200. திருராமேஸ்வரம்





	


	



























	




 




	








 




8:33:58 AM         Thursday, April 30, 2026

200. திருராமேஸ்வரம்

200. திருராமேஸ்வரம்
200. திருராமேஸ்வரம் 200. திருராமேஸ்வரம் 200. திருராமேஸ்வரம் 200. திருராமேஸ்வரம் 200. திருராமேஸ்வரம் 200. திருராமேஸ்வரம் 200. திருராமேஸ்வரம்
Product Code: 200. திருராமேஸ்வரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுர மாவட்டத்தின் தலைநகரான இராமநாதபுரத்திற்குக் கிழக்கே 52 கி.மீ. தொலைவில் கடலால் சூழ்ந்த தீவாக அமைந்துள்ளது இத்தலம். மதுரையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தீவு சங்கு போன்ற அமைப்பை உடையது. இராமேசுவரம் தீவையும் நிலப்பரப்பையும் ஒரு சாலைப் பாலமும் ஒரு ரயில் பாதையும் இணைக்கின்றன. இத்தீவு உள்ள கடல் வங்கக் கடல் ஆகும். இலங்கையின் தலைமன்னாருக்குச் சமீபத்திலுள்ளது.

சுவாமி : இராமநாதேசுவரர்,  இராமலிங்கேசுவரர்

அம்பிகை : மலைவளர் காதலி, பர்வத வர்த்தினி

தீர்த்தம் : அக்னி தீர்த்தம் மற்றும் 64 தீர்த்தங்கள்

தலப்பெயர் காரணம் : இராவணனை வதம் செய்த தோஷம் நீங்க இராமர் இங்கே ஒரு சிவலிங்கம் தாபித்து வழிபட்டார். இராமர் ஈசனை வழிபட்டதால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் எனப் பெயர் ஏற்பட்டது. இராமநாதர் என சிவபெருமானுக்கு இங்கே பெயர் உண்டாகியது. இராவணன் பிரம்மாவின் பேரனின் மகன். அதாவது கொள்ளுப்பேரன். எனவே இராவணன் பிராமணன் ஆவான். பிராமணனையும் பசுவையும் வதம் செய்வது பெரும் தோஷம். பிரம்மகத்தி தோஷம் உண்டாகும் என நமது இந்து மதத்தின் நம்பிக்கை. எனவே தான் இராமர் அந்த தோஷம் நீங்கச் சிவ பூசை செய்தார்.

இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் மணக்குன்று அமைந்துள்ளது. இந்த மணற்குன்றின் மீது உச்சியில் ராம் ஜரோகா ஆலயம் உள்ளது. ராமேசுவரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் தனுஷ்கோடி உள்ளது. வில்லின் நுனியை இராமன் ஊன்றியதால் தனுஷ்கோடி என்ற பெயர் ஏற்பட்டதாம்.

 

 

தலப் பரிவார மூர்த்திகள் : விசுவநாதர்-விசாலாட்சி ஜோதிர் லிங்கம் விநாயகர் சுப்பிரமணியர். சேதுமாதவர் மகாவிஷ்ணு சபாபதி நடராஜர் இராமர் இலக்குமணர் அனுமன் சீதை சுக்கிரீவன் விபீஷணர் அட்ட லட்சுமிகள் நந்தி பள்ளி கொண்ட பெருமாள் எட்டு சக்தி தேவிகள் ஆகியன.  

தீர்த்தங்கள்  : இராமேஸ்வரம் கோயிலினுள் மஹாலெட்சுமி தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலுக்கு வெளியே அக்னி தீர்த்தம் சேது தீர்த்தமென 23 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான தீர்த்தங்கள்: சர்வதீர்த்தம் கோடிதீர்த்தம் அக்கினி தீர்த்தம் ஜடாதீர்த்தம் சேது சமுத்திர தீர்த்தம் இங்க தீர்த்தம் மிக முக்கியம்.

