251. திருவாலங்காடு





	


	



























	




 




	








 




5:14:15 AM         Tuesday, May 26, 2026

251. திருவாலங்காடு

251. திருவாலங்காடு
251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு 251. திருவாலங்காடு
Product Code: 251. திருவாலங்காடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது. திருவள்ளூரிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 57 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.  திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சுவாமி : தேவர் சிங்கப்பெருமான், வட ஆரண்யேசுவரர்,  ஆலங்காட்டு அப்பர்

அம்பிகை : பிரமராளகாம்பாள்,  வண்டார் குழலி

தலமரம் : பலா  ஆலமரம்

தீர்த்தம் : சென்றாடு தீர்த்தம், முத்தி தீர்த்தம்

பதிகம் : 
   திருநாவுக்கரசர் - 2
   திருஞானசம்பந்தர் - 1
   சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள் : இது பஞ்ச சபைகளுள் இரத்தின சபையாகும். சிவனுக்கும், காளிக்கும் போட்டி நடனம் நடைபெற்ற தலம் ஆகும். இத்தலத்தில் முஞ்சிகேச கார்க்கோட முனிவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி இறைவன் பத்ரகாளியின் செருக்கு அடக்கும் வகையில் திருநடனம் புரிந்தார். இங்கு நடராஜப் பெருமான் தமது இடக்காலைத் தலையளவு உயர்த்தி ஊர்த்துவ தாண்டவம் புரிந்தார். மூவர் பெருமக்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். திருக்குளம் பெரியது. கோயிலின் வடமேற்கில் காளிகோயில் இருக்கின்றது.

காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் அருள்புரிந்த சிறப்புப் பதியாதலால் அவர் நிலவிய இப்பதியைத் தம் கால்களால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் வெளியே தங்கி இருந்தமை கருதத்தக்கது. நீலி என்பவளின் பொருட்டு வணிகன் ஒருவனுக்குத் தாங்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் 70 வேளாளர்கள் உயிர்த் தியாகம் செய்த வரலாறு பெரிய புராணத்தில் சாற்றப்பட்டுள்ளது. இவ்வேளாளர்கள் பழையனூரைச் சேர்ந்தவர்களாவர். அவ்வூர் இத்தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம் அம்மையப்பர் ஆகும். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி. மார்கழித் திருவாதிரை இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும் இடக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திருஉருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடையவேண்டியதாகும். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பெளர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

இவ்வூரில் ஓர் வணிகனுக்கும், நீலி என்ற மங்கைக்கும் வழக்கு ஒன்று நடந்தது. இன்று இரவு நீலி தன்னை கொன்று விடுவாள் என்று வணிகன் கூறினான். பெண் உருவம் கொண்ட நீலியும் தன் கணவனை தன்னுடன் இன்று இரவாவது தங்கும்படி வழக்கு மன்றத்திடம் கேட்டுக்கொண்டாள். நீலி கண்ணீருக்கு இரங்கிய சைவ வேளாளர்கள் எழுபது பேரும் நீலி என்பவள் குடும்பப் பெண் என்றும் அன்று இரவு வணிகனை அவளுடன் தங்கியிருக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். மறுநாள் வணிகனின் இறந்த உடலை சபையோர் கண்டனர். வணிகனின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்து அவனை தங்கச் சொல்லியதால்தான் அவன் இறந்தான் என்பதால் அவ்வணிகனுக்குத் தாங்கள் கொடுத்த வாக்கின்படி சைவ, வேளாளர்கள் எழுபது பேரும் தீ எழுப்பி ஒரேநேரத்தில் திக்குளித்து மாண்டனர். வாய்மைக் காப்பதில் இப்பகுதி வேளாளரும் சிறந்து இருந்தனர் என்பதை இதன் மூலம் அறியலாம்.

கோயில் அமைப்பு : கிழக்கிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன், நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளுடைய இரண்டாவது கோபுரம் இந்த கோபுரத்திலும் அழகிய கலைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய கதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால், இரண்டாவது பிரகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில் இந்த நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய கதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : திருவாலங்காடு

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×