202. திருக்கானப்பேர்





	


	



























	




 




	








 




8:32:47 AM         Thursday, April 30, 2026

202. திருக்கானப்பேர்

202. திருக்கானப்பேர்
202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர் 202. திருக்கானப்பேர்
Product Code: 202. திருக்கானப்பேர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                 திருக்காணப்பேர் (காளையார்கோவில்)

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்திருவூர் தற்போது காளையார் கோயில் என்று வழங்கப்படுகிறது. மதுரையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சிவகங்கைக்குக் கிழக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. நாட்டரசன் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவகங்கை தேவகோட்டை மதுரை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

1. சுவாமி : காளீஸ்வரர்

அம்பிகை : சொர்ணவல்லியம்மை

இவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார்
 

2. சுவாமி : சோமேசர்

அம்பிகை : சௌந்தர நாயகியம்மை

இவர் வலப்பக்கத்தில் விளங்கும் மூர்த்தியாவார்.
 

3. சுவாமி : சுந்தரேசுவரர்

அம்பிகை : மீனாட்சியம்மை

இவர் இடப்பக்கத்தில் விளங்கும் மூர்த்தியாவார்.

தீர்த்தம் : கஜபுஷ்கரிணி - யானை மடு

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் பண்டாசுர வதத்தின் பின்பு காளிதேவி காளீசுவரரை வழிபட்டு சொர்ண வல்லியாக உருவம் மாறி திருமணம் கொண்டாள். திருஞானசம்பந்தர் சுந்தரர் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம். இத்தலத்தின் வேறு பெயர்கள்: தட்சிணகாளிபுரம்இ சோதிவனம் மந்தார வனம் மகாகாளபுரம் தேவதாரு வனம் சோமநாத மங்கலம் என்பனவாகும். இத்தலம் 9 நிலை கொண்ட 157 அடி உயரம் உடைய பெரிய ராஜகோபுரம் கொண்ட கோயில். இத்தலத்தில் மூன்று சந்நிதிகள் உள்ளன.

கோயில் கிழக்கு நோக்கியது. சங்க காலத்தில் இவ்வூர் ஞானப்பேரெயில் என்று வழங்கப்பட்டது. சாபத்தினால் காட்டானையாக மாறிய ஐராவதம் பூசித்தப் பதி. இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுந்தரருக்கு கனவில் காளைப் பருவத்தின் வடிவத்தோடு காட்சி நல்கி கையில் பொற் செண்டும் திருமுடியில் சுழியும் கொண்டு யாம் இருப்பது கானப்பேர் என்று அருளிச் செய்து மறைந்தார். அகத்தியர் திருமகள் எட்டுத் திக்குப் பாலகர்கள் வரகுண பாண்டியன் முதலியோர் பூசித்த தலம். திருக்கோபுரம் மருதுபாண்டியனால் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்த சகோதரர்களான மருது பாண்டியர்களை தலையை துண்டித்து கொல்ல தண்டனை வழங்கியபோது மருது பாண்டிய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது தலையை இத்தலத்தினுள் அடக்கம் செய்துள்ளனர். அவ்விடத்தை இன்றும் காணலாம்.

இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. இவைகளில் சிறிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், பெரிய இராஜகோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்படவையாகும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே விளங்குகிறது. மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார். வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர். கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் உள்ளன. விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவர். படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்குத் தான் நடைபெறும். இவ்வாறு சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

தல வரலாறு: சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற் காளையார்கோவில்.

இவ்வாலயம் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

ரயில் நிலையம்   : நாட்டரசன் கோட்டை

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×