270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)





	


	



























	




 




	








 




4:10:03 AM         Friday, May 01, 2026

270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
Product Code: 270. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)

திருத்தல இருப்பிடம் : தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டம் நந்தியால் வட்டத்தில் உளளது. கிருஷ்ணா நதியின் தென்கரையில் பலமலைச் சிகரங்கள் சூழ்ந்த ஒரு மலைச் சிகரத்தில் 15000 அடி உயரத்தில் ரிஷப கிரி தூரத்திற்கு எந்த ஒரு சிறு கிராம் கூடக் கிடையாது. பெரிய மலைக்காட்டு பகுதி. காட்டு மிருகங்கள் வாழுமிடம் சித்தர்கள் விரும்பும் சித்த மருத்துவ மூலிகைகள் உள்ள இடம். நந்தியால் ரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 110 கி.மீ தொலைவில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்கு அங்கிருந்து நேரே செல்லப் பேருந்து வசதியுள்ளது. சென்யைலிருந்து நந்தியால் வரை ரயில் சென்று ஆத்மகூர் வழியாகப் பேருந்தில் செல்லலாம். 

இறைவன் : மல்லிகார்ச்சுனர். பருப்பதநாதர்

இறைவி : பிரமராம்பிகை தேவி பருப்பதநாயகி

பரிவார மூர்த்திகள் : விநாயகர் சண்முகம் அன்னபூரணி தத்தாத்ரேயர் நந்தி செஞ்சுலெட்சுமி.

தல மரம் : மருத மரம் மேதி ரவி ஜுலி என்ற திரி பலாமரம்.

தீர்த்தங்கள் : பாலாழி தீர்த்தம் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணாநதி

சிறப்புகள் : வட நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது முதலாவது தலமாகும்.சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன. இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.நம் நாட்டில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்று. ஸ்ரீ சைலம் மிகவும் பழமையான சிவத்தலம். பலயுகங்களாக இத்தலம் பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது. வேதங்கள் இதிகாசங்கள். சரித்திரம் இவை ஸ்ரீ சைலத்தின் பெருமையைப் பேசுகின்றன. அதனால் இத்தலம் வேத காலத்திற்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். ஸ்ரீசைலம் ஒரு முக்தித் தலம் என்கின்றனர்.


சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார். தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும் திருக்கேதாரம் ஆகும். இத்தலம் அர்ஜுனத் தலமாகும்.  மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால் இஃது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்த மல்லிகார்ஜுனர் கோயிலில் உள்ளது. 

கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது; இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.
இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை "பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள்.
இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே, சிகரங்களாவன - 1. வைடூரிய சிகரம், 2. பரவாளி சிகரம், 3. ரெளப்ய சிகரம், 4. மாணிக்கச் சிகரம், 5. மரகத சிகரம், 6. பிரம்ம சிகரம், 7. க்ஷேமா சிகரம், 8. வஜ்ர சிகரங்கள் ஆகும்; நந்திகளாவன - 1. பிரதம நந்தி, 2. நாக நந்தி, 3. விநாயக நந்தி, 4. கருட நந்தி, 5. சிவ நந்தி, 6. மகா நந்தி, 7. சூரிய நந்தி, 8. விஷ்ணு நந்தி, 9. சோம நந்தி என்பனவாகும். அவ்வாறே இங்கு 1. பிரமேஸ்வரம், 2. ஜனார்த்தனேஸ்வரம், 3. வருணேஸ்வரம், 4. ஹேமேஸ்வரம், 5. சப்தகோடீஸ்வரம், 6. மோக்ஷேஸ்வரம், 7. இந்திரேஸ்வரம், 8. அக்னேஸ்வரம், 9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.
இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன.
இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில், பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன தரிசிக்கத்தக்கன.
ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள் அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது, கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல செய்திகளை அறிய முடிகிறது.
இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.

தல வரலாறு : பர்வதன் என்பவன் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீ சைலம் என மருவி வழங்குகிறது. சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவி விட்டது.

