212. திருவெஞ்சமாக்கூடல்





	


	



























	




 




	








 




8:40:49 AM         Thursday, April 30, 2026

212. திருவெஞ்சமாக்கூடல்

212. திருவெஞ்சமாக்கூடல்
212. திருவெஞ்சமாக்கூடல் 212. திருவெஞ்சமாக்கூடல் 212. திருவெஞ்சமாக்கூடல் 212. திருவெஞ்சமாக்கூடல் 212. திருவெஞ்சமாக்கூடல்
Product Code: 212. திருவெஞ்சமாக்கூடல்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் குடவனாற்றின் கிழக்குக்கரையில் உள்ளது. கரூர் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 24 கி.மீ தொலைவில் உள்ளது. கரூர்-அரவக்குறிச்சி சாலையில் 13 கி.மீ  சென்று சீத்தப்பட்டி (அ) ஆறுரோடு பிரிவில் 8 கி.மீ செல்ல வேண்டும். கரூர்-ஆற்றுமேடு நகரப்பேரூந்து வெஞ்சமாக்கூடல் வழியாக செல்கிறது.

சுவாமி : கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர்

அம்பிகை : பண்ணேர் மொழியம்மை, மதுர பாஷிணி, விகிர்த நாயகி

தலமரம் : வில்வம்

தீர்த்தம் : விகிர்த தீர்த்தம், குடவனாறு

பதிகம் : சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: குடவன் ஆற்றோடு ஒரு காட்டாறு கூடுவதால் கூடல் என்னும் பெயர் உண்டாயிற்று. சுந்தரர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம். வெஞ்சன் என்னும் வேடமன்னன் பூசித்த பதி. தேவேந்திரன் வழிபட்டுப் பேறு பெற்றார். இத்திருத்தலத்தில் விநாயகர் முருகர் சூரியன் சநதிரன் பஞ்ச பூத லிங்கங்கள் வள்ளி தெய்வ யானையோடு ஆறுமுகக் கடவுள் நவக்கிரகங்கள் பைரவர் நம்பியாண்டார் நம்பிகள் சேக்கிழார் நால்வர் அறுபத்து மூவர் பல்லக்குச் சொக்கர் சோமாஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்தலம் சிறிய பள்ளத்தில் உள்ளது.

கோயில் அமைப்பு : குடகனாற்றின் கிழக்கு கரையில் உள்ள இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த சிவஸ்தலமாகும். தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து ஈசன் கிழவராக வந்து பக்திமுதிர்ந்த ஒரு கிழவியிடம் தன் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் இக்கோவிலுக்குச் செய்த தானங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கோவில் விபரங்கள்: குடகனாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து பாடலுக்குப் பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் இக்கோவிலுக்குச் செய்த தானங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : கரூர்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×