271. திருஇந்திரநீலப்பருப்பதம்





	


	



























	




 




	








 




4:09:43 AM         Friday, May 01, 2026

271. திருஇந்திரநீலப்பருப்பதம்

271. திருஇந்திரநீலப்பருப்பதம்
271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம் 271. திருஇந்திரநீலப்பருப்பதம்
Product Code: 271. திருஇந்திரநீலப்பருப்பதம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                           திருஇந்திரநீலப்பருப்பதம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவின், உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகரான டேராடூனிலிருந்து ரிஷிகேஷ் வழியாக பத்ரிநாத் சென்று இமயமலைச் சாரலில் இந்திரநீலப்பருப்பதத்தை தரிசிக்கலாம். சென்னையிலிருந்து இரயில் மூலமாக 2150 கி.மீ. பயணம் செய்து டெல்லி அடைந்து டெல்லியிலிருந்து பேருந்து மூலம் 555 கி.மீ., சென்றால் வைணவத்தலமான பத்ரிநாத் அடையலாம். இங்கிருந்து பார்த்தால் இந்திரநீலபருப்பதம் தெரியும். 

சுவாமி : நீலாசலநாதர்

அம்பிகை : நீலாம்பிகை

தீர்த்தம் : இந்திரதீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் 

சிறப்புகள்: பத்ரிநாத் அடிவாரத்தில் இரவு தங்கி விடியற்காலை 4 மணி அளவில் எழுந்து பார்த்தால் இந்திரநீல பருப்பதத்தை தரிசிக்கலாம். அந்நேரத்தில் இம்மலை இந்திரநீல நிறத்தில் தரிசனம் தருகிறது. இந்திரன் வழிபட்ட திருவூர். அர்ச்சுணன் தவம்புரிந்து பாசுபதப்படை பெற்ற திருவூர். மூகாசுரனை வென்ற திருவூர். பனி பிரதேசமாகையால் பத்ரிநாத் ஆலயம் 6 மாத காலம் மூடியிருக்கும். மேலும் மழை இல்லாத காலமாகிய மே முதல் செப்டம்பர் வரை சேவிக்க செல்வது நல்லது. கடுங்குளிர் காரணமாக கம்பளி உடைகளை எடுத்து செல்வது அவசியம். இங்கு தங்கும் வசதிகளும் மற்றும் பல வசதிகளும் உண்டு. இங்கு குளிர்காலத்தில் கோயிலை பனி மூடுவதால் ஜோஷிமட்டில் உள்ள நரசிம்மர் கோவிலில் பத்ரிநாராயணனை வைத்து வழிபடுகின்றனர். பத்ரிநாத் கோயில் அருகில் நீல நிறத்தில் ஒரு மலை தெரியும். அதைக் கௌரிகுண்ட் என்கிறார்கள். ஒரு சில நிமிடங்களில் நீல நிறம் பொன்னிறமாக மாறும். அதற்குப் பிறகு தூய வெண்ணிறமாக அந்த மலை காட்சியளிக்கும். 

வடநாட்டு தலங்கள் ஐந்துள், இது இரண்டாவது தலம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 18000 அடி உயரமுள்ளது. ஈசன் சன்னதிக்குச் சிறிது வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை. ஸ்வாமியின் அர்த்தனரீஸ்வர வடிவில் ஒரு பாறையே இந்திரன். இந்திரன் பூசித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. மேகங்கள் மேலே கவிழ்ந்து சூழந்திருப்பதால் நீலபர்ப்பதம் எனப் பெயர் பெற்றது என்பர். இது வடநாட்டுத் திருப்பதிகள் ஐந்தனுள் ஒன்று என்பர். இநதிரன் பூசித்த பதி என்ற செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தின் திருக்கடைக்காப்பிலுள்ள இந்திரன் தொழு நீல பர்ப்பதம் என்னும் பகுதியால் அறியக்கிடக்கின்றது. இதற்கு திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்றுள்ளது.

அருகிலுள்ள விமானதளம் : டேராடூன்

அருகிலுள்ள ரயில் நிலையம்   : ரிஷிகேஷ்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×