087. திருபழையாறை வடதளி





	


	



























	




 




	








 




2:08:24 AM         Friday, June 26, 2026

087. திருபழையாறை வடதளி

087. திருபழையாறை வடதளி
087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி 087. திருபழையாறை வடதளி
Product Code: 087. திருபழையாறை வடதளி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                          சோமேஸ்வரர் கோவில், பழையாறை வடதளி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - ஆவூர் சாலையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம். கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது பழையாறை வடதளி என இரு திருவூர்களாக இருக்கின்றன.

வடதளி :

சுவாமி : தருமபுரீசுவரர்

அம்பிகை : விமல நாயகி

தலமரம் : நெல்லி

தீர்த்தம் : சோமதீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் ஒரு மாடக்கோயில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய தலம். மங்கையர்க்கரசியார், அமர்நீதிநாயனார் ஆகியோர் அவதாரத்தலம். இத்தலத்தின் இறைவன் தருமபுரீசுவரர், இறைவி விமலநாயகி. திருக்கோயிலில் இவ்விரண்டு கற்சிலைகளே உள்ளன. திருக்கோயில் மேட்டின் மேல் உள்ளது. இதன் அருகில் துறையூர் சிவப்பிரகாச அடிகளின் சமாதி உள்ளது.

இவ்வூரின் தெற்கில் முடிகொண்டான் ஆறும், வடக்கில் திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் 'பழையறை' என்றும் அதன் வடபகுதியில் உள்ள ஊர் 'பழையறை வடதளி' எனவும் பெயர் பெற்றது

வடதளி : சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கி உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை. வடதளியிலுள்ள தர்மபுரீஸ்வரர் ஆலயமே அப்பர் பெருமானால் பதிகம் பாடப்பெற்ற சிவஸ்தலம்.


பழையாறை :

சுவாமி : சோமேசர்

அம்பிகை : சோமகமலாம்பிகை

திருத்தலச் சிறப்புகள்: கருடன் பூசித்துப் பேறு பெற்ற தலம். சந்திரன் வழிபட்டுப் பிணி நீங்கிய தலம். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.

பழையாறை : வடதளியில் இருந்து திருமலைராயன் ஆற்றை கடந்து சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம். சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும் சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலும் வடதளி கோவிலைப் போன்றே மிகவும் சிதிலமான நிலையில் அமைந்துள்ளது. கோவில் உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்த்தில் அம்பாள் சோமகமலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள படிகட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள வீரதுர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த வீரதுர்க்கையை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் சகல செயகரியங்களும், செயபாக்கியமும் கிடைக்கும் எனபது ஐதீகம். இந்த வீரதுர்க்கை சந்நிதிக்கு அருகில் கடன் தீர்க்கும் கைலாசநாதர் லிங்கம் உள்ளது. இந்த கைலாசநாதரை 11 மாதம் அல்லது 11 வாரம் அல்லது 11 திங்கள், சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை, மனச்சுமை தீரும் என்பது ஐதீகம். மூலவர் கருவறைச் சுற்றில் நால்வர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடனுள்ள முருகர் சந்நிதி மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கோவிலுக்கு வெளியே சோம தீர்த்தம் உள்ளது.

தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×