126. திருகருவிலி கொட்டிடை





	


	



























	




 




	








 




9:26:07 AM         Thursday, June 25, 2026

126. திருகருவிலி கொட்டிடை

126. திருகருவிலி கொட்டிடை
126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை 126. திருகருவிலி கொட்டிடை
Product Code: 126. திருகருவிலி கொட்டிடை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                               சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூந்தோட்டத்திலிருந்து நாச்சியார்கோயில் செல்லும் பேருந்து சாலையில் கூந்தலூரை அடைந்து, அரிசிலாற்றுப் பாலத்தை கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவீழிமிழலைக்கு மேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலம் தற்போது கருவேலி என்று வழங்கப்படுகிறது. திருநல்லத்திற்கு அண்மையில் உள்ள தலம். கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.

சுவாமி : சற்குணநாதேசுவரர்

அம்பிகை : சர்வாங்க நாயகி

தீர்த்தம் : எம தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இறைவன் கிழக்கு நோக்கிய சந்நிதி. இந்திரன், உருத்திரகணங்களும், தேவர்களும் வழிபட்டது. இங்கு விநாயகர், முருகர், அர்த்தநாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் முதலிய சந்நிதிகள் உள்ளன. சற்குணன் என்னும் மன்னன் வழிபட்டு வீடுபேறு பெற்றார். 

கோவில் அமைப்பு:  நுழைவாயில் வழியே  ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபம் உள்ளது. அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம். இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது.

இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. "கருவிலி" என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும். இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். 

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : பூந்தோட்டம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×