திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டம் பிரசன்ன விநாயகரை தரிசிக்க உடுமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
மூலவர் : பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)
உற்சவர் : விநாயகர்
தல விருட்சம் : வன்னி , வில்வம், அரசு
தீர்த்தம் : கிணற்றுநீர்
தல சிறப்பு: உடுமலை ஸ்ரீபிரசன்ன விநாயகர் கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 1 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர் ராஜகம்பீர கோலத்துடன், ஏகதளவிமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
கோவை ஈச்சனாரியில் எப்படி அருள்மிகு விநாயகர் பெருமாள் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றோரோ அதே போன்று உடுமலை பிரசன்ன விநாயகரும் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார். பிரசன்ன விநாயகப் பெருமானை மனதில் எண்ணி, விரதமிருந்து அவரை வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்களையும் வழங்கி அருள்பாலிப்பார் என்பதும் ஐதீகமாகும்.
அன்னதானம், இந்த விநாயகர் பெருமான் சன்னதியில் நடப்பது மிகவும் புண்ணியமாகும் என்பதும் ஐதீகம். சங்கடகர சதுர்த்தி விழா இங்கே முக்கிய நிகழ்வாக நடக்கிறது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயக பெருமானை தொடர்ந்து காசி முருகப்பெருமான் வள்ளி- தெய்வானை சமேதரராய், தட்சிணாமூர்த்தி, சவுந்திர ராஜ பெருமாள், சண்டி கேஸ்வரர், துர்க்கையம்மன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநடராஜர், நவக்கிரக நாயகர்கள், நால்வர் சன்னதி, பிரம்மா, ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீஆண்டாள், இப்படி ஒரே ஆலயத்தில் பல்வேறு தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள். பிரசன்ன விநாயகர் கோவில் 300 ஆண்டு பழமையானது.
தல சிறப்பு: இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளார். திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.
தலபெருமை: இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்தில் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம்,அரசு ஆகியன இங்குள்ளன. திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சவுரிராஜபெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனியே சன்னதி கொண்டுள்ளனர். இவ்வாறு, இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் சிறப்பு.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராஜ்யம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, "உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோவை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பழனி (முக்கிய நகரங்களில் இருந்து )
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு