105. திருச்செம்பொன் பள்ளி





	


	



























	




 




	








 




10:41:12 AM         Wednesday, April 15, 2026

105. திருச்செம்பொன் பள்ளி

105. திருச்செம்பொன் பள்ளி
105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி 105. திருச்செம்பொன் பள்ளி
Product Code: 105. திருச்செம்பொன் பள்ளி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             சுவர்ணபுரீசர் கோவில், திருசெம்பொன்பள்ளி

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் பொறையாறு செல்லும் பேருந்து பாதையில் உள்ளது. இத்திருவூர் செம்பொனார் கோயில் என்று வழங்கப்படுகிறது.

சுவாமி : சுவர்ணபுரீசுவரர்,  தேவப்பிரியர், சுவர்ண லட்சுமீசர்,  செம்பொன்பள்ளியார்

அம்பிகை : மருவார் குழலி, புஷ்பாளகி, தாட்சாயிணி, சுகந்த குந்தளாம்பிகை,  சுகந்தவன நாயகி

தலமரம் : வன்னி  வில்வம்

தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 2,   திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: தாட்சாயிணிக்கு அருள் புரிந்த தலம். வீரபத்திரர் தக்ஷயாகத்திற்காக அவதரித்த பதி இதுதான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இந்திரன் இத்தலத்தில் நீராடி வழிபட்டு விருத்திராசுரனை கொல்ல 'வச்சராயுதம்' பெற்றார். அகத்தியர் வழிபட்டு புருஷார்த்தங்களைப் பெற்றார். ரதி இத்தலத்து இறைவனை வணங்கி, தன் பதியாகிய காமனை அடைந்தாள். நாககன்னியர்கள் வழிபட்டு நல்ல கணவர்களை அடைந்தனர். அகத்தியர், பிரம்மன், இந்திரன், காவிரி, சமுத்திரம், வசிட்டர், திக்பாலகர்கள் முதலியவர்களும் பூசித்த பதி. 

கோவில் அமைப்பு: கோச்செங்கட்சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் காணப்படுகிறது. கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் சுயம்பு லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக இந்திர கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை ஆகியோரைக் காணலாம், மகாமண்டபத்தில் விநாயகர், சூரிய சந்திர லிங்கங்கள், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப்பழைமையானது. அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறாள். அம்பிகைக்கு ஆலயத்தின் தென்மேற்கில் சப்தகன்னிகையர் கோயில் உள்ளது. மேற்கில் தலவிநாயகர் பிரகாசப் பிள்ளையார் உள்ளார். மற்றும் வனதுர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும் மான்மழுவேந்திய சிவபெருமான், உருத்திராக்கமாலையும் சக்தி ஆயுதம் தரித்த நான்கு கைகளையுடைய பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் முதலிய மூர்த்தங்களும் ஆலயத்தில் உள்ளன. நவக்கிரக தோஷத்திற்கு இத்தல வழிபாடு சிறந்த பரிகாரமாக இன்றும் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் துர்க்கை வழிபாடு விசேஷமானது.

கோவிலுக்கு அருகில் ஆலயத்தின் தீர்த்தம் சூரிய தீர்த்தம் உள்ளது. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் விலகும். சுவாமி அம்பாள் சந்நிதிகளிடையே உள்ள வன்னி மரமும், வடக்குச் சுற்றில் உள்ள வில்வ மரமும் இவ்வாலயத்தின் தலவிருட்சங்கள். கார்த்திகை- திங்கட்கிழமைகளில் (சோமவாரங்களில்) இத்தலத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். .இந்தப் புண்ணிய நாட்களில் செம்பனார்கோவில் வந்து, சோமவார தரிசனம் செய்து இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், திருமண பாக்கியம் முதலான அனைத்து வரங்களும் கிடைக்கும். சித்திரை 7-ம் நாள் முதல், 18-ம் நாள் முடிய சூரியஒளி சுவாமி மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்களில் சூரியவழிபாடு நடைபெறுகிறது.

தல வரலாறு: பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம் : செம்பொனார் கோயில்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×