்ளவாரணப் பிள்ளையார் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ஜாதிமல்லிப்பூ சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகிறது. மற்றவர்கள் இதை வைத்துக்கொள்ளக் கூடாது. ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் ஆயிரம் பூ எடுத்து அர்சித்ததற்கு சமம் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அம்மனின் சக்தி பீடங்களில் இது கால பீடம். பிரகாரத்தில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 47வது தலம்.

தல வரலாறு:  மிருகண்டு முனிவர் – மருத்துவதி தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தது. முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். தவத்தினை மெச்சிய சிவன், ”உனக்கு அறிவுள்ள குழந்தை பிறந்தால் 16 ஆண்டுகளே உயிர் வாழும்.அறிவற்றவன் பிறந்தால், நீண்டநாள் வாழும், இதில் எந்தக் குழந்தை வேண்டும்?”எனக்கேட்டார்.

மிருகண்டு திகைத்தார். அறிவுள்ள குழந்தையே வேண்டும் என்றார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டனர். மார்க்கண்டேயனுக்கு 16 வயது வந்தது.மார்க்கண்டேயன் சிவத்தலங்கள் சென்றார்.  இவரது கடைசி நாளும் வந்து விடுகிறது. உயிரைப்பறிப்பதற்காக எமன் கோயிலுக்கே வந்து விடுகிறார். எமனைக்கண்ட மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை கட்டிக்கொண்டார். இருந்தாலும் எமன் விடவில்லை. மார்க்கண்டேயரது உயிரைப்பறிப்பதற்காக எமன் பாசக்கயிறை வீச, அந்தக்கயிறு சிவலங்கத்தின் மீது விழுகிறது. கோபம் கொண்ட சிவன், ”என்னையும் சேர்த்தா பாசக்கயிறால் இழுக்கிறாய், இத்துடன் ஒழிந்து போ” என எமனை அழித்து விடுகிறார்.இதனால் பூமியில் இறப்பே இல்லாமல் போனது; உயிர்கள் பெருகின. பூமி பாரம் தாங்காத பூமாதேவியின் வேண்டுதலால் சிவன் மனமிறங்கி எமனுக்கு உயிர் தருகிறார். எமன் பாசக்கயிறு வீசியதால் ஏற்பட்ட தழும்பு இன்னமும் சிவனின் திருமேனியில் காணலாம்.

காலசம்கார மூர்த்தி : சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான்.இவர் காலசம்கார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இத்தலத்தில் காலசம்காரமூர்த்தி சன்னதியிலும் ஒரு ரகசியம் இருக்கிறது. ஆம்! சுவாமிக்கு வலதுபுற மதிலில் இயந்திர தகடு ஒன்று உள்ளது. இதனையே, “திருக்கடையூர் ரகசியம்‘ என்கிறார்கள். இந்த தகட்டிற்கு முன்பாக அகத்தியர் பூஜித்த பாபகரேசுவர லிங்கம் இருக்கிறது. முதலில் பாபகரேசுவரரையும், பின் இறைவனையும், அடுத்து இயந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

எமதர்மனை எருமை வாகனத்தின் மீது, கம்பீரமான கோலத்தில்தான் காணமுடியும்.ஆனால், இத்தலத்தில் காலசம்காரமூர்த்தி சன்னதிக்கு நேர் எதிரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.

இரட்டை தரிசனம் : இத்தலத்தில் காலசம்கார மூர்த்தி, இடது காலை ஆதிசேடன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். காலசம்காரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனைப் பார்க்கமுடியாது. சுவாமிக்கு பூசை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை சம்கார கோலம் என்றும், எமனுடன் இருப்பதை உயிர்ப்பித்த கோலம் என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் இங்கு “சம்கார” மற்றும் “அனுக்கிரக மூர்த்தியை”தரிசிக்கலாம்.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேசுவரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேசுவரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேசுவரருக்குத் தனி சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரே சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூசித்த பாபகரேசுவரரை வணங்கி விட்டு பின்,புண்ணியகரேசுவரரை வணங்க வேண்டும்.

பிரம்மாவிற்கு ஞான உபதேசம் செய்த சிவன், ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆவார். தினமும் மாலை பூசையின்போது மட்டும் இவருக்கே முதல்பூசை செய்யப்படுகிறது.

இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேசுவரருக்கு அபிடேக தீர்த்தம் எடுக்கச் சென்ற பாதாள குகை இருக்கிறது.

அமிர்தகடேசுவரர் : ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது, அசுரர்களுக்கு தெரியாமல் தேவர்கள் சிறிது அமுதத்தை ஒரு கலயத்தில் எடுத்து மறைத்து விட்டார்கள்.எந்த காரியம் செய்தாலும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும் என்பது நியதி.ஆனால் தேவர்கள் அப்படி செய்யவில்லை. கோபம் கொண்ட பிள்ளையார் அமுத கலசத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். சிவன் மூலம் இந்த விஷயம் தேவர்களுக்கு தெரிய வந்தது. பிள்ளையாரிடம் சென்று மன்னிப்பு கேட்டார்கள் தேவர்கள்.பிள்ளையாரும் மன்னித்து அமுத கலசத்தை கொடுத்து விட்டார். பெற்றுக்கொண்ட தேவர்கள் அந்த கலசத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நீராடச் சென்றார்கள். திரும்பி வந்து எடுத்தபோது அந்த கலசம் வரவில்லை. அது சிவலிங்க திருமேனி ஆகி அமிர்தகடேசுவரர் என்ற பெயர் பெற்று விட்டது.

கோவில் அமைப்பு :  காலசம்கார மூர்த்தி சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில்,இருகரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரசுவதி இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி “குகாம்பிகை“யாக, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் இருக்கிறாள். இங்குள்ள “கள்ளவாரண விநாயகர்‘ துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார்.பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது. விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று. இத்தலத்து உற்சவரின் திருநாமம் காலசம்ஹாரமூர்த்தி. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும். விநாயகர் கள்ளவிநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.

 இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. பொதுவாக சிவன் கோவில்களில் முன்புறம் பிள்ளையார் சன்னதி இருக்கும். ஆனால் திருக்கடையூரில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒளிந்து கொண்டு இருப்பதால் அவரை தேடி கண்டுபிடித்து தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் தேவர்கள் கள்ளவாரணப் பிள்ளையாரை வழிபட்டு அமிர்தகலசத்தை திரும்பப்பெற்றனர். இங்கு பிள்ளையார் மறைத்து வைத்த அமிர்தகலசம் நாளடைவில் லிங்க வடிவாக மாறிவிட்டது. இதையே பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

தரிசன நேரம் :  கோவில் தினமும் காலை 6.00  மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : மைலாடுதுறை 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×