100. திருத்துருத்தி





	


	



























	




 




	








 




11:25:47 PM         Thursday, June 25, 2026

100. திருத்துருத்தி

100. திருத்துருத்தி
100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி 100. திருத்துருத்தி
Product Code: 100. திருத்துருத்தி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                              உக்தவேதீஸ்வரர் கோவில், திருத்துருத்தி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில்  மயிலாடுதுறையிலிருந்து தென்மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள இத்திருவூர் தற்போது குத்தாலம் என்று வழங்கப்படுகிறது.

சுவாமி : உத்தவேதீசுவரர்

அம்பிகை : அமிர்த முகிழாம்பிகை,   பரிமளசுகந்த நாயகி, அரும்பன்னவன முலையாள்

தலமரம் : உத்தால மரம் (அத்திவகை)

தீர்த்தம் : சுந்தர தீர்த்தம், பத்ம தீர்த்தம், காவிரி மற்றும்    பல தீர்த்தங்கள்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,   திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: ஒருவகை அத்திமரம் 'உத்தாலமரம்' தல மரமாதலின் 'உத்தாலவனம்' ஆயிற்று. இது மருவி 'குத்தாலம்' என வழங்கப்படுகிறது. அம்பிகை வழிபட்டு ஈசனைத் திருமணம் செய்து கொண்ட பதி. சுந்தரர் இங்குள்ள பொய்கையில் நீராடி உடற்பிணியைப் போக்கிய தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். துருத்தி என்றால் ஆற்றின் இடையே உள்ள 'தீவு' என்று பொருள். எனவே அக்காலத்தில் இத்தலம் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியின் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார்.  

இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற ஒரு வகை ஆத்தி மரம்.அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும்.

கோவில் அமைப்பு : 5 நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு பிரகாரங்கள் கொண்டது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் உள்ளன. வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. பக்கத்திலேயே தெற்குப் பார்த்த இறைவியின் சந்நிதி உள்ளது. இவ்விரு கோவில்களும் தனித்தனியே வலம் வருமாறு தனிப் பிரகாரங்களோடு அமைந்துள்ளன. அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் "துணைவந்த விநாயகர்" என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருக்கிறார். உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசிக்கலாம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகரை பார்த்துப் பரவசம் அடையலாம். அத்தனை கலையழகுடன் இவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் வணகிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன. இவற்றை நிதானமாக பார்த்து ரசிக்க வேண்டும். அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.

தினந்தோறும் காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : குத்தாலம்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×