திருத்தல இருப்பிடம்: இலங்கை நாட்டில் வடமேற்கே தலைமன்னார் ரயில் நிலையத்திற்கு கிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது.
சுவாமி : கேதீசுவரர்
அம்பிகை : கௌரியம்மை
தீர்த்தம் : பாலாவி ஆறு
பதிகம் : சம்பந்தர் - 1, சுந்தரர் - 1
தலவிருட்சம்:வன்னிமரம்
கேது வழிபட்டதால், இப் பெயர் பெற்றது. சுந்தரர், சம்பந்தர் இருவரும் இராமேசுரத்தில் இருந்தவாறு, இப் பதியைப் பாடினர். சிறப்புக்கள் இத் தலம் ஈழ நாட்டில் மாதோட்ட நகரில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ளது.
அமைவிடம் திருமூலர் சிவபூமி என்று சிறப்பித்துக்கூறும் இலங்கையின் வடமேல் பாகத்தில் மன்னார் மாவட்டம் உள்ளது. அங்கு மாந்தை என்னும் பிரிவிலே பாலாவித் தீர்த்தக் கரையிலே திருக்கேதீச்சரம் என்னும் சிவத்தலம் அமைந்துள்ளது. புராதன காலத்திலே திருக்கேதீச்சரம் என்பது ஆலயத்தையும் மாதோட்டம் என்பது அது அமைந்துள்ள இடத்தையும் குறித்தன. இக்காலத்திலே திருக்கேதீச்சரம் என்பது கோயிலுக்கும் அது அமைந்துள்ள இடத்துக்கும் பொதுவான பெயராக இருக்கின்றது. கேது ஈசனை வழிபட்ட தலம் என்னும் காரணம் பற்றி இக்கோயில் திரு என்னும் அடைமொழியோடு திருக்கேதீசரம் என்ற பெயரைப் பெற்றது.
இலங்கையிலே திருக்கேதீச்சரம் திருக்கோணேச்சரம் என்னும் இரண்டு தலங்கள் மட்டுமே தேவாரப் பாடல் பெற்ற சிறப்பினை உடையன. திருக்கேதீச்சரநாதர் மீது திருஞானசம்பந்தரும் தேவாரத் திருப்பதிகம் பாடியுள்ளார். இராமேச்சரத்தை வழிபடச்செல்லும் அடியார்கள் ஒரு காலத்திற் கடலின் அக்கரையில் நின்று திருக்கேதீச்சரத்து அண்ணலைத் தொழுதனர். அதற்குச் சான்றாகத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரையும் சுந்தரமூர்த்தி நாயனாரையும் கூறலாம்.
பண்டைய வரலாறு மயன் என்பவன் தேவதச்சன். மகாதுவட்டா என்பவன் அவனுடைய தமையன். இவர்கள் நிருமாணித்த தலம் திருக்கேதீச்சரம் என்பது மரபுக் கதை. மயனின் மகளும் இராவணனின் மனைவியுமாகிய மண்டோதரி இத்தலத்தை வழிபட்டாள். தீர்த்த யாத்திரை செய்த அருச்சுனன் இதனை வழிபட்டானெனத் தட்சிணகைலாய புராணங்க் கூறுகின்றது. விசயனுடன் இலங்கைக்கு வந்த உபதிஸ்ஸன் என்னும் பிராமணன் திருக்கேதீச்சரத்திற் பூசை செய்தான் என மகாவம்சம் குறிப்பிடுகின்றது.
மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற சிவலிங்கம் காசியிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றது.கருங்கல்லால் கட்டப்பட்ட கௌரியம்பாள் கோயில் மலேசியா திருப்பணிச்சபைக் கிளையினரால் அமைக்கப்பட்டதாகும்.
இத்தலத்தில் ஐந்து பெரிய தேர்கள் வைகாசி விசாகத்தின் போது பவனி வரும்.மகாசிவராத்திரி சமயம் பாலாவி நீர் எடுத்து வந்து, மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.இதனை தீர்த்தக்காவடி என்று சொல்வார்கள்.அம்மனுக்குக் கேதார கெளரி விரதம் கொண்டாடப்பட்டு வருவது உண்டு.இங்கு தரிசனம் செய்ய வருவோர், பாலாவி குளத்தில் குளித்து, திருகேத்தீச்சரநாதரை வழிபாடு செய்கிறார்கள்.பூசைசெய்யும் கட்டளைக்காரர்களுக்கு மட்டும் தான் உள்ளே சென்று தரிசிக்க அனுமதி உண்டு.கட்டளை தாயார் இல்லாதோர் வெளியிலிருக்கும் மகாமண்டபத்திலிருந்துதான் இறைவனை வணங்க முடியும்.இத்தலத்திற்குரிய தேவாரப்பாடல்களை சந்நிதியில் நின்று பாட அனுமதி உண்டு.
திருத்தலச் சிறப்புகள்: பாலாவி என்ற ஆற்றின்கரையில் மாந்தோட்டம் இருக்கின்றது. அதில் திருக்கேதீச்சுரர் திருக்கோவில் இருக்கின்றது. பிருகு முனிவர் வழிபட்ட திருவுர. மாலியவான் என்னும் மன்னன் வழிபட்டுப் பேறுபெற்ற திருவுர். கேது ஈஸ்வரனை வழிபட்டமையால் இதற்கு கேதீஸ்வரம் என்னும் பெயர் வந்தது. துவட்டா என்னும் முனிவர் தவஞ்செய்து பேறு பெற்றது. இது ஈழநாட்டுத் தேவார தலங்கள் இரண்டனுள் ஒன்று.
அருகிலுள்ள விமானதளம் : அனுராதாபுரா
ரயில் நிலையம் : தலைமன்னார்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு