24. திருவெதிர்கொள்பாடி





	


	



























	




 




	








 




11:48:13 PM         Sunday, April 19, 2026

24. திருவெதிர்கொள்பாடி

24. திருவெதிர்கொள்பாடி
24. திருவெதிர்கொள்பாடி 24. திருவெதிர்கொள்பாடி 24. திருவெதிர்கொள்பாடி 24. திருவெதிர்கொள்பாடி 24. திருவெதிர்கொள்பாடி 24. திருவெதிர்கொள்பாடி 24. திருவெதிர்கொள்பாடி
Product Code: 24. திருவெதிர்கொள்பாடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        ஐராவதேஸ்வரர் கோவில், திருஎதிர்கொள்பாடி

திருத்தல இருப்பிடம்  : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில்  மயிலாடுதுறை கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. திருமணஞ்சேரி செல்லும் சாலையில் முதலில் மேலைத் திருமணஞ்சேரி என்ற சிவத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருமணஞ்சேரி செல்ல பேருந்து வசதிகள் உண்டு.

சுவாமி : ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்

அம்பாள் : மலர்க்குழல் நாயகி, சுகந்த குந்தளாம்பிகை

தல தீர்த்தம் : ஐராவதத் தீர்த்தம்

தல விருட்சம் : பன்னீர் மரம்

பதிகம்  : சுந்தரர்

சிறப்புக்கள் : எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 24வது சிவத்தலமாகும். திருமணஞ்சேரியில் பார்வதியை மணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, எதிர் கொண்டு அழைத்த தலம், இந்திரன் மற்றும் ஐராவதம் பெற்ற சாபத்தை நீக்கிய திருக்கோவில், பெண்களுக்கு நல்ல வரன் அமைய உதவும் தலம், மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி.

நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும். இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர், சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம்.

தல வரலாறு : பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் வந்தபோது, சிவபெருமானிடம் அவளை மணந்து கொள்ளும்படி பரத்வாஜ மகரிஷி வேண்டினார். சிவபெருமானும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவபெருமானை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற இறைவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் இத்தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

காசியில் சிவதரிசனம் முடிந்து திரும்பிய துர்வாச முனிவர், எதிரே இந்திரனும், ஐராவதமும் வருவதைக் கண்டான். அப்போது தன்னிடம் இருந்த இறைவனை பூஜித்த மலர் மாலையை, இந்திரனுக்கு பரிசளித்தார், துர்வாச முனிவர். அதனைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை அலட்சியமாக தான் பவனி வந்த ஐராவதம் யானையின் தலை மீது வைத்தான். மலரில் வண்டுகள் மொய்த்ததால், ஐராவதம் அம்மலரை வீசி கீழே தள்ளியது. இதனால் கோபம் கொண்ட முனிவர், இந்திரனுக்கு நோய் பீடிக்கவும், ஐராவதம் காட்டு யானையாகவும் மாற சாபமிட்டார்.

இதனால் மனம் வருந்திய இருவரும் பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்துவிட்டு இறுதியாக எதிர்கொள்பாடி திருத்தலத்திற்கு வந்தனர். இங்கே காட்டு யானை தீர்த்தம் உருவாக்கிட, இந்திரனும் யானையும் சேர்ந்து ஈசனை வழிபட்டனர். இதையடுத்து இந்திரனின் சாபம் நீங்கியது. காட்டுயானை மீண்டும் ஐராவதமாக மாறியது. அதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதத்தின் பெயரைத் தாங்கி ஐராவதீஸ்வரர் ஆனார்.

கோவில் அமைப்பு : இக்கோவிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கருங்கல்லால் கட்டியவர், கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்ட சேரமான் சோழன் ஆவார். மூன்று நிலை ராஜகோபுரம் அமைத்தவர் தொண்டை மண்டலத்து குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியார் ஆவார். இவ்வாலயம் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமரத்து விநாயகரையும், பலிபீடம் மற்றும் அதிகார நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். கருவறை முன் மண்டபம் வழியே உள்ளே நுழைந்தவுடன் மேறகு நோக்கிய சந்நிதியில் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் இறைவன் ஐராவதேஸ்வரர் தரிசனம் தருகிறார். அம்பாள் மலர்க்குழல் நாயகி தெறகு நோக்கி காட்சி தருகிறாள். பரத்வாஜ முனிவர் இங்கு சிவனை வழிபட்டுள்ளார். இவர் வணங்கிய பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. சுவாமி சத்திதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள். கருவறை முன் மண்டபத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர், சூரியன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.

சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை, மாசியில் மகா சிவராத்திரி, திருக்கல்யாணம் மற்றும் அனைத்து பிரதோஷங்களும் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன. 

தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் சுவாமி திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம்   : மயிலாடுதுறை, கும்பகோணம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×