ஏழாம் நூற்றாண்டில் நம் நாட்டிற்கு வந்த சீனத்தியர்கள் தமது குறிப்பில் ஸ்ரீசைலம் பற்றி எழுதியுள்ளார். சரித்திர காலத்தில் ஸ்ரீசைலம் மேன்மையுற்று பல மன்னர்கள் ஆதரவு பெற்றுள்ளது. இங்கு மூலிகைகள் உள்ளதால் இன்றும் பல சித்தர்கள் இங்கே உலவுவதாகக் கூறுகின்றனர். இயற்கை காட்சியும் இயற்கை காற்றும் கிருஷ்ணா நதி தீர்த்தமும் பக்தர்களுக்கு மனநிறைவையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது ஆகும். உடல் நலத்துடன் ஆன்மீக நலனும் உண்டாகும் சிறந்த தலம்.அப்பர்  சுந்தரர் சம்பந்தர் ஆகியோர் பாடல் பெற்ற தலம். அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதஸ்திரம் பெற்ற தலம் என்கின்றனர். 

நந்தி தேவர் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவருக்கு வாகனமாகப் பேறு பெற்ற தலம் ஸ்ரீசைலம். அவரே மலையாக இருந்து சிவபெருமானைத் தாங்குவதாக கூறுகின்றனர். இத்தலத்தில் வரலாறு சம்பந்தமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சிவாஜி மகாராஜாவால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. சுவர்களில் பல சிற்பங்களும் காணப்படுகின்றன. 

பஞ்ச பாண்டவர்கள் இங்கே வந்து தங்கி இறைவனை வழிபட்டதோடு அவர்கள் பெயரில் லிங்கங்களும் கோயில்களும் அமைத்துள்ளார்கள். இம்மலைச் சிகரத்தைத் தரிசித்தாலே போதும் மோட்சத்தை அடையலாம் என்கின்றனர். ஸ்ரீ சைலம் சக்தி பீடம் ஆகும். ஆதிசங்கரர் இங்கே சக்திபீடம் அமைத்தார். ஸ்ரீசைலத்தில் ஆயிரம் லிங்கங்கள் ஒரே லிங்கத்தில் உள்ளன. இது சஹஸ்ர லிங்கம் எனப்படும். புல்லாங்குழல் வாசிக்கும் கணபதி உள்ளார். ஆதிகாலத்தில் முரட்டு பக்தர்கள் தங்களைத் தாங்களே பலியிட்டுக் கொள்ளும் மூடப்பழக்கம் ஸ்ரீசைலத்தில் இருந்ததாம். அதனை இப்போது தடுத்துள்ளார்கள்.

இத்தலத்தில் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சரித்திர வரலாற்றிற்கான சான்றுகளைக் கல்வெட்டாகவும் தாமிரப் பட்டயங்களாகவும் பாதுகாத்து வருகின்றனர். இச்சான்றுகள் நமது வரலாற்றை அறிய உதவியாக இருக்கின்றன. இம்மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன. இத்தலத்தில் பல அரசர்கள் வழங்கப்பட்ட பெரும் செல்வத்தை அந்நியர் பலமுறை வந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதைத் தடுக்க சிவாஜி மகாராஜா ஒரு கோட்டை கட்டி கோயிலைப் பாதுகாக்க ஒரு படையையே அமைத்திருந்தாரம். இத்தலத்தில் விநாயகர் திருமணம் செய்யப்பட்டவராக சித்தி விநாயகராகக் காட்சி தருகின்றார். முருகன் திருமணம் ஆகாதவராகக் காணப்படுகிறார்.

சிவபெருமானும் பார்வதி தேவியும் தம் மக்கள் விநாயகருக்கும் சுப்பிரமணியருக்கும் திருமணம் செய்ய ஆலோசனை செய்தார்கள். சுட்டிப் பையன் முருகன் தனக்கே முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்றார். மூத்த மகன் விநாயகருக்கு முதலில் திருமணம் செய்ய வேண்டும். அதுவே உலக நியதி என விநாயகர் கூறினார். இருப்பது சித்தி என்ற ஒரே மணமகள். இருவரும் தாமே சித்தியைத் திருமணம் செய்ய வேண்டும் என்றார்.