யாத்திரை செல்ல ஏற்ற காலம் : அதிக மழைக் காலமான அக்டோபர் மாதங்கள் தவிர வருடம் முழுவதும் இராமேசுவரம் யாத்திரை மேற்கொள்ளலாம்.

 

தலச்சிறப்புகள் : இராமேசுவரம் நமது நாட்டிலுள்ள பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே சிறப்பான தலம். வைணவரான இராமர் சிவபெருமானை வழிபட்ட தலம். வைணவக் கோயிலும் சிவன் கோயிலும் ஒருங்கே உள்ளதால் இருசமயத்தினரும் ஒற்றுமையாக வழிபட வருகின்றனர். மேலும் வட இந்தியாவிலிருந்தும் யாத்திரிகள் இங்கே வழிபட வருகின்றனர். அதனால் நம் நாட்டின் தேசீய ஒருமைப்பாட்டிற்கு இராமேசுவரம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
 நம்மக்கள் தமது ஜென்ம சாபல்யம் அடைய மேற்கொள்ளும் தீர்த்த யாத்திரை தலயாத்திரை காசி - இராமேசுவரம் புனித யாத்திரை தொடங்குவோர் தமது யாத்திரையை இங்கிருந்து தொடங்குகின்றனர். இராமேசுவரம் கடலில் மணல் எடுத்துச் சென்று காசியின் கங்கையில் கரைத்துவிட்டு காசி அலகாபாத் இடங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து இராமேசுவரத்தில் இராமனாதருக்கும் காசி விசுவநாதருக்கும் அபிஷேகம் செய்தும் சாதுகளுக்கு அன்னதானம் செய்தும் யாத்திரையை முடிப்பார்கள். அப்படி செய்தால்தான் யாத்திரை முழுப்பயன் தரும் என நம்மக்கள் நம்புகின்றனர். நம் பாரத நாட்டின் நான்கு எல்லைகளின் உச்ச புனித தலங்களான வடக்கே பத்ரிநாத் மேற்கே துவாரகை கிழக்கே பூரி ஜெகந்நாதம் தெற்கே இராமேசுவரம் என பெருமை பெற்று திகழும் புண்ணிய தீவு ஆகும்.
 
மூர்த்தி  தீர்த்தம் தலம் என்ற சிறப்புப் பெயர் பெற்றது.

இராமர் சிவனை வழிபட்டது. விபீடணனுக்குப் பட்டம் கட்டிய இடம் சேது பாலம் தொடங்கிக் கட்டிய இடம். மேலும் பல இராமாயண சம்பவங்கள் நடைபெற்ற தலம். இராமர் பட்டாபிஷேகத்திற்குப் பின்னும் தம் குடும்பத்துடன் வந்து இங்கே வழிபட்ட தலமாகும். இலங்கைப் போருக்குப்பின் புட்பக விமானத்தில் போகும் போதும் சீதைக்கு தாம் தங்கியிருந்த இடங்களைக் காட்டிச் செல்லும் போது இத்தலத்தையும் காட்டிச் சென்றராம்.

தனுஷ்கோடிக்கும் இலங்கைத் தலைமன்னாருக்கும் 30 கி.மீ தொலைவுதான் உள்ளது. மேலும் கடலும் ஆழம் இல்லாமல் பல தீவுகள் வரிசையாகக் காணப்படுகிறது. நன்கு நீந்துபவர்கள் நீந்தியே வந்துவிடலாம். எனவே பூகோள அமைப்பு அந்தக்காலத்திலேயே முதன்முதலில் அனுமானால் காணப்பட்ட பெருமை கொண்டது. தற்போது பலகோடி செலவில் சேதுத் திட்டம் ஆரம்பமாகி உள்ளது. இங்குள்ள கந்தமான பர்வதம் என்னுமிடத்திலிருந்து தான் அனுமன் கடலை தாவிக் கடந்தார் என்று கூறப்படுகிறது.

 

இந்தத் தலத்தில் மூன்று நுழை விநாயகர்கள் மூன்று சிறப்பு லிங்கங்கள் மூன்று அம்பாள்கள் மூன்று பெருமாள்கள் அமைந்துள்ளனர். அட்டலட்சுமிகள் சந்நிதியும் உள்ளன.

