திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை வட்டம், தொண்டி இருந்து 15 கி மீ தூரத்தில் உப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ள இந்து சைவ வழிபாட்டுத்தலமானவிநாயகர் கோயில்.
மூலவர் : வெயிலுகந்த விநாயகர் உப்பூர் விநாயகர்
தல விருட்சம்: வன்னி, மந்தாரம்
தீர்த்தம் : சூரிய, விநாயக தீர்த்தம்
தலச் சிறப்புகள் : ஸ்ரீவிநாயகப் பெருமான் மீது தட்சிணாயன காலங்களில் தெற்கு பகுதியில் சூரியவெளிச்சம் படுகிறது. உத்தராயண காலங்களில் வடக்கு பக்கமாக சூரிய வெளிச்சம் படுகிறது.
தல வரலாறு: தட்சன், தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான். சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான். இந்த யாகத்தில் கலந்துகொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது. தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார். சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார். தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு, தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார். அவ்வாறே அருளினார் விநாயகர். அதன்படி, தட்சிணாயன, உத்தராயன காலங்களில் தெற்கு மற்றும் வடக்குப் புறமாக இவர் மீது சூரிய ஒளி படுகிறது. இதனால் இவருக்கு வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தல புராணம்.
இராமாயண வரலாற்றோடு தொடர்பு கொண்ட ஆலயம் ! ஸ்ரீராமர் தென்னிலங்கை சென்று இராவணனை வதம் செய்யும் முன்பு இங்கு வந்து ஸ்ரீவினாயகப் பெருமானை வணங்கி அருள் பெற்று போரில் வென்றார்! இங்கே ஸ்ரீவினாயகரை வணங்கிப் பின் தேவி பட்டினம் சென்று கடலில் நவபாஷாண நவக்ரக பிரதிஷ்டை செய்து வழிபட்டார்! இராமேஸ்வர தல யாத்திரையின் போது முதலில் இங்கு ஸ்ரீவெய்யில் உகந்த விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும் என்பது ஐதீகம்!
ராமாயணத்தின் பெரும்பகுதி நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இங்கு ராமர் ஏற்படுத்திய நவக்கிரஹம் நவபாஷாணம் என அழைக்கப்பட்டு தேவிபட்டினத்தில் உள்ளது.கடலின் நடுவில் உள்ள நவபாஷாணத்தில் வழிபட்டால் நவக்கிரகதோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.ராமர் இலங்கைக்கு செல்லும்போது திருப்புல்லணை என்ற இடத்தில் தங்கி சென்றார் அதாவது இவர் தங்கியபோது தர்ப்பைபுல்லில்
படுத்துறங்கினார் அதனால் திருப்புல்லணை எனப்பெயர் ஏற்ப்பட்டு காலப்போக்கில் திருப்புல்லாணி எனப்பெயர் மாறியது.
அதுவே ராமேஸ்வரம் என இந்துக்களின் புனிதத்தலமாக போற்றப்படுகிறது.எந்த ஒரு செயலுக்கும் விநாயகர் வழிபாடு மிக முக்கியம்.முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே கோவில்களில் இருக்கும் அனைத்து கடவுளையும் வழிபடுகிறோம்.பிள்ளையார் சுழி போட்டே அனைத்து வேலைகளையும் தொடங்குகிறோம்.அப்படி ராமபிரான் இலங்கைக்கு
செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம்தான் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் இங்கு சீதாவை மீட்க இலங்கை செல்லும்போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித்தான் சென்றார்.ராமபிரானின் வெற்றிக்கு இங்கு உள்ள விநாயகரும் ஒரு முக்கிய காரணம் விழாக்காலங்களில் சித்திபுத்தி தேவிகளுடன் இந்த விநாயகர் காட்சி தருவது சிறப்பு. இதுகோவிலாக இருந்தாலும் இங்கு உள்ள விநாயகருக்கு மேற்கூரைஇல்லாமல் வெயில்படும்படி அமைத்திருப்பது சிறப்பு.கடுமையான நோய்களை இந்த விநாயகர் போக்குகிறார்.எந்த ஒரு பெரியகாரியத்திற்க்கும் இவரை வணங்கி அடுத்த காரியத்தை தொடங்கினால் வெற்றி நம் வசம்தான் ஏனென்றால் ராமருக்கே வெற்றியை கொடுத்தவர் இவர்.கேதுவால் அவஸ்தைக்குள்ளாவோர் இவரை வணங்கினால் விநாயகர் கேது தோஷத்தில் இருந்து விடுதலை கொடுப்பார்.
மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது.
வழிபாட்டு பலன்கள் : சூரியனால் உண்டாகிற ஜாதக தோஷங்கள் விலகும்.
சிலருக்கு பல் நோய்க்தானே என்று எண்ணத்தோன்றும்.ஆனால் இளம் வயதிலேயே 2,3 பற்களை இழந்து முக வசீகரம் குன்றி காணப்படுவார்கள்.இப்படி பல் நோய் வருவதற்கு முன்பே இத்தலத்து விநாயக பெருமானை வேண்டி நோயிலிருந்து விடுபடலாம் எலும்பு நோய்கள்,உஷ்ண நோய்கள்,கண் பிணிகள் அகலும்.
பிரம்மசாரியாகக் கொண்டாடப்படும் விநாயகப் பெருமானுக்கு திருமணம் நடைபெறும் தலமாக வட இந்தியாவிற்கு அடுத்து தமிழகத்தில் உப்பூரில் நடைபெறுகிறது.
தரிசன நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : ராமநாதபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு