066. திருப்பராய்த்துறை





	


	



























	




 




	








 




5:23:18 PM         Thursday, June 25, 2026

066. திருப்பராய்த்துறை

066. திருப்பராய்த்துறை
066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை 066. திருப்பராய்த்துறை
Product Code: 066. திருப்பராய்த்துறை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                     பராய்த்துறைநாதர் கோவில், திருப்பராய்த்துறை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து வடமேற்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து - கரூர் செல்லும் பேருந்து சாலையில் கோயில் வாயிலில் பேருந்து நிறுத்தம் உள்ளது. எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமி : தாருகாவனேசுவரர்,  பராய்த்துறை நாதர்

அம்பிகை : பசும்பொன் மயிலாம்பாள், ஹேமவர்ணாம்பாள்

தலமரம் : பராய்மரம்

தீர்த்தம் : காவிரி

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,   திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இறைவன் பிட்சாடணராகச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றிய தலம். இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர் வழிபட்ட தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இத்தலம் தொன்மையான ஒரு கோவிலாகும். இத்தலத்தில் காவிரி அகலமாக ஓடுவதால் 'அகண்ட காவிரி' என்று அழைக்கப்படுகிறது.

காவிரியும் அதன் உபநதிகளும் சேர்ந்து மிகப் பெரியதாய் விரிந்துள்ள இடம் திருப்பராய்த்துறை. இப்புண்ணிய சேத்திரத்தில் இந்நதி அகன்ற காவிரி என்று பெயர் பெறுகிறது. இங்கிருந்து 1 கி.மீ தொலைவில் கிழக்கில் காவிரி கொள்ளிடம் என இரு நதிகளாக பிளவுபடுகிறது. மேலும் பல கால்வாய்களாகத் துண்டிக்கப்படுகிறது. எனவே காவிரிக்கு இயற்கையாய் ஏற்பட்டுள்ள பரிபூரணமான மகிமை திருப்பராய்த்துறையில் அமைந்திருக்கிறது. திருப்பராய்துறையில் அகன்ற காவிரி ஸ்நானமே சாலச்சிறந்தது.  இத்தலத்தின் தலவிருட்சம் பராய்துறை. தோல் நோய் உடையவர்கள் பராய் மரத்தின் பட்டையை மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் நோய் நீங்கப்பெறுவர். 
 
கோயில் அமைப்பு : செல்வர் எனவும் தாருகாவனேசுவரர் எனவும், பராய்த்துறை நாதர் எனவும் அழைக்கப்பெறும் பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலின் உள்கோபுரம் ஏழுநிலைகளை கொண்டுள்ளது. கோயிலின் வலப்புறம் தீர்த்தக்குளம் ஒன்றுள்ளது இடப்பக்கம் உள்ள மண்டபத்தில் விவேகானந்தர் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. செப்புக் கவசமிட்ட கொடிமரமும், பலிபீடமும், நந்தியும் ஒரே மண்டபத்தில் உள்ளன. நந்தி மண்டபம் என இது கூறப்படுகிறது. மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியும் உள்ளன. உள்பிரகாரத்தில் வலம்புரி, விநாயகர், சப்த கன்னியர், அறுபத்து மூன்று நாயன்மார், சோமஸ்கந்தர், பஞ்சபூத லிங்கங்கள், பிட்சாடணர், பிரம்மா, துர்க்கை, பன்னிரு கைகள் பெற்று விளங்கும் சண்முகர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரகங்களுள் சனீஸ்வரருக்கு மட்டும் வாகனமாகக் காக்கை உள்ளது. தட்சிணாமூர்த்தி சந்நிதி தனி விமானமாகச் சிங்கங்கள் தாங்கி நிற்கின்றன. சிறந்த வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்டுள்ளது. மூலவர் அழகிய திருமேனி தாங்கியவர்.

வைகாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். முதல் நாள் துவஜாரோஹணமும், ஐந்தாம் நாள் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளிரிஷப வாகனங்களில் திருவீதி உலா, ஆறாம்நாள் திருக்கல்யாண உற்சவம், ஒன்பதாம் நாள் திருத்தேர் திருவீதி உலா, பத்தாம்நாள் விசாகதீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும். ஐப்பசி முதல்நாள் துலாநீராடலும் அன்று சுவாமி காவிரியில் தீர்த்தம் அளிப்பதும் விசேஷமானவை ஆகும். 

இத்திருத்தலம் தாருகாவனம் எனவும் பெயர் பெறுகின்றன. சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு விநாயகர், முருகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமாதஸ்கந்தர், பஞ்ச பூதலிங்கங்கள், பிட்சாடணர், பிரம்மன், துர்க்கை, கஜலட்சுமி, மயில் வாகனத்தில் சண்முகர், நவக்கிரகங்கள், பைரவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், அர்த்தநாரீசுவரர், சண்டேசுவரர், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

தலபுராணம் : இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர் தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர். அவர்களின் மமதையை அடக்க இறைவன் சிவபெருமான் பிச்சாடணர் வேடம் கொண்டு தாருகாவனத்திற்கு வந்து முனிபத்தினிகளை மயக்கினார். முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகத்தை நடத்தினர் யாக குண்டத்தில் தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றை கொன்று தோலை ஆடையாக அணிந்தார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ, சிவபெருமான் அவற்றை தனது அணிகலன்களாக்கி கொண்டார். ஞானம் பெற்று வந்திருப்பது ஈசனே என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் மனம் வருந்தி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார்.

இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும். இறைவன் தாருகாவனேஸ்வரர் எனறும், பராய்த்துறை நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி நாமம் பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்பதாகும். கோயிலின் கிழக்கில் சுவாமி சித்பவானந்தரின் இராமகிருஷ்ண தபோவனம் உள்ளது. இவ்வூரின் மேற்கில் இராமகிருஷ்ண குடில் உள்ளது.

ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது. நேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.

அடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், 63 மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார்.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் - பரந்த கல்லால மர வேலைப்பாடுடன் உள்ளன. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.

தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : எலமனூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×