098. திருக்கோழம்பம்





	


	



























	




 




	








 




4:00:57 AM         Wednesday, April 15, 2026

098. திருக்கோழம்பம்

098. திருக்கோழம்பம்
098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம் 098. திருக்கோழம்பம்
Product Code: 098. திருக்கோழம்பம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        கோகிலேஸ்வரர் கோவில், திருக்கோழம்பம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவாவடுதுறையிலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்திருவூர் திருக்குழம்பியம் என வழங்கப்படுகிறது. நரசிங்கன் பேட்டை ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமி : கோழம்பநாதர், கோகிலேசுவரர்

அம்பிகை : சௌந்தரநாயகி

தலவிருட்சம்: பேரரசு

தீர்த்தம் : மது தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,   திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் சந்தன் என்னும் வித்தியாதரன் வழிபட்டுப் பேறு பெற்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.

இத்தலத்தில் அம்பிகை வழிபட்டார் என்பது சிறப்பு வாய்ந்தது. திருமூலநாயனார் தலவிருட்சமான அரசமரத்தடியில் யோகத்திலிருந்து ஆண்டுக்கொரு திருமந்திரமாக 'மூவாயிரம் திருமந்திரங்கள் கொண்ட தனித்தமிழ் ஆகமமுறையினை' அருளிச்செய்தனர். மேற்கு சுற்றில் இவர் தம் சிலை உள்ளது. திருவிசைப்பாத் திருமாளிகைதேவர் வாழ்ந்த திருப்பதியும் இதுவே. சம்பந்தப்பெருமானார் திருவருளால் பீடத்தின் உச்சியில் 'உலவாக்கிழி' பெற்று சிவவேள்வி புரியத் தந்தையார்க்கு அளித்தார். அதுபோல் பீடத்தின் அடியில் தனித்தமிழ் ஆகமமாகிய திருமூலர் திருமந்திரம் அதனை உலகுக்களித்தார்.

கோவில் அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் உள்ளது. முகப்பு வாயிலுக்கு எதிரே பிரம்ம தீர்த்தம் உள்ளது. முகுப்பு வாயிலில் மேலே அமர்ந்த நிலையில் சிவன் பார்வதியும், அவர்களின் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகரும் சுதை வடிவில் காணப்படுகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட பாதை அடுத்துள்ள 3 நிலை கோபுரத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கோபுரத்திற்கு முன்னால் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோபுரம் கடந்து உட்சென்றால் மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் ஆகியோர் சந்நிதிகள் காணலாம். கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக காணப்பதும் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, விநாயகர் ஆகியோருடன் நடராசரும், சட்டை நாதரும் பிட்சாடனரும் காட்சியளிக்கின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையார் மேல் பதிந்துள்ளதைக் காணலாம்.

தல வரலாறு: சிவனும் மகாவிஷ்ணுவும பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். அவைகளில் இத்தலமும் ஒன்றாகும்.

மகாவிஷணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஒரு சமயம் தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஜோதி ரூபமாகத் தெரிந்த சிவபெருமானின் அடிமுடியை யார் முதலில் கண்டு வருவது என்ற போட்டியில் பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று, முடியாமல் போக தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொன்னார். இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். அதுவே பிரம்ம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வெளியே உள்ளது.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை மட்டும் திறந்திருக்கும். ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : நரசிங்கன்பேட்டை

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×