209. திருமுருகன் பூண்டி





	


	



























	




 




	








 




8:43:02 AM         Thursday, April 30, 2026

209. திருமுருகன் பூண்டி

209. திருமுருகன் பூண்டி
209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி 209. திருமுருகன் பூண்டி
Product Code: 209. திருமுருகன் பூண்டி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கொங்கு நாட்டில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் அவிநாசிக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. மாதவிவனம் முல்லைவனம் கந்தமாபுரி என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். இது நொய்யல் ஆற்றின் வடபகுதியில் உள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமி : முருக நாதேசுவரர், முருகநாதசுவாமி

அம்பிகை : முயங்கு பூண் முலையம்மை, ஆலிங்க பூஸணஸ்தனாம்பிகை , ஆவுடைநாயகி மங்களாம்பிகை

தலமரம் : மாதவி வனம் (குருக்கத்தி) வில்வம்

தீர்த்தம் : சண்முக  பிரம்ம ஞான தீர்த்தங்கள்.

பதிகம் : சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இறைவன் பூதகணங்களை ஏவி சுந்தரர் செல்லும் வழியில் பொருளைக் கவரச் செய்து பின்பு அளித்தருளிய பதி. சுந்தரர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். முருகக் கடவுள்  வழிபட்ட தலம். இதற்கு மாதவி வனம் என்ற பெயரும் உண்டு. துர்வாசமுனிவர் மாதவி மரத்தை வானுலகிலிருந்து இங்கு கொண்டுவந்து நட்டு வளர்த்தார் என்பார்கள். (மாதவி-குருக்கத்தி). துர்வாச முனிவருக்கு கூத்தப்பெருமான் பிரமதாண்டவக் காட்சி அளித்த திருவூர். இக்கூத்தபெருமான் சந்நிதி தனிச் சிறப்பு உடையதாகும்.

கோவில் அமைப்பு : இத்தலம் நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலமாகும். மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று நுழைவு கோபுரம் இல்லை. நான்குபறமும் உயர்ந்த மதில்களை உடையதால் ஒரே ஒரு பிரகாரத்துடன் கூடிய இக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் மூலவர் சிவலிங்க வடிவில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். உட்பிரகாரத்தில் நிருதி விநாயகர் சண்முகர் துர்க்கை பைரவர் சனீஸ்வரர் நவகிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலப்பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் முருகர் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே சண்முக தீர்த்தமும் ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இங்கு தங்கி நீராடச் செய்து சுவாமியை வழிபட்டால் அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது ஐதீகம். முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

தலவரலாறு : சேரமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகப்பூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தன் பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப்பொருட்களை கொள்ளையடித்து வரச்செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதனை விளக்கும் வகையில் இக்கோயில் மண்டபத்தில் வில் ஏந்தி வேட்டுவன் கோலத்தில் சிவபெருமான் சிற்பமும் பரிசுப் பொருட்களை பரிகொடுத்த நிலையில் சுந்தரர் கவலையுடனும் ஈசனால் பரிசுப்பொருட்களை திரும்ப பெறப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. இச்சிற்பங்கள் இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி தலம் விளங்குகிறது.
 

அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×