240. திருக்கச்சி அனேகதங்காவதம்





	


	



























	




 




	








 




9:42:14 AM         Tuesday, May 26, 2026

240. திருக்கச்சி அனேகதங்காவதம்

240. திருக்கச்சி அனேகதங்காவதம்
240. திருக்கச்சி அனேகதங்காவதம் 240. திருக்கச்சி அனேகதங்காவதம் 240. திருக்கச்சி அனேகதங்காவதம் 240. திருக்கச்சி அனேகதங்காவதம் 240. திருக்கச்சி அனேகதங்காவதம் 240. திருக்கச்சி அனேகதங்காவதம் 240. திருக்கச்சி அனேகதங்காவதம்
Product Code: 240. திருக்கச்சி அனேகதங்காவதம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                         அநேகதங்கா பதேஸ்வரர் கோவில், திருக்கச்சி அனேகதங்காவதம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் வடமேற்கே 3 கி.மீ தொலைவில் வயல்வெளி நடுவில் இருக்கிறது.
 
சுவாமி : அநேகதங்காவதநாதர்

அம்பிகை : காமாட்சியம்மை

பதிகம் : சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: கணபதியும், குபேரனும் வழிபட்ட திருவூர். 'ஆனையுரித்தான் வயல்' எனப் பெயர் உடைய வயல்கள் கோவிலுக்கு மேற்கே உள்ளன. 'அநேகதங்காவதம்' என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்துவார்-கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சிபுரத்திலுள்ள இத்தலம். இது திருக்கச்சியிலுள்ள விநாயகர் (அநேகதம்) பூசித்த தலம் என்பர்.

அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் சிவஸ்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும், கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. . இந்த வாயிலகள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் நாம் நேரே காண்பது பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவார மூவர் சந்நிதியைக் காணலாம். மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். மூலவர் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய லிங்கத் திருமேனியுடன் நமக்கு அருட்காட்சி தருகிறார். கோஷட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.
அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது. குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : காஞ்சிபுரம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×