074. திருப்பூந்துருத்தி





	


	



























	




 




	








 




11:40:49 AM         Wednesday, April 15, 2026

074. திருப்பூந்துருத்தி

074. திருப்பூந்துருத்தி
074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி 074. திருப்பூந்துருத்தி
Product Code: 074. திருப்பூந்துருத்தி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                  புஷ்பவன நாதர் கோவில், திருப்பூந்துருத்தி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநரான தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்கண்டியூருக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. குடமுருட்டியாற்றின் தென்கரையில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்து செல்லலாம். கோயில் உள்ள பகுதி மேலத் திருப்பூந்துருத்தியாகும்.

சுவாமி : புஷ்பவனேசுவரர்,  ஆதிபுராணர் பொய்யிலிநாதர்

அம்பிகை : சௌந்தர நாயகியம்மை

தலமரம் : வில்வம்

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 3

திருத்தலச் சிறப்புகள்: ஆற்றிடைக்குறையிலுள்ள ஊர்கள் 'துருத்தி' என்று பெயர். இத்தலம் காவிரிக்கும், குடமுருட்டி நதிக்கும் இடையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. சப்தஸ்தான தலங்களில் இதுவும் ஒன்று. இத்திருத்தலம் 9ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள திருவிசைப்பா பாடல்களின் ஆசிரியராகிய பூந்துருத்தி காடவ நம்பியின் அவதாரத் தலம் என்னும் சிறப்புப் பெற்றுள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் ஏறிவந்த சிவிகையை அப்பர் சுவாமிகள் தம் தோளிற் சுமந்த தலம். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.  அப்பர் அமைத்த "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கிருந்து தான் அப்பர்பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும், பல பதிகங்களையும் பாடியருளினார். கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகையிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகிடனை அழித்த  பாவம் நீங்கும் பொருட்டு ஒற்றைகாலில் நின்று தவம் செய்யும் துர்க்கையின் திருவுருவமும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானின் திருவுருவமும் தரிசிக்க சிறப்புடையன ஆகும்.

கோவில் அமைப்பு: இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம், உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது. அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்று எண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சி தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனி மிகவும் சிறப்பானது. மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், அருகில் பரவை நாச்சியார் -ந சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியுருடன் சுந்தரர் இருக்கும் உருவங்கள் உள்ளன.

பிரகாரத்தில் விநாயகர், முருகர், சோமாஸ்கந்தர், நடராஜர் சபை, சப்த மாதர்கள், நால்வர், தென்கயிலை, வடகயிலை, வீணாதர தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அப்பர் சுவாமிகள், பூந்துருத்தி காடவநம்பி முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது. அப்பர் பலகாலம் திருமடம் அமைத்து இத்தலத்தில் தங்கி திருப்பணி செய்து வந்தார். இங்கு இருந்துதான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை, அடைவு திருத்தாண்டகம், பலவகை திருத்தாண்டகம், தனி திருத்தாண்டகம் உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல குறுந்தொகை பதிகங்களையும் பாடியருளினார். பாண்டி நாட்டு யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய ஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் அப்பர் தங்கியிருப்பது பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தார். சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்ப்ர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல், கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருப்பூந்துருத்தி நெருங்கியதும் அப்பர் எங்கு உள்ளார் என்று சம்பந்தர் வினவ "உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று இங்குள்ளேன்" என்று அப்பர் பதிலளித்தார். சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். சம்பந்தரும் அப்பர் அமைத்த திருமடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார்.

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×