196. திருவேடகம்





	


	



























	




 




	








 




11:47:12 PM         Thursday, April 30, 2026

196. திருவேடகம்

196. திருவேடகம்
196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம் 196. திருவேடகம்
Product Code: 196. திருவேடகம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் மதுரை மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. திரு ஏடகம் மதுரைக்கு வடமேற்கே 17 கி.மீ. தொலைவில் சோழ வந்தான் சாலையில் வைகையாற்றின் வடகரையில் உள்ளது. பேருந்து வசதி உள்ளது.  மேலும் திருச்சி-மதுரை ரயில்பாதையில் சோழவந்தான் நிலையத்திற்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமி : ஏடக நாதேஸ்வரர்

அம்பிகை : ஏலவார் குழலம்மை, சுகந்த குந்தளாம்பிகை

தலமரம் : வில்வம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தக்குளம், வைகை நதி

திருத்தலச் சிறப்புகள் : இத்திருத்தலத்தில் பிரம்மன் திருமால் ஆதிசேடன் கருடன் வியாசர் பராசரர் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இத்தலம் சித்தப் பிரமையைத் தீர்க்கும் பிரார்த்தனைத் தலமாக விளங்குகின்றது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம்.

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. 

தல வரலாறு: மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.

இத்தலம் கிழக்கு நோக்கிய சந்நிதி. திருஞானசம்பந்தர் சமணர்களோடு செய்த புனல் வாதத்தில் வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்து ஓலையில் வரித்து வைகையாற்றில் விடஇ அது வெள்ளத்தை எதிர்த்துச் சென்று கரையை அடைந்த இடம் இது. இங்கு விநாயகர் முருகர் அறுபத்து மூவர் தட்சிணாமூர்த்தி சோமாஸ்கந்தர் திருஞானசம்பந்தர் லிங்கோற்பவர் பஞ்ச லிங்கங்கள் சப்த மாதர்கள் நாகலட்சுமி துர்க்கை சண்டேசுவரர் நடராஜர் நவக்கிரகங்கள் வல்லபை கணபதி சாஸ்தா சந்திரன் கார்த்திகை மாதர்கள் சண்டிகேசுவரி முதலிய சந்நிதிகள் உள்ளன.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : மதுரை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×