சிவபெருமானும்  பார்வதியும் யாருக்கு மணம் முடிப்பது எனத் தீர்மானிக்க முடியாமல் திணறினர். ஈசன் இருவருக்கும் ஒரு போட்டி வைத்தனர். உலகை முதலில் எவர் சுற்றி வருகின்றனரோ அவருக்கே முதலில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது. ஆறுமுகன் உடனே தமது மயில் மீதேறி உலகைச் சுற்றி வரப் புறப்பட்டார். விநாயகர் நன்கு ஆலோசித்துத் தமது பெற்றோரை ஒரு பீடத்தில் அமரச் செய்து அவர்களை மும்முறை வலம் வந்து வழிபட்டார். ஈசன் விநாயகரின் செயலுக்கு விளக்கம் கேட்க்கவே தாய் தந்தையரே தமது உலகம் அவர்களே உலக முதல்வாகள். எனவே அவர்களை வலம் வந்தது உலகை வலம் வந்ததற்குச் சமம் என்றார். விநாயகரின் அறிவையும் வாதத்தையும் உணர்ந்து விநாயகருக்கே திருமணம் செய்து வைத்தனர்.ஒரு நொடியில் உலகைச் சுற்றி வந்த முருகன் கணபதிக்குத் திருமணம் நடந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டு ஸ்ரீசைலம் வந்து தங்கினார். நாரதர் மூலம் முருகன் ஸ்ரீசைலம் வந்து விட்டதை அறிந்த சிவதம்பதியர் தாங்களும் ஸ்ரீசைலம் வந்தனர். சிலகாலம் அங்கே தங்கி முருகனைச் சமாதானம் செய்து கைலை அழைத்துச் சென்றனர்.  ஸ்ரீசைலத்தில் சிவக்குடும்பம் தங்கியிருக்கும் காலத்தில் மற்ற தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானைத் தரிசனம் செய்ய வந்தனர். அதனால் இம்மலை சிறப்பு பெற்றது. விநாயகரும் பிரகாரத்தில் சித்தி என்ற தமது மனைவியுடன் காட்சி தருகிறார். முருகன் தனியே காட்சி தருகின்றார். இக்கதை நமது பழனிக்கதையிலிருந்து மாறுபட்டதாகத் தெரிகிறது.
 
பிரகாலாதன் வரலாறு : திரேதாயுகத்தில ஸ்ரீசைலத்தில் இரண்யகசிபு சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். அவன் முன்பு தோன்றிய இறைவனிடம் தேவர்களாலும் மனிதர்களாலும் எந்த மிருகத்தாலும் ஆயுதத்தாலும் இரவிலோ பகலிலோ தான் இறக்கக்கூடாது என வரம் கேட்டான். அவ்வாறே இறைவனும் வரம் கொடுத்தார். ஒருவனிடம் அதிகமான பணபலமோ உடல் பலமோ இருந்தால் அவன் ஆணவம் கொண்டு எளியோரைத் துன்பப் படுத்துவான். இது உலக இயல்பு. அதுபோலவே ஈசனிடம் பெற்ற வரத்தின் பலத்தால் மூவுலகையும் வென்று அடிமை ஆக்கினான் இரண்யகசிபு. இரண்யகசிபுவினால் தேவர்களும் முனிவர்களும் யாவரும் துன்பம் அடைந்தனர். திருமாலிடம் சென்று யாவரும் முறையிட்டனர். திருமால் நாதரை அழைத்துக் கர்ப்பமாக இருக்கும் இரண்யகசிபுவின் மனைவியின் முன்பு சென்று கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கு நாராயண மந்திரம் உபதேசம் செய்து வரும்படி கூறினார்.

நாரதர் சென்ற நேரம் இரண்ய கசிபு தலைநகரில் இல்லை. பகைவர் சிலர் இரண்ய கசிபு மனைவியைத் தாக்கினர் நாரதர் அவளைக் காப்பாற்றித்த தமது ஆசிரமத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். அவளுக்கு நாராயண மந்திரம் உபதேசித்தார். கருவிலிருந்த குழந்தை அப்போதே நாராயணா எனக்கூறத் தொடங்கிவிட்டது. 