கோயிலின் முன்பு நுழை வாயிலின் வலது பக்கம் உள்ள விநாயகர் இருபக்கமும் சித்தி புத்தி என்று தமது இரு மனைவிமார்களுடன் நமக்கு காட்சி தருவது ஓர் அற்புத காட்சியாகும். வட இந்தியப் பக்கம்தான் விநாயகர் மனைவியுடன் காட்சி தருகின்றார். தென்னிந்தியப்பக்கம் விநாயகரை ஒரு பிரமச்சாரியாகத் தான் மக்கள் என்னுகின்றனர்.

இராமாயணப் பக்தர்களான இராமர், இலக்குமணர்,. சீதை, விபீஷணன், சுக்ரீவன், அனுமன் ஆகியோர் விக்கிரகங்களும் உள்ளன. பிறவி, மரணம், மூப்பு, அஞ்ஞானம், நோய் இவற்றைப் போக்கும் ஜடாதீர்த்தம் கோடி தீர்த்தம் என 22 தீர்த்தங்கள் உள்ளன. உலகப்புகழ் வாய்ந்த அதிசயங்களில் ஒன்று எனக் கூறும் சிறப்பு வாய்ந்த மூன்றாம் பிரகாரம் பலசிற்பங்களுடன் கூடிய தூண்கள் நிறைந்து விளங்குகின்றது. தேவாரம் பாடிய இருவரால் பாடப்பெற்ற தலம். அப்பர் சம்பந்தர் பாடியுள்ளனர். மற்றும் அருணகிரிநாதர் தாயுமானவர் ஆகியோரும் இத்தலம் பற்றிப் பாடியுள்ளனர்.

 

திருத்தலப்புராணம் : இராமாயண காலம் முதல் இராமேசுவரத்தில் தல வரலாறு ஆரம்பமாகிறது. இராமரும் இலக்குமணரும் சீதையுடன் வனவாசம் வந்தபோது இத்தலத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்ததாக வரலாறு கூறுகிறது. நாசிக் அருகே பஞ்சவடியில் அம்மூவரும் தங்கிப் பர்ணசாலை அமைத்து வாழ்ந்த போது இலங்கை மன்னன் இராவணன் சூர்ப்பணகையின் தூண்டுதலால் அங்கே சென்று சீதையை களவாடிச் சென்றான். சீதையைத் தேடி வந்த இராமர் கிட்கிந்தை மன்னன் சுக்கிரீவன் மற்றும் அவர் மந்திரி அனுமன் உதவியுடன் வானரப்படை கொண்டு இலங்கை சென்றார்.

 இராவணனுடன் கடும் போர் செய்து இராவணனையும் மற்றும் அவனுடன் சேர்ந்த அரக்கர்களையும் வதம் செய்து சீதையை மீட்டு வந்தார். இராவண வதத்திற்குப் பின் விபீஷணருக்கு இலங்கை மன்னனாக பட்டம் சூட்டப்பட்டது. எனினும் இராவணன் பிரம்மதேவரின் கொள்ளுப்பேரன். அதனால் இராவணன் ஒரு பிராமணன் ஆவான். பசுவையும் பிராமணரையும் கொல்வது கொடிய பாவம் என நம் இந்துமதம் கூறுகிறது. பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் எனவும் நமது இந்து மதத்தர்மம் கூறுகிறது. மேலும் இராவணன் சிறந்த சிவபக்தன். சிவனுடைய பல வரங்கள் பெற்றவன். ஈஸ்வர பட்டமும் பெற்றவன். எனவே இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க இந்த இடத்தில் சிவலிங்க பூசை செய்ய இராமரும் எண்ணினார். காசிக்கு சென்று ஒரு சிவலிங்கம் கொண்டுவர இராமர் அனுமனை அனுப்பினார். வெகு தொலைவில் உள்ள காசிக்கு சென்று காசியிலுள்ள காசி தல காவல் தெய்வமான காலபைரவருடன் போர் செய்து பின் லிங்கம் எடுத்து வர காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. குறிப்பிட்ட நல்ல நேரம் கடந்து விடுமோ என அஞ்சி சீதை கடல் மணலால் ஒரு சிவலிங்கம் செய்ய அதனை வழிபாடு செய்யத் நினைத்தனர். ஆனால் பூஜை தொடங்கச் சற்று நேரத்திற்கு முன் அனுமனும் வேகமாய் காற்றாய் பறந்து சிவலிங்கங்களைக் கொண்டு வந்துவிட்டார். தாம் வருவதற்குள் ஒரு லிங்கம் உருவாக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அனுமனுக்கு கோபம் வந்து விட்டது. தமது வாலினால் சீதை செய்த சிவலிங்கத்தை அப்புறப்படுத்த முயன்றார்.

