090. குடந்தைக் கீழக்கோட்டம்





	


	



























	




 




	








 




9:56:25 PM         Thursday, June 25, 2026

090. குடந்தைக் கீழக்கோட்டம்

090. குடந்தைக் கீழக்கோட்டம்
090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம் 090. குடந்தைக் கீழக்கோட்டம்
Product Code: 090. குடந்தைக் கீழக்கோட்டம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                        நாகேஸ்வரர் கோவில், திருகுடந்தை கீழ்கோட்டம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தின் கீழ்த்திசையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இத்தலம் நாகேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

சுவாமி : நாகேசுவரர்,  நாகநாதர்

அம்பிகை : பெரிய நாயகி, பிருகந் நாயகி

தலமரம் : வில்வம்

தீர்த்தம் : நாகதீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் உள்ள அமுத கலசத்தின் வில்வம் சிவலிங்கமான தலம். திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.

கோயில் அமைப்பு : இவ்வாலயம் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கோபுரங்களைக் கொண்டு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாக கொண்டுள்ளது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சப்தமாதாக்கள் சந்நிதி, சிங்கமுக தீர்த்தக்கிணறு  உள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. 3 வது சுற்றில் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் சூரியனும், ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இங்குள்ள நடராஜர் திருமேனி காணவேண்டிய ஒன்று. அடுத்துள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் இடதுபுறம் பதினாறுகால் மண்டபமும் வலதுபுறம் நடராசசபையும் உள்ளன. இந்த நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத் தக்கவையாகும். குதிரைகளும், யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது. அடுத்துள்ள வாழில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. உயரமான ஆவுடையார் மீது மிகவும் குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். கருவறைச் சுற்றில் கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலை மீது கை ஊன்றி நிற்கும் நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். 

இத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெறும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும். இக்கோயிலின் சிறப்பம்சமே இந்த பிரளயகால ருத்திரர் சன்னதிதான். சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன. இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.
இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.

இங்குள்ள நடராஜர் மண்டபம் ஒரு ரத அமைப்பில் உள்ளது. இதன் இரு கல் சக்கரங்களும் மிகுந்த கலைநயத்துடன் காணப்படுகிறது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற, இரண்டு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும், நடனத்திற்கு சிவகாமியம்மை தாளம் போடும் பாவனையும் காண்பதற்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

இத்திருத்தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இங்கு இறைவன் அழகான திருமேனி, உயரமான ஆவுடையார், மிகவும் குட்டையான பானம். மேலும் பிரகாரத்தில் விநாயகர், முருகர், சரபமூர்த்தி, நால்வர், படைவெட்டி மாரியம்மன், பிரளய கால ருத்திரர், ஐயனார், சப்தமாதர்கள், சப்தலிங்கங்கள், விஷ்ணு, துர்க்கை, வைத்தீசுவரர், சூரியன், சண்டேசுவரர், தடசிணாமூர்த்தி, அர்த்தநாரிஸ்வரர், பிரம்மன், ஆடிப்பூர அம்மன் முதலிய சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள கங்கைக்கணபதி மிகவும் அழகு வாய்ந்தது. கூத்தாடும் தேவர் கோயில் மிகவும் வேலைப்பாடுடன் அமைந்து காணப்படுகிறது.'பாடகச்சேரி ஸ்ரீராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான் புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை சீர்திருத்தி திருப்பணிகள் செய்வித்து 1923-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார்.

தினந்தோறும் காலை 6.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×