போரிலிருந்து திரும்பிவந்த இரண்யகசிபு தமது மனைவியை நாரதரிடமிருந்து கூட்டிச் சென்றான். நல்ல நாளில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிரகலாதன் எனப் பெயரிட்டு வளர்ந்து வந்தான். பிரகலாதன் வளர்ந்து பள்ளிக்குச் சென்றான். எப்போதும் நாராயணா எனக் கூறிக் கொண்டே நாரயணன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தான். இதையறிந்த இரண்ய கசிபு பிரகலாதனைச் சித்திரவதை செய்து கொல்ல முயன்றான். பிரகலாதனை ஏதும் செய்ய இயலவில்லை.

நாராணன் எங்கே உளன் எனப் பிரகலாதனை இரண்யன் கேட்டான். நாராயணன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். எனப்பிரகலாதன் கூறவே இரண்யன் பக்கத்திலிருந்த தூணில் நாராயணன் உள்ளானோ எனக் கேட்டு அந்தத்தூணை எட்டி உதைத்தான். அப்போது அந்தத்தூண் இரண்டாகப் பிளக்க அதிலிருந்து மனித உடல் சிங்கத்தலையுடன் நரசிம்ம மூர்த்தியாக நாராயணன் தோன்றினார். இரண்யனைத் தூக்கிக் கொண்டு சென்று வாயிற்படியில் அமர்ந்து அவனைத் தமது மடியில் கிடத்தி தமது நகத்தால் அவனது வயிற்றை கீறி மாலை நேரத்தில கொண்று விட்டார். ஆவேசம் குறையாமலிருக்கவே லட்சுமி தேவி அவரது மடியில் அமர்ந்தார். ஆவேசம் தணிந்த நரசிம்மமூர்த்தி பிரகலாதனை அன்புடன் தழுவி எடுத்து அவனுக்குப் பலவரங்கள் தந்தார். அரசு பட்டமும் சூட்டி விட்டுத் தமது இருப்பிடம் சென்றார்.

இவ்வாறு ஸ்ரீசைலத்தில் திரேதா யுகத்தினின்றும் இன்று வரையிலும் பலர் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வரம் பெற்றுள்ளார்கள். இன்றும் தமது கண்களுக்குப் புலப்படாமல் பல யோகிகளும் சித்தர்களும் தேவர்களும் ஸ்ரீசைலத்தில் தவம் செய்வதாகவே கூறுகின்றனர். எனவே ஸ்ரீசைலம் செல்லும் பக்தர்கள் அம்மலையிலிருக்கும் வரையில் எந்தவிதத் தவறும் செய்யக்கூடாது அம்மலையை அசுத்தம் செய்யக் கூடாது என்றும் கூறுகின்றனர்.

யாத்திரைக்கு ஏற்ற காலம் : அதிகமான மழைக்காலம் அதிக வெப்பமான காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் ஸ்ரீசைலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளலாம். ஸ்ரீசைலம் மலைமீது இருப்பதால் அத்தலம் போகும் பாதை மலை காட்டுப் பகுதிக்குள் செல்லுகிறது. இங்கு புலி கரடி யானை போன்ற மிருகங்கள் வாழ்வதால் யாத்திரை மேற்கொள்வோர் தக்கவாறு செல்ல வேண்டும். கால் நடையாகவோ தனியாகவோ செல்வது கூடாது. பேருந்துகள் வாடகைக் கார் மூலம் கூட்டமாக பலர் சேர்ந்து போதல் நலம். வழியில் எதாவது துஷ்ட மிருகங்களைக் கண்டால் அமைதியாக நின்று அவை போன பிறகு நாம் போக வேண்டும். அவைகளைத் தொந்தரவு செய்ய கூடாது.

காலை 5.00 மணி முதல் மதியம் 3.00 வரையிலும்  மாலை 5.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும். காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு.

அருகிலுள்ள விமான நிலையம் : ஹைதராபாத் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பும்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு
 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×