064.திருவாட்போக்கி





	


	



























	




 




	








 




11:24:36 PM         Thursday, June 25, 2026

064.திருவாட்போக்கி

064.திருவாட்போக்கி
064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி 064.திருவாட்போக்கி
Product Code: 064.திருவாட்போக்கி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                          வாட்போக்கி நாதர் கோவில், திருவாட்போக்கி

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தில் குழித்தலை ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 8 கி.மீ தொலைவில்  இரத்தினகிரி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் இரத்தினகிரி, சிவாய மலை என அழைக்கப்படுகிறது.

சுவாமி : இரத்தினகிரீசர்,  அரதனாசலேசுவரர், மாணிக்கஈசர்,  முடித்தழும்பர்,  வாட்போக்கி நாதர்

அம்பிகை : சுரம்பார் குழலி

தீர்த்தம் : கெளரி தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1

திருத்தலச் சிறப்புகள் : இத்தலம் 1140 படிகளுடைய மலையின் மீது அமைந்திருப்பது தனிச் சிறப்பு. வாயு பகவானால் மேருமலையிலிருந்து பெயர்த்தெடுத்த முடிகளுள் ஒன்று இந்த மலை எனப்படுகிறது. திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.

இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி கிழக்கு நோக்கியும் அருட்காட்சி தருகின்றனர். மூலவர் அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி - சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஈசனுக்கு மலைக்கொழுந்தீசர், மத்தியானச் சொக்கர் என்ற திருப்பெயர்களும் உண்டு. ஆலயம் ஓரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.

மலைக் கோவிலும், அதன் பிரகாரங்களும் பிரணவ வடிவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு சிவாயமலை என்ற பெயரும் உண்டு. தலவிருட்சம் வேப்பமரம். இந்திரனால் உண்டாக்கப்பட்ட சிறப்புடையது. இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் இத்தலத்து இறைவனை பூசித்துப் பேறு பெற்றுள்ளனர்.

இரத்தினம் வேண்டி, வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன், அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளால் ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அடுத்த கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து இரத்தினம் கொடுத்தருளினார் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மன்னனுக்கு இரத்தினம் கொடுத்து உதவியதால், இறைவன் 'இரத்தினகிரிநாதர்' என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் 'வாட்போக்கிநாதர்' என்றும் வழங்கப்படுகிறார்.

இத்திருத்தலத்தில் சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்தில் இந்திரன், சூரியன், உரோமேசர், ஆதிசேடன், வீரசேனன், துர்க்கை, அகத்தியர், சப்தகன்னியர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இத்தலத்தின் அடிவாரத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. நால்வர் சந்நிதிகளும் உள்ளன. 750 படிகளை ஏறிச் சென்றால் விநாயகரையும், அம்பாளையும் தரிசிக்கலாம். மேலும் படிகளை ஏறிச் சென்று சுவாமியைத் தரிசிக்க வேண்டும். இங்கு தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாமியம்மை, முருகர், வைரப் பெருமாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. இத்திருத்தலத்தில் நண்பகல் தரிசனம் இங்குத் தனிச் சிறப்புடையது. 'காகம் அணுகா மலை' என்பது இதற்குரிய தனித் தன்மையாகும்.

இரத்தினம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் அந்தணர் வடிவில் வந்து நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பி அதில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று சொன்னார். வேந்தன் எவ்வளவு முயன்றும் நீர்த்தொட்டியை காவிரி நீரால் நிரப்ப முடியவில்லை. கோபமுற்ற அரசன் அந்தணர் மீது கோபம் கொண்டு தன் வாளை ஓங்கி அந்தணரை வெட்ட முயன்றான். அந்தக் கணமே இறைவன் அவ்வாளைப் போக்கி மன்னன் முன் காட்சி கொடுத்து இரத்தினம் தந்த காரணத்தால் இத்தலம் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றதென்பர். மன்னனுக்கு இரத்தினம் கோடுத்து உதவியதால் இறைவன் இரத்தினகிரிநாதர் என்றும், மன்னன் வாளைப் போக்கியதால் வாட்போக்கி நாதர் என்றும் வழங்கப்படுகிறார். இன்றும் சிவலிங்கத்தின் மேற்புறத்தில் வெட்டுப்பட்ட வடுவைக் காணலாம்.

இத்தலத்தின் தலவிருட்சமான வேப்பமரம் இந்திரனால் உருவாக்கப்பட்டது என்பர். அகத்தியர், இந்திரன் முதலியோர் பூசித்து வழிபட்டமையால் இங்கு அகத்தியர் உச்சி கால வழிபாடு சிறப்பு என்பர்.

தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : குழித்தலை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×