111. திருக்கடவூர் மயானம்





	


	



























	




 




	








 




5:25:29 AM         Wednesday, April 15, 2026

111. திருக்கடவூர் மயானம்

111. திருக்கடவூர் மயானம்
111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம் 111. திருக்கடவூர் மயானம்
Product Code: 111. திருக்கடவூர் மயானம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                    பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் மயானம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்தலம் திருக்கடவூர் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் திருமெய்ஞ்ஞானம் என வழங்கப்படுகிறது.

சுவாமி : பிரமபுரீசுவரர்

அம்பிகை : மலர்க்குழல், மின்னம்மை, நிமலகுஜாம்பிகை

தலமரம் : வில்வம்

தீர்த்தம் : காசி தீர்த்தம், அசுவினி தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,   திருஞானசம்பந்தர் - 1,   சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: சிவபெருமான் பிரம்மனை நீராக்கி மீண்டும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம்.

இங்கிருந்து திருக்கடவூர் இறைவனுக்குத் திருமஞ்சனத்துக்குரிய அபிஷேக நீர் கொண்டு செல்லப்படுகிறது. சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்தில் விநாயகர், முருகர், நடராஜர், பைரவர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், கல்யாணசுந்தரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. சைவ சமயத்தில ஐந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை : காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சிபுரம்), காழி மாயனாம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடலூர் மயானம் ஆகும். மயானம் என்பது சிவன் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்று கூடி இத்தலத்தில் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயிர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்த்தில் பிரம்மாவை உயிர்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம் ஆகும்.

ஆலயத்தின் மேற்குப் பிரகாத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள்.ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர் சிவபூஜை செய்வதற்காக இக்கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம் கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. இத்தல பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர்.

இவ்வாலயம் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய வெளிப் பிரகாரம் காணலாம். நேர் எதிரே உள்ள 3 நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிரகாரத்துடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் முருகர் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக் குறடு அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.ஆலயத்தின் வெளியே பிரம்மதீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தைக் கொண்டுதான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் இளமையுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர் சிவபூஜை செய்வதற்காக கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது புராண வரலாறு.

தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : திருக்கடவூர்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×