091. திருக்குடந்தைக் காரோணம்





	


	



























	




 




	








 




9:54:05 PM         Thursday, June 25, 2026

091. திருக்குடந்தைக் காரோணம்

091. திருக்குடந்தைக் காரோணம்
091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம் 091. திருக்குடந்தைக் காரோணம்
Product Code: 091. திருக்குடந்தைக் காரோணம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                   காசி விஸ்வநாதர் கோவில், திருக்குடந்தைக் காரோணம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ளது. மாமகக்குளத்தின் வடகரையில் இருக்கின்றது.

சுவாமி : சோமேசர்,  சோமநாதர், சிக்கேசர்

அம்பிகை : சோமசுந்தரி,  தேனார்மொழியாள்

தீர்த்தம் : மகாமகத்தீர்த்தம்,  சோமதீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: மகா சங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம் 'காரோணம்' எனப்படும். இத்தலம் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலம். சிக்கேசம் என்பது பெயர்.

இத்திருத்தலம் குரு, சந்திரன் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர்.  கிரகங்கள் ஒன்பதும், கன்னியர் ஒன்பதின்மரும் வழிபட்ட திருவூர். இவர்தம் திருவுருவங்கள் திருக்கோயிலினுள் இருக்கின்றன. உமையம்மை, மாந்தாதா முதலியோரும் வழிபட்ட திருவூர். 'வேற்காட்டு நற்சூதர் மூர்க்க நாயனார்' இங்கு வாழந்து அடியார்க்கு அமுது ஊட்டி பேறுபெற்றார் என்பர்.

நவகன்னியர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமை இத்தலத்திற்குள்ளது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னியர்களுக்கு நெடுங்காலமாக ஒரு குறை. மக்கள் நீராடி தங்கள் பாவங்களை தங்கள் மீது கழுவிச் செல்கிறார்கள். அப்படிச் சேர்ந்த பாவங்களை நாங்கள் சுமக்க வேண்டுமா என்று ஈசனிடம் அவர்கள் முறையிட்டனர். ஈசன் நவகன்னியர்களையும் அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என்றருளினார். ஈசனும் மகாமகக் குளத்தின் வடகரையில் எழுந்தருளினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்ற பெயர்களுடன் இறைவன், இறைவி எழுந்தருளியிருக்கும் இக்கோவிலே குடந்தைக் காரோணம் என்று பலரால் கூறப்படுகிறது.

ஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன்னாலுள்ள நுழைவாயில் முகப்பின் மேலே நவகன்னியர்களை மகாமக தீர்த்தத்தில் நீராட ஈசன் அழைத்துச் செல்லும் சுதைச் சிற்பங்களைக் காணலாம். 5 நிலை கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமர விநாயகரையும், கொடிமரத்தியும் காணலாம். அடுத்துள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியெம் பெருமானும் உள்ளனர். அடுத்த பிரகாரத்தில் நவகன்னியரும் சிலை வடிவில் இவ்வாலயத்தில் காட்சி அளிக்கின்றனர். சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. இராமர் இலங்கைக்குச் செல்லுமுன இத்தலத்திற்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். இராமர் வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இவ்வாலயத்தின் வடகிழக்கு மூலையில் நாம் காணலாம். உயர்ந்த பாணத்துடன் இவர் காட்சி அளிக்கிறார். இந்த மகாலிங்கம் வளர்ந்து வருவதாக ஐதீகம். ஆலயத்தில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உண்டு. கோஷ்டத்தில் தனி சந்நிதியில் அருள்தரும் தட்சிணாமூர்த்தி உள்ளார். மேலும் இத்திருத்தலத்தில் விநாயகர், முருகர், வள்ளி, தெய்வயானை, கஜலட்சுமி, நால்வர், சேக்கிழார், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார். சிவபெருமான் குடத்தின் மீது அம்பைச் செலுத்திய போது அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இவ்வாலயத்திலுள்ள இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோயிலுக்கு மூன்று வாயில்களும் ஒரு பிரகாரமும் உள்ளது. கிழக்கிலுள்ள இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். மகாவிஷ்ணு வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்துள்ள கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.

இராமன் இராவணனை கொல்ல ருத்திராம்சம் வேண்டி வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் காய +ஆரோணம் = காரோணம் என்று பெயர் பெற்றது எனவும் கூறுவர். திருஞானசம்பந்தர் பாடலில் "தேனார் மொழியாழ் திளைத்தங்காடித் திகழும் குடமூக்கில் காணார் நாட்டமுடையார் செல்வக்காரோணத்தாரே" என்று குறிப்பிட்டுள்ளமையால் அம்பிகை பெயர் வழங்கும் தலம் (சக-உமேசம்) சோமேசம். ஆதலின் இதுவே பாடல் பெற்ற தலமாக கருதப்படுகிறது.

தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : கும்பகோணம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×