 அனுமனை இராமர் சமாதானப்படுத்தி அவர் கொண்டு வந்த லிங்கங்களை வைத்து முதலில் பூசை செய்து பின் மணல் லிங்கத்திற்கும் பூசை செய்தார். இநத முறையே தற்போதும் அனுமன் கொண்டு வந்த காசி விசுவநாதர் விசாலாட்சிக்கு ஒரே சமயத்தில் பூசை செய்துவிட்டு அதன் பிறகே மூலவரான இராமலிங்கத்திற்குப் பூசை நடைபெறுகிறது. இராமநாதர் மீது அனுமன் வால்பட்ட தழும்பு இன்னும் காணலாம். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீராமலிங்கப் பிரதிட்டை எனக் கோயில் வளாகத்தினுள் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் தத்ரூபமாக அமைத்துள்ளனர். இக்காட்சியைக் காணக் கட்டணம் உண்டு. அனுமன் கைலாயம் சென்று லிங்கம் கொண்டு வந்ததாக ஒரு சிலர் கூறுவர். அது கைலாயமல்ல காசிதான் என்பதற்கான ஆதாரம் உள்ளது. காசி புராணத்தில் அனுமன் காசிக்கு வந்து காசியின் காவல்தெய்வமான காலபைரவருடன் சண்டைபோட்டு சிவலிங்கம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. காசியில் கங்கைக் கரையில் அனுமன் சிவலிங்கம் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கு விசுவநாதர் லிங்கம் எனக் காசிவிசுவநாதர் லிங்கத்தின் பெயர் வழங்குகிறது. அன்னைக்கு விசாலாட்சி என்ற பெயரும் உள்ளது. மேலும் காசி தீர்த்தம் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இக்காரணங்களால் காசியிலிருந்துதான் அனுமன் லிங்கமெடுத்து வந்துள்ளார் என உறுதியாகிறது. 

இத்தலத்திலுள்ள ஜோதிர்லிங்கம் விபீஷணனால் இங்கே நிலை நிறுத்தப்பட்டது. தமது அண்ணன் முதலானோர் இறப்பிற்கு தாம் தானே காரணம் என எண்ணி இந்தப் பாவம் போக்க விபீஷணன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து சிவபெருமான் அருளால் தமது பாவத்தைப் போக்கிக் கொண்டார். சிவபெருமானிடம் வரங்கள் பெற்ற விபீஷணன் அவர் வழிபட்ட லிங்கத்தில் சிவன் எப்போதும் தங்கி இருந்து மக்களுக்கு அருள் வழங்க வேண்டுமென்று வரம் பெற்றுக் கொண்டார். அதன்படி சிவபெருமான் ஜோதியாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமாகி ஜோதிர் லிங்கமாக விளங்குகின்றார்.

எனவே மூலவர் இராமநாதலிங்கம் அனுமன் காசியினின்றும் கொண்டு வந்து இரண்டு லிங்கங்கள் ஜோதிர்லிங்கம் இவற்றுடன் மேலும் பல லிங்கங்கள் இத்தலத்தில் உள்ளன.

விமானதளம் : மதுரை

ரயில் நிலையம் : இராமேஸ்வரம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×