213. திருபாண்டிக் கொடுமுடி





	


	



























	




 




	








 




9:03:41 PM         Thursday, April 30, 2026

213. திருபாண்டிக் கொடுமுடி

213. திருபாண்டிக் கொடுமுடி
213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி 213. திருபாண்டிக் கொடுமுடி
Product Code: 213. திருபாண்டிக் கொடுமுடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்திருவூர் தற்போது கொடுமுடி என்று வழங்கப்படுகிறது. ஈரோட்டுக்குத் தென்கிழக்கே 39 கி.மீ. தொலைவில் உள்ளது. இது காவிரியின் மேற்கரையில் உள்ள பதி. திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. கோயில் கொடுமுடி ரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. சேலம் திருச்சி ஈரோடு கரூர் முதலிய ஊர்களிலிருந்து செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

சுவாமி : மகுடேஸ்வரர்,  கொடுமுடி நாதர்

அம்பிகை : பண்மொழி நாயகி, வடிவுடை நாயகி, திரிபுரசுந்தரி , மதுரபாஷிணி

தலமரம் : வன்னி

தீர்த்தம் : காவிரி,  தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

பதிகம் : 
சுந்தரர் - 1
திருஞானசம்பந்தர் - 1
திருநாவுக்கரசர் - 1

சிறப்புகள் : சுமார் 2000ஆண்டுகள் பழமையான சிவத்தலம். சிவபெருமான் சுயம்பு மூர்த்த்தியாக உள்ள ஸ்தலம். கொங்கு நாட்டில் புகழ்பெற்ற 7 சிவத்தலங்கள் ஒன்று. நால்வர்களில் அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரி நாதரால் பாடல் பெற்ற திருத்தலம்,

காவிரி நதிக்கரையின் படுக்கையில் அமைந்த அழகிய திருத்தலம் , பிரம்மா விஷ்ணு, சிவன் மூவரும் ஒருங்கே அமைந்த ஸ்தலம்.

பிரம்மா ,விஷ்ணு ,அகத்தியர் பரத்வாசர் வழிபட்ட ஸ்தலம் . மேருவின் சிகரமே லிங்கமாய் விளங்குவாதால் கொடுமுடி என பெயர் பெற்றதாக வரலாறு.  அக்காலத்திய கல்வெட்டும் கி.பி 2 இம் நூற்றாண்டில் கோமவர்மரும் , தேர்மாறன் நரசிம்ம பல்லவன் 7ஆம் நூற்றாண்டிலும் ,சுந்தரபாண்டிய கேசரிவர்மன் 13 நூற்றாண்டிலும் , தண்டிகை காளியண்ணன் 17 ஆம் நூற்றாண்டிலும் திருக்கோவில் திருப்பணி செய்ததாக திருக்கோவில் வரலாறும் கல்வெட்டுகளும் இயம்புகிறது. 

5 காலப்புஜைகள் நடைபெறுகிறது . பிரமோற்சவம் ,சிவராத்திரி,பிரதோஷம் , ஆகிய விஷேச காலங்களில் கூட்டம் அலைமோதுகிறது. அருள்மிகு ஸ்ரீ மகுடேஷ்வரர் ஸ்ரீதிருக்கோவில் சுயம்புவாக அழகாக அமைந்துள்ளார் . தட்சிணாமூர்த்தி ,காவிரிகண்ட விநாயகர் , சோமஸ்கந்தர் , அகஸ்தீஷ்வரர் ,கஜலட்சுமி ,ஸ்ரீசுப்பிரமணியர் ,சண்டிகேஷ்வரர், துர்க்கை ஆகியோர்களை திருக்கோவிலில் தரிசிக்கலாம் .

அழகான வடிவுடை அம்பாள் சன்னதி நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில உள் பிரகாரத்தில் வல்லப கணேசர் ,சோழிச்சரர் ,விசுவேசுவர் ,காசி விஷ்வநாதர் , விசாலட்சி ,சரஷ்வதி, சப்தமாதக்கள் சிலைகள் ரசிக்கவேண்டியனவாகும். பிரம்மா தனியாக சன்னதிகொண்ட பெருமை மிக்க இடம். 2000 வருடங்கள் கடந்த பழமையான வன்னி மரத்தடியில் அமர்ந்த பிரம்மாவின் சிலை அழகே உருவானதாகும் . 

ஸ்ரீ வீரநாராயணப்பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. திருக்கோவில் கொடிமரமும் கருடாள்வார் சன்னதியும் அழகானதாகும். திருக்கோவில் மூலவர் பள்ளிகொண்டுள்ள அழகு தரிசனத்திற்குரியது. திருமங்கையாள்வார் ,கருடாள்வார் , தொண்டரடிப் பொடியாள்வார் , திருமங்கையாள்வார் , குலசேகராள்வார் , பொய்கையாள்வார் , திருப்பாணாள்வார், பூதத்தாள்வார் ,பெரியாள்வார் ,மதுரகவி , பேயாள்வார் ,நம்மாள்வார் ,பிரம்ம நாதர் என அழகான சிலைகள் வணங்கத்தக்கது. ஸ்ரீமகாலட்சுமி தாயார்அழகான சன்னதியாகும். ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீசனிஸ்வரர் சன்னதி காக வாகனத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சனிஷ்வரருக்கு தனிச்சன்னியும் ,நவகிரக பீடத்தில் இருப்பது போன்று மேற்கு நோக்கி அமைந்திருப்பது விஷேசமான ஒன்றாகும் . 

இத்திருத்தலத்தில் அகத்தியர் திருமால பிரம்மன் பரத்துவாஜர் மலையத்துவச பாண்டியன் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். மூவர் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலம்.  இத்தலம் கிழக்கு நோக்கிய சந்நிதி.

இத்தலத்தின் வரலாறு :  வாயுவின் வேகத்தால் மேரு மலையிலிருந்து சிதறிய சிகரம் ஒன்று ஐந்து மணிகளாக உடைபட்டு விழுந்தன. அவற்றுள் சிவப்பு மணி திருவண்ணாமலை எனவும் மரகத மணி திருஈங்கோய் மலை எனவும் மாணிக்கமணி திருவாட்போக்கி எனவும் நீலமணி பொதிகை மலை எனவும் வைரமணி இத்தலமாகிய பாண்டிக்கொடுமுடி எனவும் தல புராணம் வாயிலாக அறியப்படுகிறது. இங்கு விநாயகர் முருகர் முயலகன் மகேசுவரர் திரிபுரசம்ஹார மூர்த்தி நால்வர் அறுபத்து மூவர் தட்சிணாமூர்த்தி கஜலட்சுமி சரஸ்வதி முதலிய சந்நிதிகள் உள்ளன. மற்றும் வீரநாராயணப் பெருமாள் திருமங்கை நாச்சியார் சந்நிதிகள் உள்ளன. திருக்கோவிலினுள் அரங்கநாதர் சந்நிதி உள்ளது. வன்னி  மரத்தடியில் நான்முகன் (பிரம்மன்) சந்நிதி உள்ளது. இதனை மும்மூர்த்திகள் பதி என்பர். காசியில் கங்கை ஆறு வடக்கிலிருந்து தெற்காக செல்வது போல் இங்கு காவிரி ஆறு வடக்கிலிருந்து தெற்காக தெற்காக செல்வது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : கொடுமுடி

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×