252. திருப்பாசூர்





	


	



























	




 




	








 




5:16:56 AM         Tuesday, May 26, 2026

252. திருப்பாசூர்

252. திருப்பாசூர்
252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர் 252. திருப்பாசூர்
Product Code: 252. திருப்பாசூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                    வாசீஸ்வரர் கோவில், திருப்பாசூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான  திருவள்ளூரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சென்னை - திருவள்ளூர் - திருத்தணி பேருந்து சாலையில் கடம்பத்தூர் சாலை பிரியும் இடத்தில்  இத்தலம் உள்ளது. கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து, வடக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் நகரப்பேருந்துகள் இவ்வழியாக செல்கின்றன.

சுவாமி : பசுபதீசுவரர்,  பாசூர்நாதர், உடையவர், வாசீசுவரர்

அம்பிகை : பசுபதி நாயகி, மோகனாம்பாள், பணைமுலை  நாச்சியார்,  தம்காதலி

தலமரம் : பாசு (மூங்கில்)

தீர்த்தம் : சோம தீர்த்தம், மங்கள தீர்த்தம்

பதிகம் : 
   திருநாவுக்கரசர் - 2
   திருஞானசம்பந்தர் - 1
   சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: பசுமை ஊர் என்றதாலும், சிவபெருமான் மூங்கில் (பாசு) அடியில் முளைத்ததனாலும், பாசூர் என பெயர் பெற்றது என்பர். இத்தலத்தில் விநாயகப் பெருமானின் 'கோடச கணபதி' எனப்பெறும் 16 வகையான மூர்த்தங்கள் உள்ளது தனிச் சிறப்பு. இத்திருத்தலத்தில் அம்பிகை, திருமால், சந்திரன், வியாசர், அங்காரகன், கரிகால்சோழன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலம்.

பசுவொன்று மூங்கிற் புற்றில் பால் சொரியக் கண்ட வேடர்கள் அதனை வெட்டிப் பார்த்த நிலையில், சிவலிங்கத் திருமேனி வெளிப்பட்டதாக வரலாறு.  சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சிவபெருமான் அம்பிகையின் எழிலில் இனிமை கொண்டு தம்காதலி என அழைத்ததாகவும் அதுவே இன்று அம்பாளுக்கு வழங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் கருவறை தூங்கானை மாடம் நிலையில் அமையப் பெற்றுள்ளது. இத்தலத்தை அமைக்க விரும்பிய கரிகாலன் மீது குறுநில மன்னன் ஒருவன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை ஏவினான். அப்போது சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கினார். இதை நினைவூட்டும் வகையில் காளியின் சிற்பம் ஒன்று நூற்றுக்கால் மண்டபத்தின் முன்னே உள்ளது.

 மேலும் கரிகாற் சோழவேந்தனுக்கு பகையான குறும்ப அரசனுக்கு உதவியாக, சமணர்கள் ஒரு பெரும் பாம்பை குடத்தில் அடைத்து சோழனிடம் அனுப்பினார்கள். சோழனுக்கு துணையாகச் சிவபெருமான் அப்பாம்பை எடுத்து ஆட்டியருளிய திருவூர் என்றும் கூறுவர்.

கோயில் அமைப்பு : கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரங்கள் உடைய இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. முதல் வெளிப்பிரகாரம் நல்ல அகலமான வெளிச்சுற்றாகும். வெளிப் பிரகாரத்தில் பார்ப்பதற்கு விஷேசமாக ஒன்றும் இல்லை. 2வது பிரகாரத்தில் சுவாமி அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தம்காதலி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவன் கருவறை விமானம் சுஜப்பிரஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இவ்வாறு சுவாமி சந்நிதியின் வலப்புறம் அம்மன் சந்நிதி அமைந்துள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்கசக்தி அதிகம் உண்டு என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன. இங்குள்ள ஈஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கத்தை யாரும் தீண்டுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார். சுவாமி சந்நிதியின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் சிலைகள் கருத்தைக் கவரும் வகையில் உள்ளன. மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபை இருக்கிறது. இதில் சிறிதும் பெரிதுமாக 11 விநாயக திருஉருவச்சிலைகள் காண்போர் கருத்தை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை சுற்றிச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, அன்னாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

கரிகாலச்சோழன் இக்கோவிலுடன் தொடர்பு உடையவன் ஒருமுறை சோழமன்னன் கரிகாலன் இந்த வழியாக மூங்கில் காட்டில் சென்று கொண்டு இருக்கும்போது, மூங்கிற்புதரில் சிவலிங்கம் இருக்க கண்டு இவ்வாலயம் சிவபெருமானுக்கு எழுப்பினான் என்று தல வரலாறு கூறுகிறது. பாசு என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் ஆலயத்தின் உள்ளே காணப்படுகின்றன.

மகாசிவராத்திரி இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று இத்தலத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : கடம்பத்தூர்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×